[ ஞாயிற்றுக்கிழமை, 12 மே 2013, 02:46.03 AM GMT ]
கடந்த வெள்ளிக்கிழமையன்று சட்டத்தரணிகள் சங்கம் இது தொடர்பில் யோசனை ஒன்றை நிறைவேற்றியுள்ளது.
சிராணி பண்டாரநாயக்கவின் மீது தேவையற்ற ரீதியில் தொந்தரவுகளை அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது என்று சட்டத்தரணிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
அவர் மீது லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளமை தொடர்பிலேயே இந்தக்கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை எதிர்வரும் 17 ஆம் திகதியன்று மாத்தறைக்கு வரும் பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸை வரவேற்பதில்லை என்று மாத்தறை சட்டத்தரணிகள் சங்கம் தீர்மானம் எடுத்துள்ளது.
யாழ்.பல்கலைக்கழகத்திற்கு அருகில் இரண்டு வர்த்தக நிலையங்கள் மீது கழிவொயில் தாக்குதல்
[ ஞாயிற்றுக்கிழமை, 12 மே 2013, 03:14.21 AM GMT ]
யாழ்.பல்கலைக்கழகத்திற்கு அண்மித்த பரமேஸ்வரா சந்திக்கு அருகிலுள்ள இரண்டு வர்த்தக நிலையங்கள் மீது இன்று அதிகாலை இனந்தெரியாத நபர்கள் கழிவொயில் தாக்குதல் நடாத்தியுள்ளனர்.
சந்திக்கும் அருகில் இராணுவக் காவலரண் ஒன்று உள்ளநிலையில் இத்தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த தாக்குதல் சம்பவத்தில் குறித்த இரண்டு வர்த்தக நிறுவனங்களுக்கு ஏற்பட்ட இழப்பீடுகள் தொடர்பில் எந்தவிதமான தகவல்களும் இதுவரை தெரியவில்லை.
சம்பவ இடத்திற்கு வருகைதந்த யாழ்.பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Geen opmerkingen:
Een reactie posten