[ சனிக்கிழமை, 11 மே 2013, 10:57.30 AM GMT ]
ஈழத் தமிழினப் படுகொலை! இலங்கைப் போர்க்குற்ற நாளான மே 18 நாடளாவிய ரீதியில் புலம்பெயர் மக்களால் அனுஷ்டிக்கப்படும் வேளையில் லண்டனில் மாபெரும் எழுச்சியாக நடைபெறவிருக்கின்றது.
இம் மாபெரும் எழுச்சி ஆர்ப்பாட்டத்திற்கு அனைத்து தமிழ் மாணவர்களையும் ,தமிழ் மக்களையும் கலந்துகொள்ளுமாறு நந்தனம் கல்லுரி மாணவர் ஒருங்கிணைப்பாளர் இளையராஜா மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
விடுதலையை வென்றெடுக்க நமக்குள் ஒற்றுமை அவசியம்: பா.அரியநேத்திரன்
[ சனிக்கிழமை, 11 மே 2013, 10:42.00 AM GMT ]
வந்தாறுமூலையில் நடைபெற்ற தந்தை செல்வாவின் 36வது நினைவு தினத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
தந்தை செல்வா தமிழன் தமிழனாக வாழவேண்டும் என்று உறுதியாக செயற்பட்டுக்கொண்டிருந்தவர். வட்டுக்கொட்டையில் தந்தை செல்வாவினால் சுதந்திர தமிழீழம் கோரப்பட்டது. சிலர் சமஸ்டியை கோரியதாக கூறுகின்றனர்.அவர் சுதந்திர தமிழீழத்தையே கோரினார்.
அதனை நாங்கள் இப்போது உச்சரிக்கமுடியாது. ஆனால் அவர் அந்த தீர்மானத்தை எடுத்தபோது அதனை நாங்கள் நிறுவுவோம் என உறுதியாக கூறியிருந்தார். ஆனாலும் அந்த தீர்மானத்தின் வாக்கெடுப்புக்கு ஒரு மாதத்துக்கு முன்பே அவர் இறைவனடி சேர்ந்தார். வடக்கு கிழக்கில் இருந்து அந்த ஆணையை பெற்றபோது அவர் உயிருடன் இருக்கவில்லை.
மனிதர்கள் சாகலாம் ஆனால் கொள்கை சாகாது. அந்த கொள்கையின் வடிவங்கள் மாறியிருக்கின்றது.அந்த வடிவத்தை நாங்கள் பெரும்வரையில் நாங்கள் ஒன்றுபட்டவர்களாக இருக்கவேண்டும்.அதற்காகத்தான் தமிழ் தேசிய கூட்டமைப்பு இருக்கின்றது.
ஒரு தேசிய விடுதலைப்போராட்டம் என்பது ஒரு தேசிய அரசியலுக்குள்ளேயே இடம்பெறுகின்றது. தேசிய அரசியலுக்குள் இடம்பெறுகின்றது. தேசிய அரசியலாகவே தீர்மானிக்கப்படுகின்றது. ஆனால் அந்த வெற்றியின் இலக்கு என்பது சர்வதேசத்தினாலேயே தீர்மானிக்கப்படுகின்றது.
நாங்கள் 66 வருடங்களாக அகிம்சை,ஆயுத ரீதியில் தேசிய ரீதியான போராட்டங்களை மேற்கொண்டுவந்துள்ளோம்.ஆனால் இன்று அதனை தீர்மானிக்கின்ற சக்தி சர்வதேசத்தில் இருக்கின்றது. இன்று சர்வதேச மயப்படுத்தப்பட்ட போராட்டத்தில் நாங்கள் இணைந்துகொண்டுள்ளோம். இது மறுக்கமுடியாத உண்மை.
ஜெனீவா தீர்மானம் என்பது சர்வதேச ரீதியில் நாங்கள் இரண்டாம் படிக்கு சென்றுள்ளோம். அது தமிழ் தேசியத்துக்கு கிடைத்த வெற்றியாகும்.
கொள்கையை கொள்கையாக வைத்திருக்கவேண்டும்.கொள்கையென்பது முள்ளியவாய்க்காலுக்கு முற்பட்டதுமல்ல பிற்பட்டதுமல்ல. கொள்கையின் பாதையே மாறியிருக்கின்றது.தந்தை செல்வா விட்டுச்சென்ற அந்த பயணத்தை நாங்கள் தொடர்ந்துகொண்டுள்ளோம். இந்த பயணத்தில் பல தடைகள் இருக்கின்றது. அதனைக்கடந்து செல்லவேண்டும். அவர் விட்டுச்சென்ற பணியை நாங்கள் வெற்றிகரமாக மேற்கொள்ளவேண்டுமாகவிருந்தால் எங்களுக்குள் ஒற்றுமையிருக்கவேண்டும். அப்போதுதான் அந்த பயணம் வெற்றியளிக்கும்.
இந்த அரசியல் என்பது பல வழிகளில் கையாளப்பட்டுவருகின்றது. வியாபாரத்துக்கான அரசியல்,சலுகைக்கான அரசியல்,உரிமைக்கான அரசியல். வியாபாரத்துக்கான அரசியல்,சலுகைக்கான அரசியலுக்கும் உரிமைக்கான அரசியலுக்கும் இடையில் பல வித்தியாசங்கள் இருக்கின்றன. தமிழ் தேசிய கூட்டமைப்பை பொறுத்தவரையில் அபிவிருத்தியை நாங்கள் புறந்தள்ளவில்லை. அபிவிருத்திக்கான அரசியலை ஓரங்கட்டி எங்கள் பயணத்தை கொண்டுசெல்லவில்லை. வடகிழக்கு அபிவிருத்திசெய்யப்படவேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கின்றோம்.
ஆனால் அபிவிருத்தியென்ற பெயரில் அடாவடித்தனங்கள் ஊடாக ஆக்கிரமிப்பு செய்யக்கூடாது என்பதிலேயே நாங்கள் உறுதியாகவுள்ளோம். அதனைத்தான் தந்தை செல்வா அவர்களும் அகிம்சை ரீதியில் எங்களுக்கு புகட்டிதந்துள்ளார்.
தந்தை செல்வா எப்போதும் தமிழ் பேசும் மக்கள் என்ற எண்ணக்கருவுடனேயே இருந்தார்.முஸ்லிம் மக்களையும் அனைத்துச்சென்றார். கிழக்கில் பல முஸ்லிம் தலைவர்களை வெற்றி பெறச் செய்தார். ஆனால் அவர்கள் சோரம்போனதே வரலாறு. அவர்கள் வியாபார அரசியலாக மாற்றப்பட்டார்கள். யார் சென்றாலும் நாங்கள் தந்தை செல்வாவின் பாதையிலேயே எந்தவித சோரமும் போகாமல் பயணித்துக் கொண்டிருக்கின்றோம்.
நாங்கள் வெற்றியை அடையவேண்டுமானால் இன்னும் பல படிகளை தாண்டவேண்டியவர்களாகவுள்ளோம்.நாங்கள் விடுதலைக்காக போராடிய ஒரு இனம்.அந்த விடுதலையை நாங்கள் பெறும்வரைக்கும் தமிழன் தமிழனாக உறுதியாக இருக்கவேண்டும்.
தமிழர்களுக்கான ஒரு கட்சியை நாங்கள் பலப்படுத்தவேண்டும்.அதனைவிடுத்து நாங்கள் பேரினவாத கட்சிகளுக்கு செல்வோமாகவிருந்தால் எமது மண்ணை மேலும் பறிகொடுப்போம். தமிழரசுக்கட்சியையோ,தமிழ் தேசிய கூட்டமைப்பையோ அதன் தலைவர்களையோ புறக்கணிக்கும் நிலையேற்பட்டால் ஒன்பதாயிரமாகவிருக்கும் எமது நிலப்பரப்பு ஐந்தாயிரமாக மாறும். இதனை தடுக்ககூடியவர்கள் யார் என்பதை நீங்கள் சிந்திக்க வேண்டும்.அதனை தடுக்ககூடிய சக்தியை நீங்கள் பலப்படுத்த வேண்டும்.
Geen opmerkingen:
Een reactie posten