தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 10 mei 2013

தயா மாஸ்டரை முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்தக்கூடாது! சரத் பொன்சேகா


அவுஸ்திரேலியாவில் சிறுமி உட்பட 3 பெண்களைத் தாக்கியதாக இரு இலங்கையர் மீது குற்றச்சாட்டு
[ வெள்ளிக்கிழமை, 10 மே 2013, 04:18.39 AM GMT ]
அவுஸ்திரேலியாவில் இரு பெண்கள் மற்றும் ஒரு சிறுமி மீது தாக்குதல் மேற்கொண்டதாக இலங்கையர்கள் இருவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
கிழக்கு சிட்டி நகரில் பரமட்டா பகுதி வர்த்தக நிலையத்தில் 31, 39 வயதுடைய இரு பெண்களும் 14 வயது சிறுமியும் நேற்று கொள்வனவு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
இவர்களுக்கு அருகில் வந்த இருவர் அவர்கள் மீது தாக்குதல் நடாத்தியுள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த பொலிஸார் 20 மற்றும் 47 வயதுடைய இரு இலங்கை பிரஜைகளை கைது செய்துள்ளனர்.
இவ்விரு இலங்கையர்களும் அவுஸ்திரேலியாவின் வெஸ்ட்மீட் பகுதியில் தற்காலிகமாக தங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இவர்கள் மீது வழக்கு தாக்கல் செய்து விசாரணை நடாத்தியபோது இருவரும் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் எதிர்வரும் ஜூன் 26ம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
தயா மாஸ்டரை முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்தக்கூடாது! சரத் பொன்சேகா
[ வெள்ளிக்கிழமை, 10 மே 2013, 03:00.25 AM GMT ]
புலிகளின் முன்னாள் ஊடகத்துறை இணைப்பாளர் தயா மாஸ்ரரை வடக்குத் தேர்தலில் அரசு முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்துவதை தான் கடுமையாக எதிர்ப்பதாக முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
புலிகள் மக்களின் பணத்தைக் கொள்ளையடித்தனர். அவர்கள் மாகாண சபைக்கு வந்தாலும் அதையே செய்வார்கள் எனக் குறிப்பிட்ட பொன்சேகா, முன்னாள் புலிகள் வன்முறையைக் கைவிட்டதை ஆதரிக்கின்றேன்.
ஆயினும் அவர்கள் மாகாண சபை தலைமைப் பதவிகளுக்கு வருவதை மக்கள் விரும்பவில்லை எனவும் குறிப்பிட்டார்.
வட மாகாண சபை தேர்தல் வெகுவிரைவில் நடத்தப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அந்த கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
ஏனைய மாகாண சபை தேர்தல்கள் நடத்தப்பட்ட வண்ணம் வட மாகாண சபை தேர்தல் நடத்தப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten