இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட அநாதரவற்ற குழந்தைகளின் நலனுக்காக நிதி திரட்டிய அமெரிக்க குழந்தைகள்
[ வியாழக்கிழமை, 16 மே 2013, 03:17.29 PM GMT ]
இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்டு, தாய் தந்தையர், உறவினர்களை இழந்து ஆதரவற்றவர்களாகிவிட்ட தமிழ்க் குழந்தைகளின் நலனுக்காக அமெரிக்க இந்தியக் குழந்தைகள் 6 ஆயிரம் டாலர்கள் நிதி திரட்டியுள்ளனர்.
அமெரிக்காவின் வடக்கு டல்லாஸ் சாய் பாலவிகாஸ் பாடசாலையை நிறுவிய உமா ராவ் மற்றும் டொக்டர் சேஷகிரி ராவ், சுமார் பதினைந்து ஆண்டுகளாக நடத்தி வருகிறார்கள். ஐந்து வயது முதல் 15 வயது வரையிலுமான சுமார் 300 மாணவர்கள் இங்கு பயின்று வருகிறார்கள்.
இப்பாடசாலையில் கல்வி பயிலும் மாணவர்கள் நன்கொடைகள், நற்பணிகள் செய்து வருகின்றனர்.
அந்தவகையில், மாணவர்களின் பங்களிப்போடு வாரம்தோறும் அமெரிக்காவில் உள்ள ஏழைகள், வீடற்றவர்களுக்கு நாராயணா சேவை என்ற பெயரில் உணவுப் பொருட்களை வழங்கப்படுகிறது.
இறுதி ஆண்டு மாணவர்கள் நடத்தும் நல உதவித் திட்டம் ஒவ்வொரு வருடமும், இறுதி ஆண்டு முடிக்கும் மாணவர்கள், நடைப் பயணம் திட்டம் மூலம் நிதி திரட்டி பல்வேறு நற்பணிகளுக்கு நன்கொடையாக கொடுத்து வருகிறார்கள்.
இந்த ஆண்டு பாடசாலையை முடித்துச் செல்லும் மாணவர்கள் இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவி செய்ய விரும்பினர். கிளிநொச்சியில் உள்ள மகாதேவா ஆசிரமத்தின் குழந்தைகள் காப்பகத்தில் உள்ள ஆதரவற்ற குழந்தைகளுக்கா நிதி திரட்ட முடிவு செய்தனர்.
சுமார் 60 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வரும் இந்த காப்பகத்தில் தற்போது 147 ஆண் 179 பெண் குழந்தைகள் உள்ளனர். இவர்கள் அனைவரும் 2009 போரின் போது பெற்றோர், உறவினர்களை இழந்தவர்கள்.
போர் முனையின் கோரக்காட்சிகளை பார்த்து இன்னும் அந்த பாதிப்பு நீங்காமல் இருப்பவர்கள். சிலர் குண்டு வீச்சின் போது உடலில் நுழைந்த துகள்களை உடம்பில் சுமந்து கொண்டிருப்பவர்கள்.
இந்த குழந்தைகளின் நலனுக்காக கடந்த ஞாயிற்றுக்கிழமை ட்ல்லாஸ் ப்ளேனோ ரஸல் க்ரீக் பார்க்கில் நடைப் பயணம் மூலம் 6 ஆயிரம் டாலர்களை திரட்டி பாலவிகாஸ் மாணவர்கள், பள்ளி வ்ரலாற்றிலேயே ஒரு புதிய சாதனை படைத்துள்ளார்கள்.
மாணவர்களின் நல்ல நோக்கத்தை அறிந்து கொண்ட டல்லாஸ் தமிழர்கள் சுமார் 500 பேர் குடும்பத்தோடு இந்த திட்டத்தில் கலந்து கொண்டனர்.
புலிகளின் சிறந்த புலம்பெயர் தரப்பினருடன் நோர்வேயில் பேச்சுவார்த்தைகளை நடத்தினோம்!- பொதுபல சேனா
[ வியாழக்கிழமை, 16 மே 2013, 03:42.50 PM GMT ]
தாம் சிறந்த புலம்பெயர் பிரதிநிதிகளிடம் ஏற்படுத்தி கொண்ட இணக்கப்பாடுகளை புலம் பெயர் புலிகள் சீர்குலைத்து விட்டனர் எனவும் அவர் கூறியுள்ளார்.
அரசசார்பற்ற நிறுவனங்களின் செயற்பாடுக்ள இந்த நாட்டில் எந்தளவுக்கான பாதிப்புக்களை ஏற்படுத்தியுள்ளன என்பதை நாம் அறிவோம்.
இதனால் நாங்கள் நேரடியாக புலிகளுடன் தொடர்பில்லாத, பிரிவினைவாததுடன் தொடர்பில்லாத புலம்பெயர் குழுவொன்றுடன் பேச்சுவார்த்தைகளை நடத்த நாங்கள தீரமானித்தோம்.
அந்த குழுவுடன் இணைந்து செயற்பட முடியுமாக இருந்தால், கிடைக்கும் நிதியுதவிகளை நேரடியாக மக்களுக்கு வழங்கும் வேலைத்திட்டம் ஒன்றுக்கு செல்ல முடியும்.
எனினும் துரதிஷ்டவசமாக உண்மையான புலிகள் சிறந்த புலம்பெயர் பிரதிநிதிகளுடனான வேலைத்திட்டத்தை எதிர்த்தனர்.
அத்துடன் அந்த முன்னெடுப்புகள் முடிவுக்கு கொண்டு வரப்பட்டன எனவும் ஞானசார தேரர் கூறியுள்ளார்.
Geen opmerkingen:
Een reactie posten