தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 13 mei 2013

விமல் வீரவன்ச இப்போதே தனது பதவியிலிருந்து விலக முடியும் - ஐ.தே.க!


கல்முனை வைத்தியசாலை பணிப்பாளருக்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்டம் ( செய்தித் துளிகள்)
[ திங்கட்கிழமை, 13 மே 2013, 02:28.28 PM GMT ]
கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் ஊழியர்கள் வைத்தியசாலையின் பணிப்பாளருக்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர்.
இனரீதியான செயற்பாடுகள், ஊழியர்கள் மத்தியில் தகாத வார்த்தை பிரயோகங்களை மேற்கொள்ளுதல் மற்றும் தமிழ் பெண் ஊழியர்களிடம் தகாத முறையில் நடந்துகொள்ளுதல் போன்றவற்றை கண்டித்தே இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டோர் வைத்தியசாலை பணிப்பாளர் ஜாபீருக்கு எதிரான கண்டன கோசங்களை எழுப்பியதுடன் அவரை வைத்தியசாலையில் இருந்து வெளியேற்ற சுகாதார அமைச்சு உடனடி நடவடிக்கையெடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
“வைத்தியசாலையை இனரீதியாக நடத்தாது வெளியேறு”, 150 வருடம் பழமையான வைத்தியசாலையை பாழடிக்காதே”, “வைத்திய அத்தியட்சர் அலுவலகம் நடத்துகின்றாயா, மசாஜ் நிலையம் நடத்துகின்றாயா” போன்ற வாசகங்கள் கொண்ட பதாகைகளை ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டோர் ஏந்தியிருந்தனர்.
மட்டக்களப்பில் வீசிய மினி சூறாவளி- மூவர் படுகாயம்
மட்டக்களப்பில் வீசிய காற்றுக் காரணமாக சில வீடுகள் சேதமடைந்துள்ளதுடன் மூவர் படுகாமடைந்துள்ள அதேவேளை சில பகுதிகளுக்கான மின் விநியோகமும் துண்டிக்கப்பட்டுள்ளது.
இன்று அதிகாலை வீசிய கடும் காற்று காரணமாக கிரான்குளம் மற்றும் வெல்லாவெளி பிரதேசத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் உட்பட மூவர் படுகாயமடைந்துள்ளதுடன் சில பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்ட நிலையில் அவற்றினை சீர்செய்யும் பணிகள் இடம்பெற்று வருகின்றன.
மண்முனைப்பற்று பிரதேசத்துக்குட்பட்ட கிரான் பகுதியில் வீடு ஒன்றின் மீது தென்னை மரம் வீழ்ந்ததில் வீட்டில் வசித்துவந்த பொலிஸ் அதிகாரி ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
வெல்லாவெளி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் வைரமுத்து வாசன் (44வயது) என்பவரே படுகாயமடைந்துள்ளார். படுகாயமடைந்தவர் ஆரையம்பதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதேநேரம் வீட்டில் இருந்தவர்களுக்கு எந்தவித ஆபத்துக்களும் ஏற்படவில்லை.
இதேபோன்று வெல்லாவெளி பிரதேசத்துக்குட்பட்ட பலாச்சோலை, பாலையடிவட்டை ஆகிய பகுதிகளில் வீசிய காற்றுக் காரணமாக வீடுகளின் ஓடுகள் வீழ்ந்ததில் இருவர் படுகாயமடைந்துள்ள அதேவேளை மூன்று வீடுகள் சேதமடைந்துள்ளன.
காற்றுக் காரணமாக பெண்ணொருவரும் ஆணொருவரும் படுகாயமடைந்த நிலையில் களுவாஞ்சிகுடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதில் பெண் மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலை பணிப்பாளர் சுகுணன் தெரிவித்தார்.
இதேவேளை கடும் காற்றுக் காரணமாக பல இடங்களில் மின்சார தூண்கள் சேதமடைந்துள்ள நிலையில் அவற்றினை சீர்செய்யும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மின்சாரசபை தெரிவித்தது.
மண்முனைப்பற்று, களுவாஞ்சிகுடி, வெல்லாவெளி ஆகிய பகுதியில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உடனடியாக பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் மின்சாரசபை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
வெளிமாவட்டத்தைச் சேர்ந்தவர்களின் நடவடிக்கைகளால் வாகரை மீனவர்களின் தொழில் பாதிப்பு
மட்டக்களப்பு வாகரைப் பிரதேச கடலில் வெளி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் கடல் அட்டை பிடிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதனால் தங்களது அன்றாட மீன் பிடித் தொழிலில் மட்டுமல்லாது கரை வலை மீன்பிடியிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கதிரவெளி மீன்பிடி சங்கத் தலைவர் எம்.சுப்பிரமணியம் கவலை தெரிவித்துள்ளார்.
இதனை தடுப்பதற்கு கடல் தொழில் திணைக்கள அதிகாரிகள் முன்வரவேன்டும் என்றார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், கற்பிட்டி பிரதேசத்தினை சேர்ந்தவர்கள் கடல் அட்டை பிடிக்கும் நடவடிக்கையில் புச்சாக்கேணி எனும் இடத்தினை தளமாகக் கொண்டு தொழில் புரிந்து வருகின்றனர்.
சிலின்டர் மற்றும் சக்தி வாய்ந்த டோர்ஜ் லைட் போன்றவற்றை கருவிகளாக் கொண்டு பயன்படுத்துவதினால் அன்றாடம் கரையோரங்களை நாடும் கல் மீன்கள், சிங்கி இறால் மற்றும் சிறிய மீன் இனங்களை பிடிப்பதில் பாரிய சிரமம் ஏற்பட்டுள்ளதுடன் அவை கரையை நாடாமல் கலைக்கப்படுவதாக தெரிவித்தார்.
இதனை தடுக்கும் முகமாக பிரதேசத்தின் ஐந்து சங்கங்கள் இணைந்து எதிர்ப்பு தெரிவித்தும் பலனின்றி போயுள்ளதாகவும் இந்நிலமை தொடர்ந்து நீடித்தால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.


விமல் வீரவன்ச இப்போதே தனது பதவியிலிருந்து விலக முடியும் - ஐ.தே.க
[ திங்கட்கிழமை, 13 மே 2013, 03:12.42 PM GMT ]
வடக்கில் தேர்தல் இடம்பெற்றால் அரசாங்கத்திலிருந்து விலகுவதாக கூறிய விமல் வீரவன்ச, இப்போதே தனது பதவியிலிருந்து விலக முடியும் என ஐக்கிய தேசியக் கட்சியின் ஊவா மாகாணசபை உறுப்பினர் கே.வேலாயுதம் தெரிவித்தார்.

அரசில் அங்கம் வகிக்கும் அமைச்சர் விமல் வீரவன்சவையே முதலில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்ய வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சியின் ஊவா மாகாண சபை உறுப்பினர் கே. வேலாயுதம் மேலும் தெரிவித்தார்.
ராஜகிரியவில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
வட மாகாண சபைக்கான தேர்தல் இடம்பெற்றால், தான் அரசாங்கத்திலிருந்து விலகுவதாக விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். எனினும் தற்போதும் அரசாங்கத்திலேயே வீரவன்ச இருக்கின்றார், அவரை தான் முதலில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்ய வேண்டும்.
ஏனெனில் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் வீரவன்ச போன்றவர்களினால் தான் பிரிவினைவாதம் பேசப்படுகின்றது. ஏனெனில் வடமாகாணம் இலங்கையின் ஒரு பகுதி இல்லை என்பதையே அவர் சுட்டிக்காட்டுகினறார். இது இலங்கையின் ஐக்கியத்திற்கு எதிரான கருத்தாகும்.
யுத்தம் முடிந்துவிட்டது நாட்டில் தமிழர், சிங்களவர் மற்றும் முஸ்லிம்கள் எல்லோரும் ஒற்றுமையுடனும் சமாதானத்துடனும் வழ முடியுமென ஜனாதிபதி கூறுகின்றார். இந்நிலையிலேயே அரசாங்கத்தில் பிரிவினைவாத செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன என அவர் மேலும் தெரிவித்தார்.

Geen opmerkingen:

Een reactie posten