தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 12 mei 2013

அரசாங்கத்தை கவிழ்க்க ஐ.தே.க புதிய வியூகம் (செய்தித் துளிகள்)


மீண்டும் அரசியல் நடவடிக்கையில் துமிந்த - ஒதுங்கிக் கொண்டார் ஹிருனிக்கா
[ ஞாயிற்றுக்கிழமை, 12 மே 2013, 02:10.46 AM GMT ]
அரசியல் நடவடிக்கைகளில் இருந்து தற்காலிகமாக விலகியிருக்கவுள்ளதாக ஹிருனிக்கா பிரேமசந்திர அறிவித்துள்ளார்.
கொலை செய்யப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரதலக்ஷ்மன் பிரேமசந்திரவின் மகளான ஹிருனிக்கா தமது முழு நேர அரசியல் பிரவேசத்துக்கு உரிய உதவிகள் அவசியம் என்று குறிப்பிட்டுள்ளார்.
தாம் சட்டப்பரீட்சைக்கு தயாராகவுள்ளமை காரணமாகவே அரசியல் நடவடிக்கைகளில் இருந்து ஒதுங்குவதாக ஹிருனிக்கா தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் பாரத பிரேமசந்திரவின் கொலையில் சந்தேகநபராக குறிப்பிடப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா, மீண்டும் கொலன்னாவ தொகுதியில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இதற்கான பணிப்புரையை விடுத்துள்ளார்
அரசாங்கத்தை கவிழ்க்க ஐ.தே.க புதிய வியூகம் (செய்தித் துளிகள்)
[ ஞாயிற்றுக்கிழமை, 12 மே 2013, 02:27.33 AM GMT ]
அரசாங்கத்தைக் கவிழ்க்கும் நோக்கில் ஐக்கிய தேசியக் கட்சி புதிய வியூகமொன்றை அமைத்துள்ளது.
வாக்களிப்பு நிலையங்களின் அடிப்படையில் மக்கள் அமைப்புக்கள் உருவாக்கப்படவுள்ளன. இந்த மக்கள் அமைப்புக்கள் அரசாங்கத்திற்கு விரோதமான கருத்துக்கைள பிரசாரம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ஜூன் மாதமளவில் இந்த மக்கள் அமைப்பை உருவாக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. தற்போதைய அரசாங்கத்தை கவிழ்க்கக் கூடிய ஓர் சக்தியாக இந்த மக்கள் அமைப்பு உருவாக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அமைப்பை பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடை செய்ய முடியாது என கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
21ம் திகதி 600 தொழிற்சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபடவுள்ளன
எதிர்வரும் 21ம் திகதி 600 தொழிற்சங்கங்கள் போராட்டத்தில்ழ ஈடுபடவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மின்சாரக் கட்டண உயர்விற்கு எதிர்ப்பை வெளியிட்டு இந்தப் போராட்டம் நடத்தப்படவுள்ளது.
அரச, தனியார் மற்றும் பெருந்தோட்டத்துறையைச் சேர்ந்த 600 தொழிற்சங்கங்கள் போராட்டத்தில் குதிக்கவுள்ளன. போராட்டத்தில் கலந்து கொள்வதாக 600 தொழிற்சங்கள் இணக்கம் வெளியிட்டுள்ளதாக தொழிற்சங்க இணைப்பாளா வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
இதற்கு மேலதிகமாக ஐக்கிய தேசியக் கட்சி, ஜே.வி.பி ஆகிய கட்சிகளும் இந்தப் போராட்டத்திற்கு ஆதரவளித்துள்ளன.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சியும் போராட்டத்திற்கு ஆதரவளிப்பதாக அறிவித்துள்ளது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், இடதுசாரி கட்சிகளுடனும் தொழிற்சங்கப் போராட்டம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளது.

Geen opmerkingen:

Een reactie posten