தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 19 mei 2013

மட்டக்களப்பில் அநீதியான முறையில் திட்டமிட்ட குடியேற்றங்களை ஊக்குவிப்பதைத் தடுத்து நிறுத்தவும்!- இரா.துரைரெட்ணம்!


பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு வீடுகளை வழங்காது திட்ட மிட்ட குடியேற்றங்களை அநீதியான முறையில் ஊக்குவிப்பதை தடுத்து நிறுத்துமாறு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா.துரைரெட்ணம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மட்டக்களப்பில் நடைபெற்று வரும் குடியேற்றங்கள் தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றியேலே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவை உள்ளடக்கிய கச்சைக்கொடி கிராம சேவையாளர் பிரிவு 135-சி பிரிவிலுள்ள 19ம்கட்டைக்கும், 21ம்கட்டைக்கும் இடையில் உள்ளபுளுக்குனாவ கிராமத்தின் 500மீற்றர் அகலமும், 3 கிலோமீற்றர் நீளமும் கொண்ட பிரதான வீதி இருமருங்கிலும் சிங்களக் குடும்பங்கள் ஒருசில மதகுருமார்களால் சிலவருடகாலமாக குடியேற்றப்படு வருகின்றனர்.
இவ்வாறு குடியேற்றப்பட்டுள்ள குடும்பங்களின் தொகை 90ற்கு மேற்பட்டவையாகும். இம்மக்களுக்கு, கிராம சேவையாளர், பிரதேச செயலாளர் அனுமதி இன்றி மதகுருமார்களால் 100.000 ரூபா பெறுமதியான 75 வீடுகள் வழங்கப்பட்டு 15 வீடுகள் முடியும் தருவாயில் உள்ளன ஏனைய வீடுகளுக்கான ஆரம்ப வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
மேலும் இரு பகுதிகளில் இரு விகாரைகளும் அமைக்கப்பட்டுள்ளன.1987 ஆண்டு காலப் பகுதியில் இப்பிரதேசத்தில் சுமார் 12 குடும்பங்கள் யுத்தம் காரணமாக இடம் பெயர்ந்து மீண்டும் 2009ம் ஆண்டு காலப்பகுதியில் மீளக்குடியமர்த்தப்பட்டனர் .
இவர்களுடன் சேர்ந்து குறிப்பாக, உகன, பியங்கல, நுகேலந்த, அம்பாறை, மகாஒயா, 36ம்கொலணி போன்ற கிராமங்களைச் சேர்ந்த 90 குடும்பங்கள் புதிதாக குடியேற்றப்பட்டுள்ளனர்.
இது தமிழர் தாயகப்பகுதியில் அவர்கள் குடிப்பரம்பலை குறைப்பதற்கு சிங்கள அரசு திட்டமிட்டு மேற்கொள்ளும் ஒரு இனவாதகுடியேற்ற முயற்சியாகும் இத்திட்டத்திற்கு நிர்வாக நடைமுறைக்கு முரணான வகையில் பிரதேச செயலாளர் கிராம சேவையாளர் அனுமதி இன்றி வீடுகட்டுவதற்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இத்தகைய செயல்கள் நீதிக்குப் புறம்பானது இத்திட்டமிட்ட குடியேற்றங்கள் உடன் தடுத்து நிறுத்தப்படல் வேண்டும்.
மேலும் இந்திய அரசு வழங்கும் வீட்டுத்திட்ட உதவியும் இவர்களுக்கு வழங்கப்படப் போவதாக அறியக்கிடக்கின்றது. மட்டக்களப்பு மாவட்டத்தில் யுத்தம் காரணமாக அதிக பாதிப்பை சந்தித்தவர்கள் இங்கு பெரும்பான்மையாக வாழும் தமிழர்களே.
இத்தகைய சூழலில் யுத்தத்தால் உண்மையில் பாதிக்கப்பட்ட தமழ் மக்கள் இருக்கும்போது தங்கள் சுய அரசியல் இலாபம் கருதி நீதிக்கு முரணான வகையில் அதிகாரத்தை துஸ்பிரயோகம் செய்து அநீதியான வகையில் வீடுகளை சமமாக பங்கீடு செய்வது எந்தவிதத்திலும் நியாயமானதொன்றல்ல.
யுத்தத்தின் பின்னரான மீள்குடியேற்றம் இயல்பு வாழ்கை இவற்றை ஏற்படுத்துவது ஒரு நியாயமான செயல்பாடாக கருதினால் யுத்தின்காரமாக அதிக வீடுகளையும் உடமைகளையும் இழந்த அவலங்களைச் சுமந்து நிற்கின்ற தமிழ் மக்களுக்கே அதிகளவில் முன்னுரிமை அளிக்க வேண்டும் தமிழ் பகுதியை பொறுத்தமட்டில் வன்னி பிரதேசத்தில் இருந்தும் இந்தியாவில் இருந்தும் வந்த குடும்பங்களும் இங்கு யுத்தத்தால் பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்த பல்லாயிரக்கணக்கான தமிழ் குடும்பங்களும் அதிகமான நிலையில் உள்ளபோது இனவிகிதாசாரம் பார்ப்பதென்பது தமிழ் மக்களுக்கு செய்யும் அநீதி ஆகும்.
பாரபட்சமற்ற முறையில் பாதிக்கப்பட்டவர்களுக்கே அதிகளவில் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் இதில் விகிதாசாரம் என்ற பேச்சிற்கு இடமே இல்லை.
இதுதொடர்பாக ஒருசில அதிகாரிகள் தங்களுக்கு எதுவும் தெரியாது என கையை விரிப்பது நியாயமானது அல்ல.
ஆளும் அரிசியல் தரப்பினர் தங்கள் அரசியல் சுயலாபம் கருதி தமிழ் மக்களுக்கு இவ்விடயங்களில் துரோகம் இழைக்க அப்பட்டமாகவே முற்படுகின்றனர். எனவே பாதிப்புக்கு உள்ளன எம் மக்கள் இதில் மிக விழிப்பாக இருக்கும் படி கேட்டுக்கொள்கின்றேன்.

Geen opmerkingen:

Een reactie posten