தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 20 mei 2013

வடக்கில் 17 வீதமானவர்களுக்கு அடையாள அட்டைகள் இல்லை


திருகோணமலையில் வாய் பேசமுடியாத சிறுமி துஸ்பிரயோகம்! சந்தேகநபருக்கு விளக்கமறியல்
[ திங்கட்கிழமை, 20 மே 2013, 03:41.54 AM GMT ]
திருகோணமலையில் வாய் பேச முடியாத சிறுமியொருவரை துஸ்பிரயோகத்திற்குட்படுத்திய நபரொருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
நேற்று முந்தினம் லிங்கநகர் பகுதியைச் சேர்ந்த 12 வயதான சிறுமியை முச்சக்கர வண்டிச் சாரதியான 33 வயதுடைய நபர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். குறித்த சிறுமி தனது ஆசிரியரிடம் இச்சம்பவம் தொடர்பில் தெரிவித்துள்ளார்.
ஆசிரியர்கள் பொலிஸில் செய்த முறைப்பாட்டையடுத்து, குறித்த நபர் நேற்று கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார்.
குறித்த நபரின் மனைவி வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிறுமியை பலாத்காரத்திற்கு உட்படுத்தியுள்ளதாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
மேலும், பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை யாழ்ப்பாணத்தில் தங்கி வேலை செய்வதாகவும் தாய் மனநிலை பாதிக்கப்பட்டவர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சந்தேக நபரை எதிர்வரும் 31ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வடக்கில் 17 வீதமானவர்களுக்கு அடையாள அட்டைகள் இல்லை
[ திங்கட்கிழமை, 20 மே 2013, 02:35.41 AM GMT ]
வடக்கில் 17 வீதமானவர்களுக்கு தேசிய அடையாள அட்டைகள் இல்லை என சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
எதிர்வரும் செப்டம்பர் மாதம் வடக்கில் மாகாணசபைத் தேர்தல் நடத்தப்படவுள்ளது. தேர்தல்களை முன்னிட்டு பிரதேச மக்களுக்கு தேசிய அடையாள அட்டைகளை வழங்க பெபரல் அமைப்பு தீர்மானித்துள்ளது.
தேசிய அடையாள அட்டைகள் இல்லாதவர்களுக்கு அடையாள அட்டைகளை விநியோகிக்கும் விசேட திட்டமொன்று முன்னெடுக்கப்பட உள்ளது.
ஆட்பதிவு திணைக்களத்துடன் இணைந்து பெபரல் அமைப்பு இந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளது.
எதிர்வரும் 1ம் திகதி முதல் நான்கு நாள் விசேட நடமாடும் சேவையொன்றின் தேசிய அடையாள அட்டை விநியோகம் செய்யப்பட உள்ளது.

Geen opmerkingen:

Een reactie posten