தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 26 mei 2013

மட்டக்களப்பு நுழைவாயிலில் புத்த சிலை வைத்தால் போராட்டம் நிச்சயம்!- பா.அரியநேத்திரன்


தீக்குளித்த பிக்கு சிகிச்சை பலனின்றி மரணம்!
[ சனிக்கிழமை, 25 மே 2013, 04:17.00 PM GMT ]
கண்டி தலதா மாளிகைக்கு முன்னால் நேற்று தீக்குளித்த பிக்கு, இன்று சனிக்கிழமை இரவு கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
கண்டி தலதா மாளிகைக்கு முன்பாகவே மாடுகள் கொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று வெள்ளிக்கிழமை அவர் தீ மூட்டிக்கொண்டார்.
வெசாக் தினத்தையொட்டி கண்டி தலதா மாளிகையில் விசேட மத நிகழ்வுகள் நடைபெற்றுக்கொண்டிருந்த வேளையிலேயே அவர் தனக்கு தானே தீ மூட்டிக்கொண்டுள்ளார்.
அங்கிருந்த பொதுமக்கள் பிக்குவை மீட்டு கண்டி வைத்தியசாலையில் அனுமதித்ததுடன் மேலதிக சிகிச்சைகளுக்கான கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
இந்நிலையிலேயே பிக்கு சிகிச்சை பலனின்றி சற்று முன்னர் உயிரிழந்து விட்டதாக பணிப்பாளர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு நுழைவாயிலில் புத்த சிலை வைத்தால் போராட்டம் நிச்சயம்!- பா.அரியநேத்திரன்
[ சனிக்கிழமை, 25 மே 2013, 04:59.11 PM GMT ]
மட்டக்களப்பு நகரின் நுழைவாயில் திட்டமிட்ட முறையில் புத்த சிலை வைக்கும் முயற்சியை தடுத்து நிறுத்த அனைத்துவழிகளிலும் போராடுவோம் என தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர்,
மட்டக்களப்பு மாவட்டமானது முற்றுமுழுதாக தமிழ் பேசும் மக்கள் வாழும் பிரதேசமாகும். இங்கு மேலதிகமாக புத்த சிலைகளை நிறுவ வேண்டிய அவசியம் இல்லை.
மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதியின் ஏற்பாட்டில் ஊறணியில் உள்ள மட்டக்களப்பு நுழைவாயிலுக்கு அருகில் புத்த சிலை ஒன்றை நிறுவுவதற்கான ஏற்பாட்டில் ஈடுபட்டுவருவதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
இந்த நடவடிக்கை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்பதை சம்பந்தப்பட்டவர்களிடம் கேட்டுக்கொள்வதுடன் இவ்வாறான சம்பவங்களை நிறுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கையெடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கின்றேன்.
இவ்வாறான நடவடிக்கைகள் மக்கள் மத்தியில் அமைதியை குலைக்கும் நடவடிக்கையாகவே கருதவேண்டியுள்ளது.
இந்த புத்தசிலை அமைக்கும் பணிகள் நிறுத்தப்பட வேண்டும்.இல்லையென்றால் அதனை தடுத்து நிறுத்த அனைத்து நடவடிக்கைகளையும் தமிழ் தமிழ் தேசிய கூட்டமைப்பு செய்யும்.
தற்போது மட்டக்களப்பு நகரில் புத்தர் சிலை அமைப்பதற்கான தேவை எதுவும் இல்லாத நிலையில் இதுபோன்ற நடவடிக்கை பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten