தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 13 mei 2013

வடக்கில் இராணுவக் குறைப்பு! ஜேர்மன் தூதுவரிடம் யாழ்.கட்டளை தளபதி!


மட்டக்களப்பில் தாயை அடித்துக் கொன்ற மகனுக்கு விளக்கமறியல்
[ ஞாயிற்றுக்கிழமை, 12 மே 2013, 02:04.11 PM GMT ]
மட்டக்களப்பு காத்தான்குடியில் தாயை அடித்து கொலை செய்த மகனை எதிர்வரும் 21ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த வியாழக்கிழமை காத்தான்குடியில் பாவா லேனில் வசித்து வந்த ஏ.றஹ்மத்தும்மா (54) என்பவரை அவரது மகனான எம்.இர்ஷாத் என்பவர் தாக்கி அடித்து கொலை செய்திருந்தார்.
சந்தேகநபரை கைது செய்த காத்தான்குடி பொலிஸார் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தினர். இதன் போது எதிர்வரும் 21ம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி என்.எம்.அப்துல்லா உத்தவிட்டுள்ளார் என காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.
சந்தேகநபர் ஒரு புத்தி சுவாதீனமுற்றவர் எனவும் நீதிமன்ற உத்தரவுப்படி, அங்கோடையிலுள்ள உளநல வைத்திய சாலையில் ஒரு மாதம் சிகிச்சை பெற்று அங்கிருந்து வந்து மட்டக்களப்பு போதனா வைத்திய சாலையின் மன நல சிகிச்கை பிரிவின் ஆலாசனைப்படி சிகிச்சை பெற்று வந்தாகவும் அவரது குடும்ப உறவினர்கள் தெரிவித்தனர்.

வடக்கில் இராணுவக் குறைப்பு! ஜேர்மன் தூதுவரிடம் யாழ்.கட்டளை தளபதி!
[ ஞாயிற்றுக்கிழமை, 12 மே 2013, 09:51.23 AM GMT ]
யாழ்ப்பாணத்தின் தற்போதைய நிலைவரங்கள் குறித்து இலங்கைக்கான ஜேர்மன் தூதுவர் டாக்டர் ஜெர்கன் மொர்ஹார்டிற்கு யாழ் கட்டளைத் தளபதியினால் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு யாழ்ப்பாணம் சென்றுள்ள ஜேர்மன் தூதுவர் யாழ். கட்டளைத் தளபதி மஹிந்த ஹத்துருசிங்கவை சந்தித்து கலந்துரையாடியுபோது இராணுவத்தினரின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளதாகவும் நல்லிணக்கத்திற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் யாழ் கட்டளைத் தளபதி தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பொருளாதார அபிவிருத்தி, புனர்வாழ்வு போன்ற பல்வேறு விடயங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதுடன் யுத்தத்தின் பின்னர் பிரதேசத்தின் அபிவிருத்திப் பணிகளில் படையினர் பாரியளவு பங்களிப்பு வழங்கி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten