தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 3 mei 2013

இலங்கையுடன் முரண்பாடுகள் ஏற்படத்தான் செய்கின்றன!- அசோக் கே காந்தா!


கமலேஸ் சர்மாவிற்கும் இலங்கை மனித உரிமை ஆணைக்குழு பிரதிநிதிளுக்கும் இடையில் சந்திப்பு
[ வெள்ளிக்கிழமை, 03 மே 2013, 02:17.34 AM GMT ]
பொதுநலவாய நாடுகள் அமைப்பின் பொது செயலாளர் கமலேஸ் சர்மா நேற்று இலங்கையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிரதிநிதிகளை சந்தித்துள்ளார்.
லண்டனில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
பொதுநலவாய நாடுகள் அமைப்பின் அழைப்பின் பேரில், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் நீதிபதி பிரியந்த ஆர்.பி.பெரேரா மற்றும் ஆணையாளர் பிரதீபா மஹாநாமஹேவா ஆகியோரின் தலைமையில் இந்த குழு லண்டன் சென்றுள்ளது.
நேற்றைய தினம் இடம்பெற்ற இந்த சந்திப்பின் போது, இலங்கையின் மீள்குடியேற்றம் மற்றும் மறுசீரமைப்பு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பிலும் மும்மொழி கொள்கை தொடர்பிலும் கமலேஸ் சர்மா கலந்துரையாடியதாக தெரிவிக்கப்படுகிறது.
முறையான மறுசீரமைப்பு நடவடிக்கைகளின் போது இலங்கை எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் குறித்தும் இதன் போது பேசப்பட்டுள்ளது.
அத்துடன் இங்கையின் மனித உரிமைகள் ஆணைக்குழு மேற்கொள்ள வேண்டிய இலக்குகள் தொடர்பிலும் கமலேஸ் சர்மா இதன் போது ஆலோசனைகளை வழங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையுடன் முரண்பாடுகள் ஏற்படத்தான் செய்கின்றன!- அசோக் கே காந்தா
[ வெள்ளிக்கிழமை, 03 மே 2013, 01:37.29 AM GMT ]
இலங்கையுடன் எவ்வளவுதான் நெருக்கமான உறவுகளைப் பேணி வந்தாலும் சில விடயங்களில் முரண்பாடுகள் தோன்றுவதாக இலங்கைக்கான இந்தியத் தூதுவர் அசோக் கே காந்தா தெரிவித்துள்ளார்.
தூதுவர் பதவியிலிருந்து ஓய்வு பெறவுள்ள அவர், கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மகாநாட்டிலேயே இதனைத் தெரிவித்தார்.
ஜெனிவாவில் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தின் பின்னால் இந்தியா இருந்ததும், இருநாடுகளுக்கும் இடையில் ஒரு கருத்து வேறுபாட்டை ஏற்படுத்தியுள்ளது.
இவ்வாறான முரண்பாடுகளைக் களைந்து இரு நாடுகளினதும் இறுக்கத்தை பலப்படுத்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டியது அவசியம். இலங்கையின் அபிவிருத்திக்கு இந்தியா தனது பாரிய பங்களிப்பைச் செய்துள்ளது.
வடக்கு ரயில் பாதை அமைத்தல், பலாலி விமான நிலைய ஓடுபாதையை விஸ்தரித்தல் போன்ற அபிவிருத்தித் திட்டங்களை இப்போது எமது நாடு முன்னெடுத்து வருகிறது.
வடமாகாணத்துக்கான தொடர்பாடல் கட்டமைப்பு முறைக்கும் இந்திய அரசாங்கம் அக்கறையுடன் உதவவுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten