[ புதன்கிழமை, 15 மே 2013, 03:44.55 AM GMT ]
கச்சதீவினை மீள பெறுவது தொடர்பில் இந்தியா மீள்பரிசீலனை செய்யும் என்று இந்திய அமைச்சர் வீ.நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
சென்னையில் வைத்து செய்தியாளர்களிடம் உரையாற்றும் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இலங்கையுடன் இணைந்து செயற்பட இந்தியா அர்ப்பணிப்புடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் தமிழக சட்ட சபையில் வைத்து கச்சதீவின் அதிகாரம் மீளப் பெற்றுக் கொள்ளப்பட வலியுறுத்தி தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்த அரசாங்கம் இந்த நிலைப்பாட்டை மேற்கொண்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே இது தொடர்பில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு.கருணாநிதி இந்திய உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்தியா இலங்கையுடன் எப்போதும் இணைந்து செயற்படுவதற்கு தயாராக உள்ளது: அசோக் கே காந்தா
[ புதன்கிழமை, 15 மே 2013, 03:27.24 AM GMT ]
இலங்கையில் இருந்து விலகி செல்லவுள்ள இந்திய உயர்ஸ்தானிகர் அசோக் கே காந்தா இதனைத் தெரிவித்துள்ளார்.
மதவாச்சியில் இருந்து மன்னார் மடு வரையில் இந்திய அரசாங்கத்தினால் நிர்மாணிக்கப்பட்ட புகையிரத பாதையின் அங்குரார்ப்பண நிகழ்வு நேற்று இடம்பெற்றது. இதில் உரையாற்றும் போது அசோக் கே காந்தா இதனைத் தெரிவித்துள்ளார்.
தற்போது இந்தியாவும், இலங்கையும் இணைந்து இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கில் மேற்கொண்டு வரும் செயற்திட்டங்களின் ஊடாக, இந்த பிரதேச மக்களின் வாழ்க்கை மேம்படுவதுடன், இயல்பு நிலைக்கு திரும்பிவிடும் என்று அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
அத்துடன் இந்தியா இலங்கையுடன் எப்போதும் இணைந்து செயற்படுவதற்கு அர்ப்பணிப்புடன் இருக்கிறது. இலங்கையும் இந்தியாவும் எந்த சூழ்நிலையிலும் பிரிக்க முடியாத நண்பர்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
Geen opmerkingen:
Een reactie posten