தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 20 mei 2013

அமைச்சர் ஜி.எல்.பீரிசுடன் இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் கதைத்ததால் கோட்டா அச்சம்!


வவுனியாவில் கொலையுண்ட மூன்று பிள்ளைகளின் தந்தை மீது இளைஞா் குழுவொன்று தாக்குதல்!

MAY 20, 2013 COMMENTS OFF
வவுனியாவில் கொலையுண்ட மூன்று பிள்ளைகளின் தந்தை மீது இளைஞா் குழுவொன்று தாக்குதல்!
வவுனியா தாண்டிக்குளம் பகுதியில் கடந்த 17 ஆம் திகதி மனநலம் குன்றிய பெண்ணொருவரால் கிணற்றில் வீசி கொலை செய்யப்பட்ட மூன்று பிள்ளைகளின் தந்தை மீது இளைஞர் குழுவொன்று நேற்று தாக்குதல் நடத்தியுள்ளது.
மரணித்த பிள்ளைகளின்; தாயார் வவுனியா பொது மருத்துவமனையில் மனநல பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் நேற்றைய தினம் மூன்று பிள்ளைகளின் இறுதிச் சடங்கு தாண்டிக்குளத்தில் உள்ள அவர்களது வீட்டில் இடம்பெற்றது.
இந்த நிலையில், பிள்ளைகள் இறப்பதற்கு வறுமையும் தந்தை வேறு ஓர் பெண்ணை திருமணம் செய்து சென்ற நிலையில், குடும்பத்தினரை ஆதரிக்காமையுமே காரணமெனவும் கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தநிலையில் நேற்றைய தினம் இந்த மூன்று பிள்ளைகளின் இறுதிச்சடங்குகள் பத்தினியார் மகிழங்குளம் இந்து மயாத்தில் இடம்பெற்றதன் பின்னர் இளைஞர் குழுவொன்று பிள்ளைகளின் தந்தை மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதன்போது அவர்கள் ஆக்ரோசமாக காணப்பட்டதுடன் பிள்ளைகளின் இறப்புக்கு தந்தையான விஜயகுமாரவே காரணமெனவும் தெரிவித்திருந்தனர்.
vanunia_childern_death_001

அமைச்சர் ஜி.எல்.பீரிசுடன் இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் கதைத்ததால் கோட்டா அச்சம்

MAY 20, 2013 COMMENTS OFF
அமைச்சர் ஜி.எல்.பீரிசுடன் இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான்  கதைத்ததால் கோட்டா அச்சம்
சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிசுடன் இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித் நேற்று முன்தினம் காலை நடத்திய தொலைபேசி உரையாடல் சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவை கலக்கமடையச் செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்று முன்தினம் தொலைபேசியில் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சருடன் உரையாடிய, இந்திய வெளிவிவகார அமைச்சர், வடக்கில் உயர் பாதுகாப்பு வலயத்துக்கென காணிகள் பறிக்கப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
இதனால் விசனமடைந்த சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச, நேற்று மாலை சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிசை சந்தித்து, இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித்துடன் நடத்திய கலந்துரையாடல் குறித்து விளக்கம் கேட்டுள்ளார். இதையடுத்து கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றிடம் கருத்து வெளியிட்டுள்ள கோத்தாபய ராஜபக்ச, ஊடகங்களில் வெளியானது போன்று, இந்திய வெளிவிவகார அமைச்சர் தொலைபேசி உரையாடலின் போது பலாலி – காங்கேசன்துறை உயர்பாதுகாப்பு வலய காணி சுவீகரிப்புத் தொடர்பாக எதுவும் பேசப்படவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், போரின் போதும், போருக்குப் பின்னரும் படையினரையும் படைத்தளபாடங்களையும் எங்கெங்கு நிறுத்துவது என்பது ரு அரசாங்கத்தின் தனியுரிமை என்றும், அதில் வெளிநாட்டு சக்திகள் தலையிட்டு திருத்தங்களைச் செய்ய முடியாது என்றும் அவர் கூறியுள்ளார். அதேவேளை இந்த விவகாரம் குறித்து சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் இந்த வாரம் நாடாளுமன்றத்தில் விளக்கமளிக்கவுள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten