[ வியாழக்கிழமை, 16 மே 2013, 01:20.39 PM GMT ]
கொழும்பு மேல் நீதிமன்றம் நேற்று இந்தத் தீர்ப்பை வழங்கியது.
தமிழத் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனை கொழும்பு 4ம் மாடிக்கு விசாரணைக்கு வருமாறு பயங்கரவாதக் குற்றத் தடுப்புப் பொலிஸாரிடமிருந்து அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேநேரம், ஒரு வருட காலத்துக்கு புனர்வாழ்வில் ஈடுபடுத்துமாறும் சிறைச்சாலை ஆணையாளர் நாயகத் துக்கும் புனர்வாழ்வு ஆணையாளருக்கும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இந்த வழக்கு இன்று மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, இவர் மீது சுமத்தப்பட்ட பாரதூரமான 15 குற்றச்சாடுக்களை கொண்ட திருத்தப்பட்ட பாரதூரமான குற்றச்சாட்டு பத்திரத்தில் கூறப்பட்ட குற்றச் சாட்டுகளை இவர் குற்றவாளியென ஏற்றுக் கொண்டதால் இவருக்கு மேற்படி தண்டனைகள் வழங்கப்பட்டன.
ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் 3 மாதம் என்ற அடிப்படையில் 15 மாத சிறைத்தண்டனை ஒரே முறையில் கழியும் வண்ணம் தீர்ப்பளித்த நீதிபதி, பிரீதி பத்மன் சுரசேன சிறைப்படுத்துவதற்கான கால எல்லை ஒரு மாத காலமாகுமென்றும் தெரிவித்தார்.
07 ஆண்டுகளுக்கு மேற்பட்ட காலமாக கைதாகி தடுத்து வைக்கப்பட்டுள்ள வல்வெட்டித்துறை வாசியான குணசுந்தரம் ஜெயசுந்தரம் என்ற இந்த குற்றம் சுமத்தப்பட்டவரை மேலும் ஒரு வருடத்துக்கு புனர்வாழ்வில் ஈடுபடுத்துமாறும் நீதிபதி உத்தரவிட்டார்.
புரிந்த தவறுகளை திருத்திக்கொண்டு சிறந்த பிரஜையாக மீண்டும் சமூகத்தில் இணைவதற்காக கோரியமை எல். ரீ. ரீ. ஈக்கு மீண்டும் உதவாமலிருக்க உள்ளூரிலும் சர்வதேச ரீதியிலும் கோரிக்கை விடுத்தமை போன்றவற்றை கருத்திற்கொண்டு, சிறந்த பிரஜையாக சமூகத்தில் இணைவதற்கு அவகாசம் வழங்கி நீதிபதி இத்தண்டனையை விதித்தார்.
பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டமை தொடர்பாக சட்டமா அதிபர் முதலில் வழக்கை தாக்கல் செய்திருந்தார். தான் சிறந்த பிரஜையாக வேண்டுமெனத் தெரிவித்ததால், சட்டத்தின் 05 ஆவது பிரிவின் கீழ் மீண்டும் திருத்தப்பட்ட குற்றப்பத்திரம் நேற்று தாக்கல் செய்யப்பட்டது.
பகிரங்க நீதிமன்றத்தில் தமக்கு தமிழில் சொல்லப்பட்ட குற்றச்சாட்டுக்களை ஏற்றுக்கொண்ட குற்றவாளி இலகுவான தண்டனை வழங்குமாறு கேட்டுக்கொண்டார்.
கொழும்பு, வன்னி, வல்வெட்டித்துறை பகுதிகளிலும் சிங்கப்பூரிலும் எல். ரீ. ரீ. ஈ. தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன், சண்முகசுந்தரம் கன்னாஸ்கரன் என்றழைக்கப்படும் கரன், கனகராஜ் என்றழைக்கப்படும் ஷங்கர் ஆகியோருடன் இணைந்து யுத்த நடவடிக்கைகளுக்காக யுத்த உபகரணங்களை ஓடர் செய்து, அவற்றை எல். ரீ. ரீ. ஈ. இயக்கத்துக்கு வழங்கி, இலங்கையில் பயங்கரமான நடவடிக்கைகளை மேற்கொள்ள சதி தீட்டியமை, நவீன யுத்த உபகரணங்கள் வெடி மருந்துகள், உபகரணங்கள் ஆகியவற்றுக்கு உதிரிப்பாகங்களைப் பெற்றுக்கொள்ள ஓடர் செய்தமை போன்ற காரணங்களை பொலிஸ¤க்கு அறிவிக்காமையே குற்றச்சாட்டுக்களாகும்.
தண்டனை தீர்ப்பு வழங்கப்பட முன்னர் காரணங்களை விளக்கிய அரச சட்டத்தரணி ஷவீந்த விக்ரம, குற்றம் சுமத்தப்பட்டவருக்கு எதிராக முன்னர் சமர்ப்பிக்கப்பட்ட குற்றங்களுக்காக அவருக்கு 75 வருடங்களில் இருந்து 300 வருடங்கள் வரை சிறைத்தண்டனை விதிக்க இடம் இருந்ததாகத் தெரிவித்தார்.
இருந்தும் எவரின் தலையீடுமின்றி குற்றம் சுமத்தப்பட்டவர் குற்றத்தை ஏற்றுக்கொண்டதால் சிறந்த பிரஜையாக வர இடமளித்து குற்றப்பத்திரிகையை திருத்தியதாகவும் அதன் பிரகாரம் 07 வருட அதி உச்ச சிறைத் தண்டனையை வழங்க இயலுமென தெரிவித்த அவர், 07 ஆண்டுகள் கைதாகி இருந்தமை மூன்று பிள்ளைகளின் தந்தையாக இருப்பது ஆகியவற்றைக் கருத்திற் கொள்ளுமாறு கேட்டார். தான் சம்பந்தப்பட்ட செயற்பாடுகளை வெளியிட இவர் இணங்கியமை கருத்திற்கொள்ளப்பட வேண்டும்.
மக்களின் அடிப்படை உரிமைகளை பயங்கரவாதிகள் மீறுவதாக அவர் கூறும் கருத்துக்கள், இலங்கையின் மக்கள் மத்தியில் ஐக்கியத்தை ஏற்படுத்த துணை புரிவதாக கூறுவதும் முக்கியமாகும்.
குற்றம் சுமத்தப்பட்டவரைப் பார்க்கினும் பயங்கரமான குற்றங்களைப் புரிந்த பயங்கரவாதிகள் சிறந்த பிரஜைகளாக சமூகமயப்படுத்தப்பட்டிருப்பதானது கருத்திற்கொள்ளப்பட வேண்டும்.
குற்றம் சுமத்தப்பட்டவரைப் பார்க்கினும் பயங்கரமான குற்றங்களைப் புரிந்த பயங்கரவாதிகள் சிறந்த பிரஜைகளாக சமூகமயப்படுத்தப்பட்டிருப்பதானது கருத்திற்கொள்ளப்பட வேண்டும்.
இலகுவான சிறைத்தண்டனை விதிக்க வேண்டுமென குற்றம் சுமத்தப்பட்டவரின் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி அனில் சில்வா தெரிவித்தார். புனர்வாழ்வு பெற்ற பின்னர் சிறந்த பிரஜையாக சமூகமயப்படுமாறு நீதிபதி பிரீதி பத்மன் சுரசேன தெரிவித்தார்.
பா.உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனை 4ம் மாடிக்கு வருமாறு அழைப்பு
[ வியாழக்கிழமை, 16 மே 2013, 01:57.36 PM GMT ]
எதிர்வரும் 21ம் திகதி கொழும்பிலுள்ள பயங்கரவாதக் குற்றத்தடுப்புப் பிரிவினரின் அலுவலகத்திற்கு விசாரணைக்காக வருமாறு நேற்று பாராளுமன்ற உறுப்பினருக்கு அழைப்புக் கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
கடந்த சில வாரங்களாக தமிழ் மக்களின் உரிமைகளுக்காக ஜனநாயக வழியில் போராடிவரும் குரல் கொடுத்து வரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சிவில் சமுகத்தினர் சிலர் 4ம் மாடிக்கு அழைத்து விசாரிக்கப்பட்டுள்ளனர்.
கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான சுரேஸ் பிரேமச்சந்திரன், சிறீதரன் ஆகியோர் கடந்த வாரங்களுக்கு முன்னர் 4ம் மாடிக்கு அழைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Geen opmerkingen:
Een reactie posten