தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 11 mei 2013

முஸ்லிம் என்ற வகையில் ஆயுதம் ஏந்தும் அமைப்புக்கு ஆதரவு இல்லை: அசாத் சாலி


வடக்கிலிருந்து இடம்பெயர்ந்தோர் தேர்தலில் வாக்களிப்பதற்கு புதிய சட்டம்
[ சனிக்கிழமை, 11 மே 2013, 10:14.04 AM GMT ]
வடக்கிலிருந்து இடம்பெயர்ந்தவர்கள் வாக்களிப்பதற்கு சந்தர்ப்பம் அளிக்கும் சட்டத்தைக் கொண்டுவர அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
எதிர்வரும் செப்டெம்பர் மாதத்தில் வடமாகாணசபைத் தேர்தலை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ள நிலையில், 1983ஆம் ஆண்டு மே முதலாம் திகதிக்கும் 2009 மே 18ஆம் திகதிக்கும் இடையில் இடம்பெயர்ந்தவர்கள் வாக்களி்ப்பில் ஈடுபடும் வகையில் இந்த சட்டம் கொண்டு வரப்படப்படவுள்ளது.
வேறு எந்த இடத்திலும் வாக்காளர்களாகப் பதிவு செய்யப்படாதவர்களுக்கே இந்த வாய்ப்பு வழங்கப்படவுள்ளது.
இடம்பெயர்ந்து வேறு மாவட்டங்களில் வாழ்வோர் சொந்த மாவட்டங்களில் வாக்காளராக பதிவு செய்வதற்கு தற்போது சட்டத்தில் இடமில்லை.
இந்நிலையில் இதற்கான அமைச்சரவை பத்திரத்தை நீதி அமைச்சர் சமர்ப்பித்துள்ளார்.
இந்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டால் 1983 மே முதலாம் திகதிக்கும் 2009 மே 18ஆம் திகதிக்கும் இடையில் இடம்பெயர்ந்த 15,000 பொதுமக்கள் வடக்கில் தம்மை வாக்காளராகப் பதிவு செய்ய வழி பிறக்கும் என்று தெரிவிக்கப்படுகின்றது.

முஸ்லிம் என்ற வகையில் ஆயுதம் ஏந்தும் அமைப்புக்கு ஆதரவு இல்லை: அசாத் சாலி
[ சனிக்கிழமை, 11 மே 2013, 11:12.50 AM GMT ]
ஆயுதம் ஏந்தும் அமைப்புக்கு உதவியளிக்கப் போவதாக தாம் ஒருபோதும் கூறவில்லை என கொழும்பு மாநகர முன்னாள் பிரதிமேயர் அசாத் சாலி தெரிவித்துள்ளார்.
எனினும் தமிழகத்தில் இருந்து வெளியாகும் ஜூனியர் விகடன் சஞ்சிகை தம்மை பிழையாக, தமது செய்தியில் கோடிட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
விடுதலையாவதற்கு முன்னர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு அனுப்பிய சத்தியக்கடதாசியில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
தாம் கூறியதாக ஜூனியர் விகடன் வெளியிட்ட செய்தி பிழையானது. இதற்கு மறுப்பு தெரிவிக்க தாம் அந்த சஞ்சிகையிடம் கோரிக்கை விடுத்ததாகவும் அசாத் சாலி தெரிவித்துள்ளார்
ஒரு முஸ்லிம் என்ற வகையில், இலங்கையில் ஆயுதம் ஏந்தும் எவருக்கும் ஆதரவளிப்பதாக தாம் ஆலோசனை வழங்கப் போவதில்லை என்று சாலி சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையின் இறையான்மைக்கு ஒருபோதும் ஊறுவிளைவிக்கப் போவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில், தமது கருத்து என்று கூறப்பட்டு வெளியான செய்தியால் எவருக்கும் அசௌகரியம் ஏற்பட்டிருந்தால் அதற்கு கவலை தெரிவிப்பதாகவும் அசாத் சாலி தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இந்தியாவின் முன்னணி அமைப்பு ஒன்று விடுத்திருந்த அழைப்பை ஏற்று தாம் மாநாடு ஒன்றில் பங்கேற்றதாக கூறியுள்ள அசாத் சாலி, அந்த அமைப்பு குறித்து முன்னதாக தாம் எந்த அறிவையும் பெற்றிருக்கவில்லை என்றும் அசாத் சாலி குறிப்பிட்டுள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten