[ செவ்வாய்க்கிழமை, 14 மே 2013, 07:20.13 AM GMT ]
ஏறாவூர் நகர பிரதேச செயலகத்தில் பணியாற்றிய முகைதீன் என்ற இளைஞருக்கே இன்று காலை மின்னேரியா இராணுவ பயிற்சி முகாமில் மலையேறிக் கொண்டிருந்தபோது சறிக்கி விழுந்து கால்முறிந்துள்ளதாக தெரிவிக்கப்படுன்றது.
குறித்த இளைஞர் தற்போது பொலனறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வருவதாக அவருடைய பெற்றோர் கவலை தெரிவித்துள்ளனர்.
மின்னேரியா இராணுவ பயிற்சி முகாமில் மிகக் கடுமையான பயிற்சிகளை தங்களது பிள்ளைகளுக்கு வழங்குவதாக முறைப்பாடு தெரிவிக்கும் பெற்றோர்கள், தங்களுடைய பிள்ளைகளை மிகுந்த வறுமையிலும கஷ்டத்தின் மத்தியிலும் பட்டதாரியாக்கியது மலையேறவைப்பதற்கு இல்லை என்று மிகுந்த வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், தங்களது பிள்ளைகளுக்கு என்ன பயிற்சி வழங்குவதாக இருந்தாலும் எங்களது பிரதேசத்திலேயே வழங்குமாறும் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
விஷ ஜந்துக்களுடனும் யுத்த எச்சங்களுடனும் இத்தாவில் மக்களின் அவல வாழ்வு
[ திங்கட்கிழமை, 13 மே 2013, 01:46.51 PM GMT ]
மீள்குடியேற்றம் செய்யப்பட்டு ஒரு வருடத்திற்கு மேலாகும் நிலையில் அடிப்படை வசதிகள் கூட முழுமையாக ஏற்படுத்தித் தரப்படாத நிலையில் விஷ ஜந்துக்களுடனும், அகற்றப்படாத யுத்த எச்சங்களுடனும் அவல வாழ்வு வாழ்வதாக பளை - இத்தாவில் பகுதி மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
1996ஆம் ஆண்டு யுத்தம் காரணமாக இத்தாவில் மக்கள் முழுமையாக வெளியேறினர். மீளவும் கடந்த 2012ம் ஆண்டு இவர்கள் மீள்குடியேற்றப்பட்டனர்.
தற்போது 160 குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் வாழ்ந்து இக்கிராமத்தில் வாழ்கின்றனர். அவர்களில் 100 குடும்பங்களுக்கு மட்டுமே அரைநிரந்தர வீடுகள் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளன.
இந்த வீடுகள் அரை நிரந்தர தகுதி கூட இல்லாதவை என மக்கள் சாடுகின்றனர். ஏனைய 60 குடும்பங்களைச் சேர்ந்த மக்களுக்கு அடிப்படை வசதிகள் கூட ஏற்படுத்திக் கொடுக்கப்படவில்லை. தாமாக அமைத்துக் கொண்ட குடிசைகளில் பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் வாழ்ந்துகொண்டிருக்கின்றனர்.
மலசல கூட வசதிகளும் இதுவரை செய்து கொடுக்கப்படவில்லை. அடிப்படை வசதிகள் மேம்படுத்திக் கொடுக்கப்படாமையினால் கிராமத்து மக்கள் பலரும் தமது வாழ்விடங்களுக்குத் திரும்பாமல் இன்னமும் வாடகை வீடுகளில் பல அசௌகரியங்களுக்கு மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.
இதேபோல் இத்தாவில் பிரதேசத்திற்கான பாடசாலை யுத்தத்தினால் சேதமடைந்த நிலையில் தற்போது புதிய கட்டடமொன்றும், தற்காலிககடடடமொன்றும் அமைக்கப்பட்டு பாடசாலை மீளவும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதுவே அயலிலுள்ள 5 கிராமங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கான ஒரே பாடசாலையாக உள்ளது. தற்போது இங்கு தரம் 11வரையான வகுப்புக்கள் நடைபெற்று வருகின்றன.
எனினும் தரம் 5வரையான வகுப்புக்களுக்கே ஆசிரியர் வளம் போதுமானதாக உள்ளது. ஏனைய 6 வகுப்புக்களுக்கு ஆசிரியர் வளம் போதுமானதாக இல்லை.
குறிப்பாக 10 ஆசிரியர்கள் இருக்க வேண்டிய இடத்தில் 3 ஆசிரியர்கள் மட்டுமே உள்ளனர். இந்நிலையில் க.பொ.த சாதாரணதரம் பயிலும் மாணவர்கள் கற்றல் செயற்பாடுகளை முன்னெடுப்பதில் பல சிரமங்களை எதிர்கொள்கின்றனர் என பெற்றோர் சுட்டிக்காட்டுகின்றனர்.
இத்தாவில் மக்கள் கோருகின்றனர். கடுமையான யுத்தம் இந்தப்பகுதியில் இடம்பெற்ற இக்கிராமத்திலிருந்த அனைத்து கிணறுகளும் இடிந்து அழிந்து போயுள்ளன. இதனால் குடிநீரை பெற்றுக் கொள்வதற்காக நாம் அயல் கிராமங்களுக்கு செல்லவேண்டியுள்ளது. இதனால் பல அசௌகரியங்களை சந்திக்கவேண்டியுள்ளது எனவும் இக்கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.
யுத்தத்திற்கு முன்னர் இப்பகுதியில் இருந்த நிரந்தர வீடுகள் மற்றும் தென்னை உள்ளிட்ட பயன்தரு மரங்ககள் யுத்தத்தினால் பெருமளவில் அழிந்து போய்விட்டன.
இந்நிலையில் மிகமோசமான யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட எமது பிரதேசத்தில் அடிப்படைவசதிகளை மேம்படுத்தி மக்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழ்நிலையினை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். முழுமையாக வெடிபொருட்களை அகற்றி எமது பாதுகாப்பான வாழ்க்கையை உறுதிப்படுத்த வேண்டும் எனவும் இத்தாவில் பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
Geen opmerkingen:
Een reactie posten