தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 3 mei 2013

இலங்கை ஊடக சுதந்திரம் குறித்து மற்றுமொரு அமெரிக்க நிறுவனம் அதிருப்தி!


சர்வதேச ஊடக சுதந்திர தினம் இன்று
[ வெள்ளிக்கிழமை, 03 மே 2013, 12:41.27 AM GMT ]
இலங்கையின் வடபுலத்தில் ஊடகங்கள் மீது மீண்டும் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள வன்முறைகள், சுந்திரமான ஊடகப் பணிகளை கேள்விக் குறியாக்கியுள்ளது.
குறிப்பாக இவ்வாண்டின் முதல் மூன்று மாத காலப்பகுதியினுள் மட்டும் இடம்பெற்ற வெவ்வேறு சம்பவங்களில் ஊடகவியலாள் இருவர் கொலை முயற்சிக்குள்ளாகியிருக்கின்றார்.
மூன்று வெவ்வேறான சம்பவங்களில் ஊடகப் பணியாளர்கள் ஜவர் தாக்கப்பட்டுள்ளனர். ஊடக நிறுவனமொன்றின் அச்சுயந்திரம் தீயிடப்பட்டுள்ளது.
அதேபோன்று மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட சம்பவங்களில் விநியோகத்திற்கென எடுத்துச் செல்லப்பட்ட நாளிதழ்களின் பிரதிகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.
யுத்தம் முடிவுற்றுதாக இலங்கை அரசு அறிவிப்பை விடுத்திருந்த 2009ம் ஆண்டின் நடுப்பகுதியின் பின்னராக ஊடகங்கள் மீதான வன்முறைகள் ஓரளவிற்கேனும் ஓய்ந்து போகுமென்ற எதிர்பார்ப்பு ஊடகவியலாளர்களிடையே காணப்பட்டது.
ஆனாலும் எதிர்பார்ப்புகளுக்கப்பால் இப்போது பிரதான இலக்குகளாக ஊடகவியலாளர்களும், ஊடக நிறுவனங்களுமே முன்னிறுத்தப்படுகின்றமை பரிதாபகரமானதொன்றே.
இலங்கை முழுவதுமாகவே ஊடகங்கள் மீதான நெருக்குவாரங்கள் தற்போதும் முனைப்புப் பெற்றேயுள்ளது. இலங்கை அரசு விடுவித்து விட்டதாகக் கூறிக்கொள்ளும், வன்னியில் ஊடகவியலாளர்களுக்கான கதவுகள் இழுத்து மூடப்பட்டேயுள்ளது.
அது உள்ளுர் ஊடகவியலாளர்களை விட, சர்வதேச ஊடகவியலாளர்களுக்கு மிகவும் கடினமாக்கப்பட்டுள்ளது.
யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுவிட்டதாக அறிவிக்கப்பட்டு நான்கு ஆண்டுகள் பூர்த்தியாகும், சூழலில் கூட அந்நிலையில் மாற்றமின்றியே இருக்கின்றது.
வடக்கில் தொடரும் ஊடகவியலாளர்கள் மீதும், ஊடக நிறுவனங்கள் மீதுமாக தாக்குதல்களின் சூத்திரதாரிகள் எவரும் இதுவரை கண்டுபிடிக்கப்படவோ, தண்டிக்கப்படவோ இல்லை.
இவ்வாறு குற்றவாளிகள் தண்டிக்கப்படாமையும், தொடரும் தாக்குதல்களிற்கான காரணங்களில் முதன்மையானதாக இருக்கலாம்.
கடந்த இரண்டு தசாப்த காலமாக தொடரும், ஊடக அடக்குமுறைமைகளால் பல ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். சிலர் காணாமல் போயிருக்கின்றார்கள்.
இன்றும் பலர் ஊடகப் பணியிலிருந்து விலகியோ, நாட்டைவிட்டு வெளியேறியோவுள்ளனர். அவர்களுள் காணமல் போன ஊடகவியலாளர்களது நிலை இன்று வரை மர்மங்கள் நிறைந்ததாக இருந்து வருகின்றது.
இன்றைய சர்வதேச ஊடக சுதந்திர தினத்தினில், நெருக்கடிகள் மத்தியிலும் யாழ்ப்பாணத்திலிருந்து பணியாற்றிக் கொண்டிருக்கும் ஊடகவியலாளர்களது கூட்டிணைவான யாழ்.ஊடக அமையம் (Jaffna Press Club) சர்வதேச சமூகத்திடமும், இலங்கை அரசிடமும் பின்வரும் கோரிக்கைகளை முன்வைக்கின்றது.
1. ஊடகவியலாளர்கள் சுதந்திரமாக ஊடகப்பணிகளை ஆற்றுவதற்கான புறச்சூழல் ஏற்படுத்தப்படவேண்டும்.
2. ஊடகவியலாளர்கள், ஊடகப்பணியாளர்கள் மற்றும் ஊடக நிறுவனங்கள் மீதான தாக்குதலின் சூத்திரதாரிகள் சட்டத்தின் முன்னால் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்படவேண்டும்.
3. காணமல் போன ஊடகவியலாளர்களது நிலை பற்றிய தகவல்கள் வெளிப்படுத்தப்படவேண்டும்.
4. கொல்லப்பட்ட, காயம் விளைவிக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கும் ஊடகப்பணியாளர்களுக்கும் உரிய நஷ்ட ஈடுகள் வழங்கப்படவேண்டும். காணாமல் போன ஊடகவியலாளர்களது குடும்பங்கள் பாதுகாக்கப்பட வேண்டும்.
5. அச்சுறுத்தல்கள் காரணமாக நாட்டைவிட்டு புலம்பெயர்ந்துள்ள, ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடகப்பணியாளர்களை அடைக்கலம் புகுந்துள்ள நாடுகள் பாதுகாக்க வேண்டும்.


தலைவர் செயலாளர்
யாழ்.ஊடக அமையம் யாழ்.ஊடக அமையம்
இலங்கை ஊடக சுதந்திரம் குறித்து மற்றுமொரு அமெரிக்க நிறுவனம் அதிருப்தி
[ வெள்ளிக்கிழமை, 03 மே 2013, 02:21.58 AM GMT ]
அமெரிக்காவை தளமாக கொண்டு இயங்கும் சுதந்திர ஊடகவியலாளர் பாதுகாப்பு அமைப்பு தாம் வெளியிட்டுள்ள தண்டனை வழங்கப்பட வேண்டிய நாடுகளின் பட்டியலில் இலங்கையையும் உள்ளடக்கியுள்ளது.
ஊடகவியலாளர்கள் சுதந்திர மற்றும்,  ஊடகவியாலர்களை அச்சுறுத்துபவர்கள் சுதந்திரமாகவும் வாழ்வதற்கான சூழலேயே இலங்கையில் காணப்படுவதாக தெரிவித்து இலங்கையை இந்த பட்டியலில் இணைந்துள்ளது.
இலங்கையில் ஊடகவியலாளர்கள் கொலை செய்யப்படும் எண்ணிக்கை தற்போது குறைவடைந்துள்ளது.
எனினும் கடந்த காலங்களில் ஏற்பட்ட இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ தலைமையிலான அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க தவறிவிட்டதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
இவ்வாறு கடந்த கால சம்பவங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாக இருந்தால், அது ஆட்சியில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று அரசாங்கம் அஞ்சிவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை உள்ளிட்ட மேலும் 12 நாடுகள் இந்த பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.


Geen opmerkingen:

Een reactie posten