தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 26 mei 2013

பௌத்த பிக்குவின் தற்கொலை முயற்சி குறித்து எதுவும் தெரியாது!– ஜாதிக ஹெல உறுமய


நெடுங்கேணி பாடசாலை சிறுமி வல்லுறவு விவகாரம்! சிக்கிய படைச்சிப்பாயை காப்பாற்ற முழு முயற்சி!
[ சனிக்கிழமை, 25 மே 2013, 02:48.45 PM GMT ]
வவுனியா, நெடுங்கேணி, சேனப்பிலவு கிராமத்தில் 7 வயதுடைய பாடசாலை சிறுமி பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள இராணுவ சிப்பாயை காப்பாற்ற முயற்சிகள் தொடங்கப்பட்டுள்ளன.
கைது செய்யப்படடவர் அப்பகுதியிலுள்ள நெடுங்கேணி இராணுவ முகாமைச்சேர்ந்த இராணுவ சிப்பாய் என தகவல்கள் வெளியாகியிருந்தது.
குறித்த தமிழ் சிறுமி பாடசாலை முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த வேளை குறித்த படைச்சிப்பாயினால் கடத்தப்பட்டு பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டிருந்தார்.
பின்னர் அநாதரவாக வீசப்பட்டிருந்து குறித்த சிறுமி பொதுமக்களினால் மீட்கப்பட்டு தற்போது வவுனியா வைத்தியசாலையினில் அனுமதிக்கப்பட்டுமிருந்தார்.
இந்நிலையினில் கைது செய்யப்பட்ட இராணுவ சிப்பாய் வவுனியா பொலிஸில் ஒப்படைக்கப்பட்டதுடன் மேலதிக விசாரணைக்காக கொழும்புக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக இலங்கைப் பொலிஸார் தெரிவித்தனர்.
குற்றவாளிகளை கைது செய்யுமாறு மக்கள் ஆர்ப்பாட்டங்களை நடத்தியிருந்த நிலையிலேயே குறித்த இராணுவ சிப்பாய் கைது செய்யப்பட்டிருந்தார்.
எனினும் கைது செய்யப்பட்டுள்ள குறித்த சிப்பாயினை காப்பாற்றவே தற்போது முயற்சிகள் ஆரம்பமாகியுள்ளது.
இதன் பிரகாரம் முக்கிய சான்றாதாரமாக கருதப்படும் மரபணுப் பரிசோதனைக்கான ஆதாரங்கள் பேணப்படவில்லையென தெரிய வருகின்றது.
இதனால் சர்ச்சைக்குரிய விந்தணு பரிசோதனைகள் போன்றவற்றை ஆய்வுக்குட்படுத்தி குற்றவாளியினை அடையாளப்படுத்த முடியாதநிலை ஏற்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏற்கனவே மனோநிலை வைத்தியர் சிவசங்கரை சிக்க வைத்த மருத்துவத்துறை சார்ந்த கும்பலே தற்போதும் இந்நடவடிக்கைகளின் பின்னணியில் இருப்பதாக குற்றஞ்சாட்டப்படுகின்றது.
பௌத்த பிக்குவின் தற்கொலை முயற்சி குறித்து எதுவும் தெரியாது!– ஜாதிக ஹெல உறுமய
[ சனிக்கிழமை, 25 மே 2013, 02:35.10 PM GMT ]
பௌத்த பிக்குவின் தற்கொலை முயற்சி குறித்து எதுவும் n;தரியாது என ஜாதிக ஹெல உறுமய கட்சி தெரிவித்துள்ளது.
கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு அருகாமையில் போவத்தே இந்திரதன தேரர் நேற்று தீக்குளித்து தற்கொலை செய்து கொள்ள முயற்சித்தார்.
 மிருகங்கள் இறைச்சிக்காக கொல்லப்படுதல் நிறுத்தப்பட வேண்டுமெனக் கோரி அவர் இவ்வாறு தற்கொலை செய்து கொள்ள முயற்சித்துள்ளார்.
 எனினும், இந்த சம்பவம் குறித்து தமக்கு எதுவும் தெரியாது என கட்சியின் தலைவர் அதுரலிய ரதன தேரர் தெரிவித்துள்ளார்.
சம்பவம் பற்றிய தகவல் தெரிந்திருந்தால் நிலைமை வேறு மாதிரியாக இருந்திருக்கும்.
மாடுகள் கொலை செய்யப்படுவதனை தடுக்கும் நோக்கில் நாடாளுமன்றில் ஏற்கனவே சட்டப் பிரேரணையொன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten