தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 11 mei 2013

இலங்கையின் இறுதிப் போர் குறித்த ஐ.நா அறிக்கை தீவிரமாக ஆராயப்பட்டது!- ஜேன் எலிசன்


மட்டக்களப்பிலிருந்து 900 கிலோமீற்றர் தூரத்தில் மையங்கொண்டுள்ளது “மகாசென்” புயல்: மீனவர்களுக்கு எச்சரிக்கை
[ சனிக்கிழமை, 11 மே 2013, 12:47.57 PM GMT ]
வங்காள விரிகுடாவின் தென்கிழக்காகக் காணப்பட்ட சூறாவளிப் புயலானது, தற்போது மட்டக்களப்பிலிருந்து கிழக்காக 900 கிலோ மீற்றர் தூரத்திற்கப்பால் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மகாசென் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த சூறாவளிப்புயலானது, வடமேற்குத் திசையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. இதன் தாக்கத்தினால் கிழக்கு மற்றும் தென் கிழக்கின் 300 கிலோ மீற்றர் தூரத்திற்கப்பாலுள்ள ஆழ்கடல் பிரதேசங்கள் கடும் கொந்தளிப்பாகக் காணப்படும்.
அத்துடன் மேற்குறிப்பிடப்பட்ட ஆழ்கடல் பிரதேசங்களில் கடும் காற்றுடன் மழையும் காணப்படும். இதனால் மீனவர் சமூகம் மற்றும் கடல்சார் தொழிலாளர்கள் மேற்குறிப்பிடப்பட்ட ஆழ்கடல் பிரதேசங்களில் தங்களது கடல் நடவடிக்கைகளை தவிர்த்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இந்த மகாசென் என பெயரிடப்பட்டுள்ள சூறாவளிப்புயலின் காரணமாக இலங்கையை அண்டிய பிரதேசங்களில் தென்மேற்குத் திசையிலிருந்து காற்று வீசும்.
மட்டக்களப்பிலிருந்து காலிவரையான ஆழ்கடல் பிரதேசங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழையும் காணப்படும் என வளிமணிடலவியல் அதிகாரி க.சூரியகுமாரன் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் இறுதிப் போர் குறித்த ஐ.நா அறிக்கை தீவிரமாக ஆராயப்பட்டது!- ஜேன் எலிசன்
[ சனிக்கிழமை, 11 மே 2013, 03:53.32 AM GMT ]
இலங்கை குறித்த ஐக்கிய நாடுகள் அமைப்பின் அறிக்கை தீவிரமாக ஆராயப்பட்டது என அமைப்பின் பிரதி பொதுச் செயலாளர் ஜேன் எலிசன் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் இடம்பெற்ற இறுதிக் கட்ட யுத்தத்தின் போது ஐக்கிய நாடுகள் அமைப்பின் செயற்பாடுகள் குறித்து அறிக்கை தயாரிக்கப்பட்டிருந்தது.

இலங்கையில் இடம்பெற்றது போன்ற சூழ்நிலைகள் எதிர்காலத்தில் ஏற்படாமல் இருக்கக் கூடிய வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய நாடுகள் அமைப்பின் சிரேஸ்ட பிரதிநிதிகளினால் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.
குறித்த அறிக்கையின் பரிந்துரைகள் உன்னிப்பதாக கவனிக்கப்பட்டதாகவும், பரிந்துரைகள் எதிர்காலத்தில் பயன்படுத்திக் கொள்ளப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இன்னும் ஒரு மாத காலத்திற்குள் அறிக்கை குறித்த இறுதி பரிந்துரை அறிக்கை வெளியிடப்படும் எனவும், உள்ளடக்கங்களை தீவிரமாக ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் அமைப்பின் எதிர்கால நடவடிக்கைகளுக்கு இந்த அறிக்கை உறுதுணையாக அமையும் எனக் குறிப்பிட்டுள்ளார்.


Geen opmerkingen:

Een reactie posten