[ வியாழக்கிழமை, 16 மே 2013, 03:08.54 PM GMT ]
யாத்திரை செல்வது போன்று வழக்கு விசாரணைகளுக்கு செல்வதாக முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
கடந்த ஆறு ஆண்டுகளாக வழக்கு விசாரணைகளுக்காக நீதிமன்றங்களுக்கு செல்கின்றேன்.
சில மேன்முறையீடுகள், சிலவை தொடர்ந்தும் விசாரணை செய்யப்படுகின்றன.
போலிக் குற்றச்சாட்டு சுமத்தி சிறைத்தண்டனையும் அனுபவித்தேன்.
இதுவே தற்போது நமது நாட்டின் நிலைமையாகும்.
வழக்கு விசாரணைகளில் அரசியல் தலையீடு காணப்படுகின்றது.
படுகொலையாளிகள், பாலியல் குற்றவாளிகள் போன்றவர்கள் விடுதலையாகின்றனர் என சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற ஆசனம் ரத்து செய்யப்பட்டமை தொடர்பில் செய்திருந்த மேன்முறையீட்டு வழக்கு விசாரணைகளில் பங்கேற்று திரும்பிய போது ஊடகவியலாளர்களிடம் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ஐ.நா.வின் விசேட பிரதிநிதி இலங்கைக்கு விஜயம் செய்ய விரும்புவதாக அறிவித்துள்ளார்!
[ வியாழக்கிழமை, 16 மே 2013, 03:17.13 PM GMT ]
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 23ம் அமர்வுகள் எதிர்வரும் வாரத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கைக்க விஜயம் செய்ய விரும்புவதாக தாம் ஏற்கனவே விடுத்திருந்த கோரிக்கையை ஏற்றுக் கொள்ளுமாறு அவர் மீளவும் தெரிவித்துள்ளார்.
எனினும், இதுவரையில் இலங்கை அரசாங்கம் தமது கோரிக்கைக்கு உரிய பதிலளிக்கவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சனல்4 ஊடகத்தின் ஒரு வீடியோ உண்மையானது என 2011ம் ஆண்டின் ஏப்ரலில் கிறிஸ்டோப் ஹென்ஸ் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
பாரிய குற்றச் செயல்கள் இடம்பெற்றதாகவே அவரது அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.
இலங்கை விவகாரத்தில் ஆக்கபூர்வமாக இணைந்து கொள்ள விரும்புவதாகத் தெரிவித்துள்ளார்.
Geen opmerkingen:
Een reactie posten