தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 26 mei 2013

தற்கொலைகளில் இலங்கை உலக சாதனை படைத்துள்ளது!- ஐ.தே.க


கிளிநொச்சியில் அனுமதியற்ற சிறுபோக செய்கையினால் ஏராளமான விவசாயிகள் பாதிப்பு
[ சனிக்கிழமை, 25 மே 2013, 02:13.33 PM GMT ]
கிளிநொச்சி இரணைமடுக்குளத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டுள்ள சிறுபோக செய்கையின் போது சுமார் 2 ஆயிரத்து 400 ஏக்கருக்கும் மேலாக அனுமதியற்ற விதத்தில் செய்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
இரணைமடுக்குளத்தின் புனரமைப்பு மற்றும் நீர்மட்டம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு இந்த ஆண்டு சுமார் 8 ஆயிரத்து 500 ஏக்கரில் சிறுபோக நெற்செய்கை மேற்கொள்வதெனத் தீர்மானிக்கப்பட்டு அதன் பிரகாரம் விவசாயிகள் பயிர்ச் செய்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
அதில் சுமார் 2 ஆயிரத்து 400 ஏக்கருக்கு மேலான நிலப்பரப்பில் அனுமதியற்ற விதத்தில் செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளமை பரிசோதனையின் போது தெரியவந்துள்ளது. இதனால் அனுமதிக்கப்பட்டதன் பிரகாரம் பயிர்ச் செய்கையை மேற்கொண்டுள்ள ஏராளமான விவசாயிகள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
சட்டவிரோத செய்கைகளை எதிர்வரும் 10 ஆம் திகதிக்கு முன்னதாக அளவீடு செய்து அவற்றை அடையாளப்படுத்துமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டது. இதற்கென தற்போது விசேட குழுக்களும் களத்தில் இறக்கிவிடப்பட்டுள்ளன.
இரணைமடுக்குளத்தின் கீழ் இந்த ஆண்டு சிறுபோக செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ள பகுதிகளைச் சேர்ந்த சுமார் 7 கமக்கார அமைப்புகளும் மேலதிக செய்கைகள் யாவற்றையும் அழிக்குமாறும் அல்லது அதிக பட்சத் தண்டனைகளை வழங்கி எதிர்காலத்தில் இவ்வாறான செய்கைகளை மேற்கொள்ளாதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடந்த 19ம் திகதி இடம்பெற்ற விசேட கலந்துரையாடலில் கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
தற்கொலைகளில் இலங்கை உலக சாதனை படைத்துள்ளது!- ஐ.தே.க
[ சனிக்கிழமை, 25 மே 2013, 02:31.19 PM GMT ]
தற்கொலைகளில் இலங்கை உலக சாதனை படைத்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.
தற்கொலைகள் மற்றும் மதுபான நுகர்வில் இலங்கை உலக அரங்கில் முன்னணி வகிப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பெரேரா தெரிவித்துள்ளார்.
போதைக்கு முற்றுப் புள்ளி என அரசாங்கம் பிரசாரம் செய்தாலும், உண்மையில் நிலைமை தலைகீழாகவே காணப்படுகின்றது. கண்டியில் பௌத்த பிக்கு ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொள்ள மேற்கொண்ட முயற்சி பாரதூரமானது.
இதற்கு யார் உந்து சக்தியாக அமைந்தார்கள் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும். உடலுக்கு தீ மூட்டிக் கொண்டமையின் பின்னணியில் ஏதேனும் அரசியல் சக்திகள் செயற்பட்டனவா என்பது குறித்து விசாரணை செய்யப்பட வேண்டும்.
வாழ்க்கைச் செலவு, பாடசாலை பிரச்சினை, போதைப் பொருள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் எவரும் தற்கொலை செய்து கொள்ளவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten