தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 13 mei 2013

வட மாகாண சபை தேர்தல் நடத்தப்படுமா? அல்லது மீண்டும் ஏமாற்றப்படுமா?


மேற்குலக நாடுகளிடம் நிதி பெற்றுக் கொண்டதை நிரூபிக்க முடியுமா?: பொதுபல சேனா சவால்
[ திங்கட்கிழமை, 13 மே 2013, 03:19.29 PM GMT ]
மேற்குலக நாடுகளிடம் நிதி திரட்டியதாக நிரூபித்தால், இரண்டு மணிநேரத்துக்குள் பொதுபலசேனா அமைப்பை கலைத்துவிடுவதாக அதன் செயலாளர் கலபோடஎத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
நோர்வே, அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்தைய நாடுகளிடம் பொதுபல சேனா நிதி திரட்டியதாக அமைச்சர் விமல் வீரவன்ச குற்றம் சாட்டியிருந்தார்.
முடிந்தால் இதனை நிருபிக்கும் படி, வீரவன்சவுக்கு தாம் சவால் விடுவதாகவும் அமைப்பின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.
தமது அமைப்பு மேற்கத்தைய நாடுகளிடம் இருந்து ஐந்து சதத்தைக் கூட பெறவில்லை எனவும் தேரர் கூறியுள்ளார்.
எது எவ்வாறு இருப்பினும் விமல் வீரவன்ச இந்தியாவின் சிவசேனா அமைப்புடன் தொடர்பில் உள்ளதா என்ற சந்தேகம் இருப்பதாக ஞானசார தேரர் குறிப்பிட்டார்.
பொதுபல சேனா குறித்து விமல் வீரவன்சவைப் போல சிலர் கூறிய விடயங்கள் அனைத்தும் பொய் எனவும் கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வட மாகாண சபை தேர்தல் நடத்தப்படுமா? அல்லது மீண்டும் ஏமாற்றப்படுமா?
[ திங்கட்கிழமை, 13 மே 2013, 03:32.21 PM GMT ]
எதிர்வரும் செப்டம்பர் மாதம் வட மாகாண சபைத் தேர்தலை நடத்தவுள்ளதாக இந்தியாவிடம் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ உறுதிமொழி வழங்கியுள்ளார்.
இந்நிலையில், நீதிமன்றத்தின் ஊடாக தேர்தலை ஒத்திவைத்து, இந்தியாவை மீண்டும் ஏமாற்றுவதற்கு தயாராகி வருவதாக ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் கோரிக்கைக்கு அமைய, இந்த தேர்தலுக்கு எதிராக அரசாங்கத்தின் கூட்டணி கட்சியான அமைச்சர் விமல் வீரவன்சவின் தேசிய சுதந்திர முன்னணின் தடையுத்தரவு ஒன்றை பெற தயாராகி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
வடக்கில் குடியிருந்து தற்பேது இடம்பெயர்ந்துள்ள சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களின் பெயர்கள் வட மாகாணத்திற்கான வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படவில்லை என்பதால், அவர்களின் அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாகவும் இதனால் தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் எனவும் அந்த கட்சியின் நீதிமன்றத்தில் வழக்கை தாக்கல் செய்ய தயாராகி வருகிறது.
வட மாகாண சபைத் தேர்தலை நடத்துவதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இதற்கு முன்னரும் பல தடவைகள் இந்திய தலைவர்களுக்கு வாக்குறுதி வழங்கியிருந்தார். எனினும் பல காரணங்களை கூறி அதனை ஒத்திவைத்து வந்தது போல், இம்முறையும் செயற்பாடுகளை முன்னெடுத்து வருகிறார்.
பொதுநலவாய நாடுகளின் உச்சி மாநாட்டை இலங்கையில் நடத்த இந்தியாவின் ஆதரவை பெற்றுக்கொள்வதற்காகவே செப்டம்பர் மாதம் வட மாகாண சபைத் தேர்தலை நடத்துவதாக ஜனாதிபதி இந்தியாவிடம் கூறியிருந்தார் எனவும் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten