[ திங்கட்கிழமை, 20 மே 2013, 02:35.41 AM GMT ]
எதிர்வரும் செப்டம்பர் மாதம் வடக்கில் மாகாணசபைத் தேர்தல் நடத்தப்படவுள்ளது. தேர்தல்களை முன்னிட்டு பிரதேச மக்களுக்கு தேசிய அடையாள அட்டைகளை வழங்க பெபரல் அமைப்பு தீர்மானித்துள்ளது.
தேசிய அடையாள அட்டைகள் இல்லாதவர்களுக்கு அடையாள அட்டைகளை விநியோகிக்கும் விசேட திட்டமொன்று முன்னெடுக்கப்பட உள்ளது.
ஆட்பதிவு திணைக்களத்துடன் இணைந்து பெபரல் அமைப்பு இந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளது.
எதிர்வரும் 1ம் திகதி முதல் நான்கு நாள் விசேட நடமாடும் சேவையொன்றின் தேசிய அடையாள அட்டை விநியோகம் செய்யப்பட உள்ளது.
பௌத்த பிக்குகள் பொறுமையுடன் செயற்பட வேண்டும்!- பிரதமர்
[ திங்கட்கிழமை, 20 மே 2013, 02:25.24 AM GMT ]
சிலர் வேற்று மதங்களுடன் மோதல்களை ஏற்படுத்திக் கொள்ள முயற்சிக்கின்றனர். இதனால் நட்டின் பெரும்பான்மை இனத்திற்கு அதிக அழிவு ஏற்படும்.
இதனை பௌத்த மாநாயக்கத் தேரர்கள் புரிந்து கொள்ள வேண்டும். பௌத்த மதத் தலைர்கள் பொறுமையுடனும், புத்திசாலித்தனமாகவும் செயற்பட வேண்டும்.
மக்களின் மனதுகளை வென்றெடுக்கக் கூடிய மதத் தலைவர்கள் இல்லையென்றால், எத்தனை பெரிய விஹாரைகள் அமைத்தாலும் அதில் பயன் கிடையாது என பிரதமர் தெரிவித்துள்ளார்.
களனியில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
Geen opmerkingen:
Een reactie posten