தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 20 mei 2013

கனடாவின் நடவடிக்கைகள் குறித்து உன்னிப்பாக கண்காணிக்கப்படும்: இலங்கை


அமைதியான போராட்டங்களுக்கு இடமளிக்க வேண்டும்: சட்டத்தரணிகள் சங்கம்- நிச்சயமாக போராட்டம் நடத்தப்படும்: ஜேவிபி
[ திங்கட்கிழமை, 20 மே 2013, 02:41.12 AM GMT ]
அமைதியான போராட்டங்களுக்கு இடமளிக்கப்பட வேண்டுமென இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
மின்சாரக் கட்டண உயர்விற்கு எதிராக பொதுமக்களும், தொழிற்சங்கங்களும் போராட்டங்களில் ஈடுபடவுள்ளன.
போராட்டத்தில் ஈடுபடுவோர் நீதியான வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் எனவும் கருத்து மற்றும் பேச்சு சுதந்திரத்திற்கு இடமளிக்கப்பட வேண்டுமெனவும் கோரப்பட்டுள்ளது.
மின்சாரக் கட்டண அதிகரிப்பு எதிராக நாளை பாரியளவு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட உள்ளது.
மின்சாரக் கட்டண உயர்வானது மக்கள் பிரச்சினை என்பதனால், மக்கள் அமைதியான முறையில் தங்களது கருத்துக்களை வெளியிட அனுமதியளிக்கப்பட வேண்டும்.
அரசியல் அமைப்பின் பிரகாரம் அமைதியான முறையில் போராட்டம் நடத்த இடமளிக்கப்பட வேண்டுமென சட்டத்தரணிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
நிச்சயமாக போராட்டம் நடத்தப்படும்!- லால்காந்த
நிச்சயமாக நாளை போராட்டம் நடத்தப்படும் என ஜே.வி.பி.யின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.டி.லால்காந்த தெரிவித்துள்ளார்.
எவ்வாறான தடைகள், எதிர்ப்பு வந்தாலும் அதிகரிக்கப்பட்ட மின்சாரக் கட்டணத்தை குறைக்குமாறு கோரி போராட்டம் நடத்தப்படும். இந்த போராட்டத்திற்கு ஒரு தரப்பு ஆதரவளிக்கின்றனர், மற்றுமொரு தரப்பினர் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
இது சாதாரணமான விடயமாகும். பெரும்பான்மையானவர்கள் போராட்டத்திற்கு ஆதரவை வெளியிட்டுள்ளனர்.
மின்சாரக் கட்டண உயர்விற்கு எதிராக பாரியளவில் போராட்டங்கள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் என கே.டி.லால்காந்த தெரிவித்துள்ளார்.

கனடாவின் நடவடிக்கைகள் குறித்து உன்னிப்பாக கண்காணிக்கப்படும்: இலங்கை
[ திங்கட்கிழமை, 20 மே 2013, 04:06.33 AM GMT ]
இலங்கையில் இடம்பெறவுள்ள பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகளை தடுத்து நிறுத்தும் நோக்கில் கனடா நடவடிக்கைகளை மேற்கொள்கின்றதா என்பது குறித்து கவனிக்கப்பட உள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
இலங்கையில் பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகள் நடத்தப்படுவது குறித்து கனடாவும் பஹாமாஸூம் அண்மையில் நடாத்திய பேச்சுவார்த்தைகள் குறித்த தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளது.
நாட்டின் உண்மையான நிலைமைகள் குறித்து அந்தந்த நாடுகளுக்கு தெளிவுபடுத்துமாறு வெளிநாடுகளுக்கான இலங்கைத் தூதுரக அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

Geen opmerkingen:

Een reactie posten