தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 10 mei 2013

வடமாகாண ஆளுநர் சந்திரசிறிக்கு எதிராக அடிப்படை மனிதஉரிமை மீறல் மனு உச்ச நீதிமன்றில் தாக்கல்


யாழ்.மாநகர எல்லைக்குள் வெள்ளிக்கிழமைகளில் தனியார் வகுப்புக்களை நடாத்த முடியாது!- மேலும் 3 கட்டுப்பாடுகள்
[ வெள்ளிக்கிழமை, 10 மே 2013, 02:58.57 AM GMT ]
யாழ்.மாநகர சபைக்குட்பட்ட சகல தனியார் கல்வி நிலையங்களிலும் இனி வெள்ளிக்கிழமைகளில் மாணவர்களுக்கான வகுப்புக்களை நடாத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
யாழ்.மாநகர சபையில் நேற்று மாலை நடைபெற்ற கலந்துரையாடலிலேயே இத்தடை உட்பட மூன்று தீர்மானங்களை மாநகர சபை நிறைவேற்றியுள்ளது.
ஞாயிற்றுக்கிழமைகளில் சாதாரண தரத்திற்குட்டப்பட்ட மாணவர்களுக்கு வகுப்புக்களை நடாத்த முடியாது. உயர்தர மாணவர்களுக்கு வகுப்புக்களை நடாத்தலாம்.
ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 10 மணிக்கு முன்னதாக வகுப்புக்களை நடாத்த முடியாது.
இத்தீர்மானங்கள் எதிர்வரும் ஜீன் 01ம் திகதி முதல் அமுலுக்கு வரும் எனவும் கட்டுப்பாடுகளை மீறும் நிறுவனங்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என்றும் யாழ்.மாநகர சபை மேயர் அறிவித்துள்ளார்.

வடமாகாண ஆளுநர் சந்திரசிறிக்கு எதிராக அடிப்படை மனிதஉரிமை மீறல் மனு உச்ச நீதிமன்றில் தாக்கல்
[ வெள்ளிக்கிழமை, 10 மே 2013, 02:38.35 AM GMT ]
வடமாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆசிரிய இடமாற்றத்தின் போது பாதிக்கப்பட்ட கிளிநொச்சி கல்வி வலயத்திற்குட்பட்ட பூநகரி கோட்டப் பாடசாலைகளைச் சேர்ந்த மூன்று ஆசிரியர்கள் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாக தெரிவித்து  உச்ச நீதிமன்றில் நேற்று அடிப்படை மனித உரிமை மீறல் மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளனர்.
2012ம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட ஆசிரியர் இடமாற்றத்தின்போது தகுதியிருந்தும்  தமக்கான ஆசிரிய இடமாற்றம் வழங்கப்படவில்லையென்று இவர்கள் தெரிவிக்கின்றனர்.
தகுதியில்லாத ஆசிரியர்களுக்கு இடமாற்றத்தின் போது இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தமது மனுவில் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இம்மனுவில் வடமாகாண ஆளுநர் சந்திரசிறி, கல்வி அமைச்சர் கல்வி அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட பலர் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

Geen opmerkingen:

Een reactie posten