தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 20 mei 2013

பிரதமரே இலங்கை செல்லாதீர்கள்! முழங்கிய லண்டன் பேரணி


பட்டம் பதவிகளுக்காக முஸ்லிம் சமூகத்தை காட்டிக் கொடுக்கமாட்டேன்!- எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா
[ ஞாயிற்றுக்கிழமை, 19 மே 2013, 05:47.19 PM GMT ]
பட்டம் பதவிகளுக்காக முஸ்லிம் சமூகத்தை காட்டிக்கொடுத்து செயற்படமாட்டேன். அமைச்சுப் பதவிகளை தூக்கி எறியும் சந்தர்ப்பம் வந்தால் அதையும் செய்ய தவறமாட்டேன் என பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா தெரிவித்தார்.
காத்தான்குடியில் கடந்த வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இந்த நாட்டு முஸ்லிம்கள் பல்வேறு பட்ட பிரச்சினைகளுக்கும் பல சவால்களுக்கும் முகம் கொடுத்து வருகின்றன. இந்த நிலையில் முஸ்லிம் சமூகம் பொறுமையுடனும் நிதானத்துடனும் செயற்பட வேண்டும்.
முஸ்லிம் சமூகத்தை நிதானத்துடன் வழி நடத்த வேண்டிய பொறுப்பு முஸ்லிம் அரசியல் தலைவர்கள், சமூக சமய தலைவர்களுக்கு உண்டு.முஸ்லிம்களுக்கு கடந்த காலங்களில் ஏற்பட்ட பிரச்சினைகளை விட அதிகமான பிரச்சினைகள் எதிர்காலத்தில் வரலாம் பாரிய சவால்கள் ஏற்படலாம். எந்த பிரச்சினை வந்த போதும் நாம் பொறுமையாகவும் நிதானத்துடனும் நடந்து கொள்ள வேண்டும்.
'நமது இன்னுமொரு சமூகம் கடந்த முப்பது வருடங்கள் போராடி அழிவைத்தான் பெற்றுக்கொண்டது என்ற வரலாற்றுப் பாடத்தை நாம் பார்க்க வேண்டும்.
ஜனநாயக ரீதியாகவும் ஆயுத ரீதியாகவும் போராடிய அந்த சமூகத்தின் இறதி பெறுபேறு பூஜ்யத்தில்தான் முடிந்துளளது என்பதை நாம் பாக்த்து தெரிந்து கொள்ள வேண்டும்.
இந்த நாட்டு முஸ்லிம்கள் வடக்கு கிழக்கிலும் வடக்கு கிழக்குக்கு வெளியேயும் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வருகின்றனர். வடக்கிலே இடம் பெயர்ந்த முஸ்லிம்கள் தமது சொந்த நிலங்களில் குடியேற முயடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
1990ஆம் ஆண்டு வடக்கில் ஒரு கிராமத்திலிருந்து மாத்திரம் 300 முஸ்லிம் குடும்பங்கள் இடம் பெயர்ந்திருந்திருந்தால் இன்று அது 500 குடும்பங்களாக வளர்ச்சியடைந்துள்ளன.
இந்த குடும்பங்கள் தமது சொந்த நிலத்தில் சொந்த இடங்களில் குடியேற முடியாதளவுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பும் வடக்கிலுள்ள தமிழ் நிருவாக அதிகாரிகளும் தடுக்கின்றனர்.
முஸ்லிம்களை அவர்களின் சொந்த நிலங்களில் குடியேற்ற சென்றால் தமிழர்களின் காணிகளை சுவீகரிக்க வருகின்றனர் எனக் கூறி சத்தியாக்கிரகங்களை நடத்துகின்றனர்.
'வடக்கில் வசதியுடன் வாழ்ந்த முஸ்லிம்கள் இடம் பெயர்ந்து இன்று மீளக்குடியமரும் போது பல்வேறு பட்ட சவால்களுக்கும் பிரச்சினைகளுக்கும் முகம் கொத்து வருகின்றனர்.
குடிப்பதற்கு குடி நீர் கிணறுகளை அமைத்து தாருங்கள் என்று கேட்கின்றனர். ஆடு மாடுகள் கூட வாழ முடியாத குடிசைகளில் இன்று அவர்கள் வடக்கிலே வாழ்ந்து வருகின்றனர்.
முஸ்லிம்களுக்கு பாதகம் ஏற்படுமானால் முஸ்லிம் அமைச்சுப் பதவிகளை தூக்கியெறியவும் முஸ்லிம் அமைச்சர்கள் ஆயத்தமாக உள்ளனர். அமைச்சுப் பதவிகளை அரவணைத்துக் கொண்டு இருக்க வேண்டுமென யாரும் விரும்பவில்லை.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசையும் சிலர் விமர்சிக்கின்றனர். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசும் இந்த அரசாங்கத்துடன் இணைந்து முஸ்லிம்களின் விடயத்தில் அனைவருடனும் ஒன்று பட்டு பொறுப்புடன் செயற்பட்டு வருகின்றது.
நாம் பௌத்த அரசாங்கத்தின் கீழ் இருக்கின்றோம் எதையும் பேசியே தீர்க்கவேண்டும். எந்த பிரச்சினை வந்தாலும் அவற்றை ஜனாதிபதியுடன் சம்பந்தப்பட்ட தரப்புடன் பேசியே தீர்த்துக்கொள்ள வேண்டும். மாறாக உனர்ச்சிகளை தூண்டி அறிக்கைகளை விட்ட எதையும் சாதிக்கமுடியாது என தெரிவித்தார்.

பிரதமரே இலங்கை செல்லாதீர்கள்! முழங்கிய லண்டன் பேரணி
[ ஞாயிற்றுக்கிழமை, 19 மே 2013, 06:31.49 PM GMT ]
பிரதமர் கமரூன் அவர்களே இலங்கை செல்ல வேண்டாம், இலங்கையே இனப்படுகொலையை நிறுத்து என லண்டன் வீதிகளில் திரண்ட பல்லாயிரக் கணக்கான மக்கள் முழங்கினார்கள்.
முள்ளிவாய்க்க்கால் பேரவலத்தின் 4வது ஆண்டு நினைவுப் பேரணி நேற்று லண்டனில் பிரித்தானிய தமிழர் பேரவையின் ஒருங்கிணைப்பில் நடைபெற்றது.
எமது உறவுகள் பசியோடும் வலியோடும் வாழ்ந்து மடிந்த அந்த 2009ம் ஆண்டு காலப்பகுதியை நினைவு கூறுமுகமாக மே18ம் நாள் நிகழ்வுகள் அமைகின்றன.
நேற்று பி.ப 1 மணிக்கு North Carriage Park, Hyde Park ல் ஆரம்பித்த பேரணி பி.ப 6 மணியளவில் Waterloo Place ல் நிறைவுபெற்றது. இதனைத் தொடர்ந்து முக்கிய பிரமுகர்கள் உரையாற்றினார்கள்.
பொதுநலவாய நாடுகளின் மாநாட்டிற்கு பிரித்தானிய பிரதமர் தாம் செல்லவுள்ளதாக அறிவித்துள்ள பின்னணியில் நாம் அனைவரும் இணைந்து பிரித்தானிய பிரதமர் அலுவலகத்துக்கு ஜனநாயக முறையில் ஓர் காத்திரமான செய்தியை சொல்ல வேண்டியுள்ள சூழலில் இப்பேரணிக்கான அழைப்பை பிரித்தானிய தமிழர் பேரவை விடுத்திருந்தது.
நீண்ட பேரணி 4 மணியளவில் Waterloo Place எனும் இடத்துக்கு வந்தடைந்தது அதனைத் தொடர்ந்து அக வணக்கத்தோடு அரங்க நிகழ்வுகள் ஆரம்பமானது.
பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றிய பிரமுகர்களின் கருத்துக்களின் ஒரு பார்வையை கீழே காணலாம்
திரு லீ ஸ்கொட் – பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்
தமிழர்களுக்கான பிரித்தனிய பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவின் தலைவரான லீ ஸ்கொட் அவர்கள் நீண்ட காலமாக தமிழர்களுக்காக குரல் கொடுத்து வருகின்றார். பேச்சு உரிமையற்ற மக்களுக்காக நான் தொடர்ந்து போராடுவேன் எனக் கூறிய லீ ஸ்கொட், பிரித்தானிய பிரதமரிடம் இலங்கையில் நடைபெறும் பொதுநலவாய நாடுகளின் மாநாட்டை புறக்கணிக்குமாறு தொடர்ந்தும் வற்புறுத்துவேன் என கூறினார்.
ரொஜர் இவன்ஸ் – லண்டன் மாநகர சபை உறுப்பினர்
லண்டன் மாநகர சபை உறுப்பினரான ரொஜர் இவன்ஸ் அவர்கள் லண்டன் மேயரின் செய்தியினை படித்தார். லண்டனில் வாழும் தமிழ் மக்கள் லண்டனுக்கு ஆற்றும் பணிகளுக்கு லண்டன் மேயர் நன்றி கூறினார் , மேலும் பேசிய ரொஜர் இவன்ஸ் அவர்கள் உலகில் நடந்த மற்றைய இனப்படுகொலைகள் குறித்தும் பேசினார்.
சிவோன் மக்டொனால்ட் – பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்
தமிழர்களின் நீண்ட நாள் நண்பராகிய பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் சிவோன் மக்டொனால்ட் அம்மையார் பேரணியின் முடிவில் பேசினார். பேரணிகளை நடாத்துவதோடு நின்றுவிடாமல் நீங்கள் ஒவ்வொருவரும் உங்களது தொகுதி பராளுமன்ற உறுப்பினரை சந்தித்து, இலங்கைக்கு பிரதமர் செல்ல உள்ளதற்கு உங்கள் அதிருப்தியை வெளியிடுமாறு கேட்டுக் கொண்டார். அவ்வாறான அழுத்தித்தின் மூலம் பிரதமரின் முடிவை மாற்றும் சந்தர்ப்பங்கள் உள்ளதாக கூறினார்.
சைமன் கியூஸ் – பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்
பிரித்தானிய பிரதமரின் உத்தேச இலங்கை விஜயத்தை தமது லிபரல் கட்சியில் பெரும்பான்மையினர் ஏற்று கொள்ளவில்லை எனக் கூறிய சைமன் அவர்கள் இது ஒரு தவறான முடிவு எனக் கூறினார்.
தா. பாண்டியன் – இந்திய கமியூனிஸ்ட் கட்சி மாநில செயலர்
தா பாண்டியன் ஐயா அவர்கள் பேரணியில் எழுச்சிப் பேருரை ஆற்றினார். முள்ளிவாய்க்காலில் மக்கள் பட்ட அவலத்தை மீண்டும் ஒரு முறை நினைவு கூர்ந்த தா பாண்டியன் அவர்கள், தமிழகத்தை பொறுத்தவரையில் முன்னெப்போதும் இல்லாத அளவு விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதை சுட்டிக் காட்டினார்கள், வரும் தேர்தலில் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவான ஆட்சி டெல்லியில் அமையும் எனவும் நம்பிக்கை வெளியிட்டார்.
வைகோ – மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக செயலர்
திரு வைகோ அவர்கள் காணொளி முலம் எழுச்சிப் பேருரை ஆற்றினார். பொதுநாவாய நாடுகளின் மாநாட்டிர்கு பிரித்தானிய பிரதமர் கலந்து கொள்ளக் கூடாது எனக் கூறிய வைகோ அவர்கள் , இவ்வாறான மாபெரும் பேரணியில் எனது உணர்வுகளை பதிவு செய்ய இடமளித்த பிரித்தானிய தமிழர் பேரவைக்கு நன்றிகளை தெரிவித்தார்.
திரு.பழ நெடுமாறன் ஐயா அவர்கள்
தமிழகத்திலிருந்து காணொளி மூலம் பேசிய பழ நெடுமாறன் அவர்கள் தொடரும் இன அழிப்பு குறித்து விரிவாகப் பேசினார் , பூமிப்பந்தில் வாழும் அனைத்து தமிழரும் இணைந்து ஈழத்தில் தொடர்ந்தும் அழிக்கப்படும் எமது இனத்தை காப்பாற்ற போராட வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.
செல்வி. திவ்யா – தமிழீழ விடுதலைக்கான தமிழக மாணவர் கூட்டமைப்பு
தமிழக மாணவர் போராட்டங்களை தலைமைதாங்கும் மாணவர்களில் ஒருவரான செல்வி திவ்யா அவர்கள் காணொளி மூலம் பேரணியில் பேசினார்.
தமிழக மாணவர்களின் தலைவர்களை காணொளி மூலம் கண்ட பேரணியில் கலந்து கொண்டவர்கள் உற்சாகமடைந்தனர் தமிழகம் பூராகவும் மேலும் விழிப்புணர்வை ஊட்டி இலங்கையை விளையாட்டு துறையில் , கலாச்சார ரீதியில் , பொருளாதார ரீதியில் , சுற்றுலாத்துறையில் புறக்கணிக்க தூண்டும் தமது செயற்பாடுகளை விபரித்து கூறினார்., திவ்யா அவர்களுக்கு பெருத்த கரகோசம் மூலம் மக்கள் நன்றி தெரிவித்தனர்.
கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன – லங்கா சம சமாயய கட்சி
காணொளி மூலம் தமது கருத்துக்களை பதிவு செய்த கலாநிதி விக்கிரமபாகு அவர்கள் தாம் நீதிக்காக போராடும் தமிழர்களோடு உடனிருப்போன் என உறுதி கூறினார்.
சிறீதரன் – தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்
தற்போதை நிலையிலும் ஈழத்தில் தொடரும் கட்டம் கட்டமாக நடக்கும் இன அழிப்பை பட்டியலிட்டார். மாவட்டம் தோறும் பறிக்கப்படும் நிலங்களின் விபரங்களை கூறிய திரு சிறீதரன் அவர்கள் இவற்றை தடுத்து நிறுத்த அனைவரும் இணைந்து போராட வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.
வணக்கத்துக்குரிய இமானுவேல் அடிகளார். – தலைவர் உலகத் தமிழர் பேரவை
தமிழர்களின் வரலாற்றை ஒரு முறை மீட்டுப் பேசிய அருட்தந்தை இமானுவேல் அவர்கள் தமிழர்கள் தமக்கான நண்பர்களை பெற்றுக் கொள்வதற்காக கடுமையாக உழைக்க வேண்டுமெனக் கேட்டுக் கொண்டார்.
திரு ரவி – பிரித்தானிய தமிழர் பேரவை பொதுச் செயலாளர்
பிரித்தானிய தமிழர் பேரவையின் அழைப்பை ஏற்று பேரணிக்கு வருகை தந்த பல்லாயிரக்கணக்கான எமது உறவுகளுக்கு நன்றி தெரிவித்தார் திரு ரவி அவர்கள். தொடர்ந்து பேசுகையில் , “2009க்குப் பின் தமிழ் சிங்கள தேசிய இன முரண்பாட்டின் வலுச் சமநிலை சிங்களதேசத்தின் பக்கம் மாறியது உண்மை. இதுவே சிறீலங்கா அரசு தங்கு தடையற்ற அடக்குமுறையை தமிழ் மக்கள் மேல் பிரயோகிக்கக் காரணமாக அமைந்தது. இந்த நேரத்தில் உலகெங்கினும் உள்ளதமிழ் மக்கள் எடுத்த சனநாயக ரீதியிலான அரசியல் ராஜதந்திர முன்னெடுப்புக்கள்உலகின் அரங்குகளில் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளன. எமது இம்முயற்சிகள்எம் தேசத்தின் நேச சக்திகளை வென்றெடுத்து வருவதுடன் எம்எதிரிகளையும் அம்பலப்படுத்தியுள்ளன.
எம் போராட்டத்தினை சிதைப்பதற்கும், பிளவுகளைத் தூண்டுவதற்கும் வியூகம்வகுத்துள்ள இவ்வெதிரிகளின் பொறிக்குள் நாம் சிக்குப்பட்டு சிதைந்து போகாமல்அவதானமாக எம்மிலட்சியப் போராட்டத்தை முன்னெடுப்பது மிக அவசியம்.
அத்துடன் காலத்தை இழுத்தடித்தால் தமிழ் மக்கள் மற்றும் போராடும் அமைப்புக்கள்சிதைந்து போவார்கள், தமிழர் தேசத்தின் நிலப் பறிப்பு மற்றும் சிங்களக்குடியேற்றங்களின் மூலம் குடிசனப் பரம்பலை தமக்குச் சாதகமாக மாற்றியமைக்கலாம்என்று கணக்கிட்டு சிங்கள தேசம் காய்களை நகர்த்துகின்றது. இன அழிப்பைத் தடுத்துநிறுத்த சர்வதேச சமூகம் தலையிட்டு எம் மக்களின் விருப்பத்தைக் கேட்டறிந்து சரியான அரசியல் தீர்விற்குவழி வகுக்க வேண்டுமென்று தொடர்ச்சியாக அழுத்தம் கொடுப்போம்.
மிக மெதுவாக நகரும் இந்த வழிமுறை எம் மக்களை பொறுமையிழந்துசோர்வடைந்து இந்த நடவடிக்கைகளில் இருந்து ஒதுங்க வைக்குமென எமது எதிரிகாத்திருக்கிறான். நாம் நீண்ட நெடிய போராட்டத்திற்கு மனதளவில் தயாராக வேண்டும்.
தமிழீழம் எமது மண். எமது மக்களின் வாழ்வும் பாதுகாப்பும் சிறீலங்கா இனவாதஇனவழிப்பு அரசின் ஆக்கிரமிப்பிலிருந்து நாம் விடுதலை பெறும் போதுதான் உறுதிபெறும். விடுதலை வேட்கையுள்ள எந்தவொரு மனித இனமும் ஆக்கிரமிப்பாளர்களின் அடக்குமுறைக்கு நீண்டநாள் அடிபணிந்து போகமாட்டா.
எம்மிடமுள்ள மக்கள் சக்தியை மேலும் பலப்படுத்தி மக்கள் போராட்டத்தினூடாக உலகின்முக்கியமான அரங்குகளுக்கு எமது நியாயத்தை நாம் எடுத்துச் செல்வோம். அத்துடன்"இலங்கையைப் புறக்கணிப்போம்", "பொருளாதாரத்தடை" போன்ற செயற்பாடுகளினூடக சிறிலங்காவினை தனிமைப்படுத்துவோம் தமிழ்நாட்டின் ஆதரவு, மாணவரின் எழுச்சி என்பன நீதிக்கான எம் பயணத்தில் ஒரு பெரும்திருப்புமுனை. அவை எம் விடுதலைப்போராட்டத்துக்கு புதிய உத்வேகத்தை தருகின்றன.
ஒவ்வொரு தமிழனுக்கும் இவ்விடுதலைப் போராட்டத்தில் ஒரு பங்குண்டு. “விடுதலைபோராட்டத்தில் எனது பங்கை நான் ஆற்றுவேன். என் நாடும் என் மக்களும்விடுதலை பெறும் வரை நான் ஓயமாட்டேன்” என அந்த உயிர்களின் மேல் நாம் ஒருசத்தியம் செய்வோம். ‘ என பிரித்தானிய தமிழர் பேரவை சார்பாக கருத்துக்களை பதிவு செய்தார்.
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற பெரு முழக்கத்தோடு பேரணி நிறைவு பெற்றது.

Geen opmerkingen:

Een reactie posten