[ செவ்வாய்க்கிழமை, 14 மே 2013, 07:43.05 AM GMT ]
இக்கடற்பரப்பில் படகில் தொழில் செய்து கொண்டிருக்கும் சமயத்தில் இடி மற்றும் மின்னல் தாக்கம் காரணமாக குறித்த மீனவர் கடலில் மூழ்கியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
வடக்கில் நேற்றுக் காலை வீசிய கடும் காற்று மற்றும் பலத்த மழையினால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றாகப் பாதிக்கப்பட்டதுடன் சொத்துக்களும் பெருமளவில் சேதமடைந்துள்ளன.
இவருடன் கூடச்சென்ற மற்றுமொரு தொழிலாளி இச்சம்பவத்தின்போது மயக்கமடைந்தார். இவர் நேற்றுக்காலை கரை திரும்பிவிட்டார். ஆதிகோவிலடி, வல்வெட்டித்துறையைச் சேர்ந்த தங்கவேலாயுதம் அருளானந்தம் (வயது - 18) என்பவரே கடலில் மூழ்கி காணாமற்போயுள்ளார்.
மரணமடைந்திருக்கலாம் என்று நம்பப்படும் இவரது சடலம் நேற்றிரவு வரை கண்டுடிபிடிக்கப்படவில்லை. இவரது சடலத்தைத் தேடும் பணிகளுக்காக ஆதிசக்தி கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கத்தினர் சுமார் 45 படகுகளுடன் தயார் நிலையில் உள்ளனர். இன்று தேடுதல்கள் நடத்தப்படவிருக்கின்றது என்று தெரிவிக்கப்பட்டது.
வடக்கை உலுக்கிய “மகாசென் சூறாவளி”: இயல்பு நிலையிலும் பாதிப்பு- மக்கள் அவதி!
[ செவ்வாய்க்கிழமை, 14 மே 2013, 07:53.09 AM GMT ]
குறிப்பாக குடாநாட்டிலேயே அதிகளவு சேதங்கள் ஏற்பட்டுள்ளன. வீட்டுக்கூரைகள் தூக்கி வீசப்பட்டதுடன் பனைமரங்கள், வாழைகள் முறிந்து வீழ்ந்ததுடன் மக்களும் காயமடைந்த அதேவேளை குருநகர் பகுதியிலுள்ள கார்மேல் மாதா ஆலயம் மீது வீழ்ந்த இடியினால் அவ்வாலயம் முழுமையாக சேதமடைந்துள்ளது.
தெல்லிப்பழை பிரதேச செயலர் பிரிவிலுள்ள மல்லாகம் கோணப்புலம் நலன்புரி நிலையத்திலேயே அதிகளவு பாதிப்புக்கள் ஏற்பட்டன. மயிலிட்டி, தையிட்டி போன்ற பகுதியிலிருந்து இடம்பெயர்ந்து நீண்டகால மாக இப்பகுதியில் வசித்து வரும் மக்கள் நேற்றைய அசாதாரண காலநிலையால் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
குறிப்பாக அந்தப் பகுதியில் நின்ற பனைமரங்கள் நலன்புரி நிலைய குடியிருப்புக்கள் மீது வீழ்ந்ததனால் 15 வீடுகள் முழுமையாக சேதமடைந்ததுடன் மூவர் படுகாயமடைந்த நிலையில் தெல்லிப் பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சூசைதாசன் சுமதி (வயது - 42), அவரது மகனான சுயந்தன் (வயது- 13) மற்றும் மாவை கலட்டி பகுதியைச் சேர்ந்த தி.சதீஸ்வரன் (வயது - 43) ஆகியோரே காயமடைந்தவர்களாவர்.
அனர்த்த பாதிப்புக்களை அடுத்து அப்பகுதிக்கு வருகைதந்த பிரதேச செயலர் மற்றும் இராணுவத்தினர், வீழ்ந்த பனை மரங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். அத்துடன் பொதுமக்கள் அப்பகுதியிலுள்ள ஆலயம் ஒன்றில் தங்கவைக்கப்பட்டதுடன் அவர்களுக்கான உதவிகளை பிரதேச செயலகம் ஊடாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை பிரதான வீதிகள் பலவற்றின் குறுக்கே மரங்கள் வீழ்ந்தமையால் போக்குவரத்துக்களும் சிறிது நேரம் தாமதமானது. அத்துடன் யாழ். இலுப்பையடிச் சந்தையில் தொலைத்தொடர்பு கோபுரமொன்றும் சரிந்து வீழ்ந்துள்ளது.
பல பகுதிகளில் மக்களின் வீட்டுக்கூரைகள், வர்த்தக நிலைய கூரைகள் என்பன தூக்கி வீசப்பட்டன. அத்துடன் கைதடி வெளிப்பகுதிகளில் காணப்பட்ட வர்த்தக விளம்பர பதாதைகளும் தூக்கி வீசப்பட்டிருந்தன.
நீர்வேலிப் பகுதிகளில் பெருமளவான வாழைமரங்கள் முறிந்து வீழ்ந்தன. நேற்றைய அசாதாரண காலநிலையால் பாடசாலைகளுக்கான மாணவர் வருகையும் வெகுவாகக் குறைந்து காணப்பட்டதுடன் அரச அலுவலகங்களிலும் பணியாளரின் வரவில் வீழ்ச்சி காணப்பட்டது.
இதேவேளை குடாநாட்டில் நேற்றைய அசாதாரண காலநிலையால் 42 குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளதாகவும் 8 வீடுகள் முற்றாகவும், 200 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாக அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்தார்.
தெல்லிப்பழை பிரதேச செயலர் பிரிவிலிருந்தே மேற்படி 42 குடும்பங்களும் இடம்பெயர்ந்துள்ளதாகவும் தெல்லிப்பழை, சங்கானை, ஊர்காவற்றுறை, பிரதேச செயலர் பிரிவில் 8 வீடுகள் முழுமையாகவும் 200 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
இடம்பெயர்ந்த குடும்பங்களுக்கு சமைத்த உணவுகள் வழங்கப்படுவதாகவும் வீடுகளைத் திருத்துவதற்கு கூரைத்தகடுகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும்
அவர் மேலும் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, கிளிநொச்சி மாவட்டத்தில் ஏற்பட்ட கடுமையான காற்று மற்றும் பலத்த மழையினால் 3 வீடுகளின் கூரைகள் தூக்கி வீசப்பட்டன. கரைச்சி பகுதியில் பன்னங்கண்டியிலும், கண்டாவளையில் பரந்தன் குமாரசாமிபுரத்திலும், பூநகரியில் முழங்காவில் பகுதியிலுமே இவ்வாறு கூரைகள் தூக்கி வீசப்பட்டன.
எனினும் மாவட்டத்தில் இடப்பெயர்வுகள் எதுவும் ஏற்படவில்லையெனத் தெரிவிக்கப்படுகிறது. அதேபோன்று முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் மாவட்டங்களிலும் சுழல்காற்று பலத்த மழையினால் மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டனர்.
மன்னார் விடத்தல்தீவில் நேற்றுக்காலை சுமார் 3 நிமிடங்கள் வரை வீசிய சுழற்காற்றினால் 10 வீடுகளின் கூரைகள் பறந்தன. அத்துடன் இக்கிராமத்திலுள்ள மின்கம்பங்களும் உடைந்து வீழ்ந்துள்ளன.
இலங்கையில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தத்தினால் 7 பேர் பலி - கிழக்கில் தொடரும் சீரற்ற காலநிலை
[ செவ்வாய்க்கிழமை, 14 மே 2013, 04:03.13 AM GMT ]
இலங்கையின் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் கடும் மழையால் இதுவரையில் 7 பேர் பலியானதாக தெரிவிக்கப்படுகிறது.
மலையகத்தின் நுவரெலியா மாவட்ட பெயார்வெல் மற்றும் டிக்ஓயா பகுதிகளில் நான்கு பேர் பலியாகினர்.
அத்துடன் நாகசேனை, யாழ்ப்பாணம் மற்றும் கண்டி மாவட்டங்களில் 3 பேர் பலியானதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
சீரற்ற காலநிலையால் இதுவரையில் 319 குடும்பங்களைச் சேர்ந்த 1139 பேர் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்துள்ளனர்.
கிழக்கில் தொடரும் சீரற்ற காலநிலை - நெருக்கடிக்குள் மீனவர்கள்
மட்டக்களப்பு மாவட்டத்தில் வீசும் கடும் காற்றுடன் கூடிய மழையினால் மாவட்டத்தின் இயல்பு நிலை பாதிப்படைந்திருந்தது.
ஏற்பட்ட காலநிலமை மாற்றத்தினால் வாகரை, கல்குடா, களுவன்கேணி, புன்னக்குடா, சவுக்கடி, ஏறாவூர், களுவாஞ்சிக்குடி, போன்ற கரையோரப் பிரதேசங்களில் கடல் கொந்தளித்து காணப்படுகிறது.
மரங்கள் முறிந்தும், குடிசை வீடுகள் சேதமடைந்தும் காணப்படுகிறது. கரையோரத்தில் வைக்கப்பட்டுள்ள கரைவலைகள் கடலினுள் இழுத்துச் செல்லப்பட்டுள்ளதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை மீன்பிடி படகு, இயந்திரம், கரைவலை போன்றவற்றை பாதுகாக்கும் நடவடிக்கையில் மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள சேத விபரங்களை உடனடியாக தெரிவிக்க முடியாமல் உள்ளதாகவும் சரியான சேத விபரங்களை பெறும் பொருட்டு பிரதேச கள உத்தியோகத்தர்களை பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு சென்று தகவல்களை திரட்டும் படி கேட்டுள்ளதாக மாவட்ட கடல்றொழில் திணைக்கள அதிகாரி எஸ்.ரி.ஜோர்ஜ் தெரிவித்தார்.
இதேவேளை வாழைச்சேனை, ஓட்டமாவடி பிரதேசத்திலிருந்து கடலுக்கு சென்ற 400 ஆழ்கடல் படகுகளில் 25 படகுகள் மாத்திரம் இது வரைக்கும் சொந்த இடம் வந்து சேரவில்லையென்றும், இது பற்றிய தகவலை பெறுவதற்கான நடவடிக்கையில் தாம் கடல்றொழில் அமைச்சின் உதவியை கேட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
பேத்தாழையைச் சேர்ந்த பே.தினேஸ் என்பருக்கு சொந்தமான 1886 இலக்கமுடைய படகு கடலில் இருந்து கரைக்கு திரும்பும் வழியில் திங்கட்கிழமை காலை கடலில் ஏற்பட்ட கொந்தளிப்பு காரணமாக படகு கல் பாறையில் மோதி சேதமடைந்துள்ளதாகவும் அதில் பயணம் செய்தவர்கள் தெய்வாதினமாக உயிர் தப்பி கரையை வந்தடைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
மாங்கேணி, மாவடி ஓடை, பணிச்சங்கேணி போன்ற இடங்களில் மீனவர்களின் குடிசை வீடுகள் மற்றும் பொருட்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாகவும், மீனவர்கள் மறு அறிவித்தல் வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என கடல்றொழில் அமைச்சு அறிவித்துள்ளதாக மேலும் தெரிவித்தார்.
அழிவுகளை ஏற்படுத்தும் புயலுக்கு சிங்கள மன்னன் பெயரா? சிங்கள அமைப்பு எதிர்ப்பு
[ செவ்வாய்க்கிழமை, 14 மே 2013, 02:49.39 AM GMT ]
இலங்கையின் கிழக்கு கடலுக்கு அருகில் நிலை கொண்டுள்ள புயல் சின்னத்திற்கு மகாசேனன் என்ற பெயரை பயன்படுத்துவதற்கு ராவணா சக்தி அமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
மகாசேனன் மன்னரின் பெயரை அழிவுகளை ஏற்படுத்தும் புயலுக்கு பயன்படுத்தாது, பிசாசுகளின் பெயர்களை பயன்படுத்தியிருந்தால் மிகவும் நல்லது.
இதனை விடுத்து எதற்காக இலங்கையை ஆட்சி செய்த மன்னரின் பெயரை சூட்டினர் எனவும் வரலாற்றை அறியாதவர்களின் வேலையாகவே தாம் இதனை கருதுவதாக அந்த அமைப்பின் ஏற்பாட்டாளர் இத்தேகந்தே சத்தாதிஸ்ஸ தேரர் தெரிவித்துள்ளார்.
Geen opmerkingen:
Een reactie posten