கருணை மனு மீது குடியரசுத் தலைவர் எடுக்கும் கால தாமதத்தைக் காரணம் காட்டி "தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க முடியாது' என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ள தீர்ப்பு, பேரறிவாளன், முருகன், சாந்தன் உள்ளிட்டவர்களின் தூக்குத்தண்டனை மீது தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றது.
இந்நிலையில் மூவரின் உயிரை காப்பாற்ற தமிழக அரசு தனது அதிகாரத்தைப் பயன்படுத்த வேண்டும் என்று கலைஞர், பழ.நெடுமாறன், மருத்துவர் ராமதாஸ், வைகோ, திருமாவளவன் உள்ளிட்ட அரசியல் தலைவர்களும் மரண தண்டணைக்கு எதிரான அமைப்பினரும் வலியுறுத்தியுள்ளனர்.
மேலும், மாநில அரசின் அமைச்சரவை ஒப்புதலை நிறைவேற்றும் கடமை ஆளுநருக்கு இருப்பதால் கால தாமதம் செய்யாமல் மூவரின் உயிரை காப்பாற்ற அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்ப வேண்டும் தமிழக அரசு''. உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பு ஏமாற்றத்தை தருகிறது. இந்த நிலையில் தமிழக மக்களின் தொடர்ச்சியான அழுத்தங்கள் வலிமை பெறும்போது தான் கருணை மனு விவகாரத்தில் புதிய சூழல் உருவாகும். அது, மத்திய-மாநில அரசுகள் ஒரு நிலைப்பாட்டினை எடுக்க வழிவகுக்கலாம்'' என்கின்றனர் வழக்கறிஞர்கள்.
,மூவரின் தூக்கு தண்டனையை தடுத்து நிறுத்த சட்டசபையில் ஜெயலலிதா தீர்மானம் போட்டு, உள்துறை அமைச்சகத்திடம் சொன்னாலே, தூக்கு தண்டனையை உள்துறை அமைச்சகம் உடனே தள்ளி வைத்து விடும்...அல்லது நிறுத்தி விடும் என சில வழக்கறிஞர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் ஜெயலலிதா மிகவும் மென்மையானவர், மிகவும் இரக்க குணம் உடையவர், அவர் நினைத்தால் மூவருக்காகவும் ஏற்றப்பட்டுள்ள தூக்கு கயிற்றை அறுக்க முடியும் என தமிழக அரசியல் தலைவர்கள் பலர் ஜெயலலிதாவுக்கு கோரிக்கை விட்டுள்ளனர்.
Geen opmerkingen:
Een reactie posten