யுத்தம் நடைபெற்ற காலப் பகுதிகளில் இடம்பெயர்ந்த மக்கள் தமது பூர்வீக வசிப்பிடங்களில் வாக்களிப்பதற்கு வசதி
[ வெள்ளிக்கிழமை, 10 மே 2013, 05:28.38 AM GMT ]
யுத்தம் நடைபெற்ற காலப்பகுதியில் வெளியேற்றப்பட்ட அல்லது தகுந்த காரணங்களுக்காக இடம்பெயர்ந்த மக்கள் தமது பூர்வீக வசிப்பிடங்களில் வாக்களிக்க வசதி ஏற்படுத்தும் முகமாகவே அமைச்சரினால் இந்த அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
யுத்தத்தை வெற்றிகரமாக முடிவுக்குக் கொண்டு வந்த போதிலும், ஜனாதிபதி தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காண உரிய முனைப்பு எடுக்கத் தவறியுள்ளதாக பிரான்ஸிற்கான முன்னாள் இலங்கைத் தூதுவரும் சிரேஸ்ட இராஜதந்திரியுமான கலாநிதி தயான் ஜயதிலக்க குற்றஞ்சாட்டியுள்ளார்.
இந்த அமைச்சரவைப் பத்திரத்தில் யுத்த காலத்தில் நிரந்தரமாகக் குடியிருந்த வசிப்பிடங்களில் இருந்து குறிப்பாக வடமாகாணத்தில் இருந்து வெளியேறுமாறு நிர்ப்பந்திக்கப்பட்ட மக்கள் அவர்களது காணிகளையும், சொத்துக்களையும் ஆவணங்களையும் கைவிட்டு இலங்கையின் வேறு மாகாணங்களில், வேறு தேர்தல் தொகுதிகளில் சென்று அங்கு தங்கியிருக்க நேரிட்டதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அவ்வாறு வெளியேற்றப்பட்ட அல்லது உரிய காரணங்களுடன் இடம்பெயர்ந்த மக்கள் வடமாகாணத்தில் உரிய தேர்தல் தொகுதியில் வாக்காளர்களாக தம்மை பதிவு செய்யுமாறு விண்ணப்பித்த படிவங்கள் தேர்தல் ஆணையாளரால் நடைமுறையில் உள்ள சட்டத்தை காரணம் காட்டி நிராகரிக்கப்பட்டதையும் அமைச்சர் இதில் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறானவர்கள் வாக்காளர்களாக தகைமை பெறுவதற்குரிய தமது முகவரி பற்றிய தேவையை நிறைவு செய்வதும், வாக்காளர் பட்டியலை மீளாய்வு செய்வதற்காக வீடுதோறும் சென்று பரிசீலிக்கும் அலுவலர்களிடம் தகைமை பெறும் முகவரியொன்றை சமர்ப்பிப்பதும் மிகவும் சிரமமான காரியங்களெனவும் அப்பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுசன வாக்குரிமை என்பது மக்களின் இறைமையின் முக்கிய அம்சங்களில் ஒன்றென தெரிவித்துள்ள நீதியமைச்சர் ஹக்கீம் உள்ளக ரீதியாக வெளியேற்றப்பட்டு அல்லது இடம்பெயர்ந்து தீவின் ஏனைய பிரதேசங்களுக்குச் சென்று அங்கு தற்பொழுது தற்காலிகமாக வசிக்கும் வாக்குரிமைக்கு உரித்துடையவர்கள் முன்னர் நிரந்தரமாக அவர்கள் குடியிருந்த தேர்தல் மாவட்டத்தில் வாக்களிக்கக் கூடியவாறு வாக்காளர் பெயர் பட்டியலொன்றை தயாரிப்பதற்கு இந்தச் சட்ட மூலத்தை நிறைவேற்றுவது அவசியமென்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காண ஜனாதிபதி உரிய முனைப்பு எடுக்கத் தவறியுள்ளார்- தயான் ஜயதிலக்க
[ வெள்ளிக்கிழமை, 10 மே 2013, 05:49.39 AM GMT ]
அத்துடன், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தமக்கு நெருக்கமானவர்களுக்கு தேவையற்ற வகையில் அதிகாரங்களை பரவலாக்கியுள்ளதாக குற்றம் சுமத்தியுள்ளார்.
அரசாங்கத்தினை வழிநடத்தும் கொள்கைகளை யார் வகுக்கின்றார்கள் என்பது தமக்குப் புரியவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பயங்கரவாதம் இல்லாதொழிக்கப்பட்டமை மிகப் பாரிய வெற்றியாகவே கருதப்பட வேண்டும் எனவும் அதில் மாற்றுக் கருத்து கிடையாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எவ்வாறெனினும் யுத்த நிறைவின் மூலம் நிலையான சமாதானத்தை ஏற்படுத்த எமக்குக் கிட்டிய அரிய வாய்ப்புக்கள் பல கைநழுவ விடப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
சீனாவைப் போன்றே ஆசிய பிராந்திய வலயத்தில் இந்தியாவும் முக்கியமான நாடு எனவும், அதனை ஆளும் தரப்பினர் சரியாக புரிந்து கொள்ளத் தவறியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
1967ம் ஆண்டு இஸ்ரேல் பாரிய இராணுவ வெற்றியை ஈட்டியதாகவும் அப்போதைய அரசியல் தலைமை சமாதானத்திற்கான வழிகளை ஏற்படுத்தத் தவறியதன் விளைவுகள் இன்று வரையில் துன்பியல் அனுபவமாக தொடர்கின்றது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் இறுதி அறிக்கைப் பரிந்துரைகளை துரித கதியில் அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.
யுத்தத்தை வெற்றிகரமாக முடிவுக்குக் கொண்டு வந்த போதிலும் ஜனாதிபதி தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காண உரிய முனைப்பு எடுக்கத் தவறியுள்ளதாக தயான் ஜயதிலக்க குற்றம் சுமத்தியுள்ளார்.
Geen opmerkingen:
Een reactie posten