[ புதன்கிழமை, 15 மே 2013, 02:09.38 AM GMT ]
செப்டம்பர் மாதத்தில் வட மாகாணசபைத் தேர்தல் நடைபெறும் என தேசிய மொழிகள் அமைச்சர் வாசுதேவ நாணக்கார தெரிவித்துள்ளார்.
வட மாகாணசபைத் தேர்தல் நடாத்தும் அரசாங்கத்தின் திட்டங்களில் மாற்றமில்லை.
உரிமை என்று பேசிக்கொண்டு இழப்பதற்கு எதுவும் அற்ற நிலையையே எமது அரசியல் தலைமைகள் எமக்கு ஏற்படுத்தி தந்துள்ளதாக மீள்குடியேற்றி பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.
காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் ஜனாதிபதியின் கீழே காணப்படுகின்றன. மாகாணசபைகளுக்கு இந்த அதிகாரங்கள் வழங்கப்படக் கூடாது என சில கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.
எனினும், இது வட மாகாணசபைத் தேர்தலை நடாத்த தடையாக அமையாது என அவர் குறிப்பிட்டுள்ளார். மத்திய, வடமத்திய மற்றும் வட மாகாணசபைத் தேர்தல்களை நடாத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
இலங்கையில் அழகானதும் வறுமை கொண்டதுமான மாவட்டமாக மட்டக்களப்பு உள்ளது: முரளிதரன்
[ புதன்கிழமை, 15 மே 2013, 01:54.45 AM GMT ]
பட்டிப்பளை இடம்பெற்ற அடிக்கல் நடும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மட்டக்களப்பில் உற்பத்தி செய்யப்படும் நெல்லை கொள்வனவு செய்யும் நோக்கில் நெல்களஞ்சியசாலைகளை அமைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகளவான நெல் உற்பத்தியை வளங்கும் படுவான்கரை பிரதேசத்தினை இலக்காக கொண்டு இந்த நெல் களஞ்சியங்கள் அமைக்கப்பட்டுவருகின்றன.
மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் மேற்கொண்ட முயற்சியின் பயனாக பட்டிப்பளை பிரதேசத்தில் சுமார் ஒரு கோடியே 90 இலட்சம் பெறுமதியில் நெல்களஞ்சியம் அமைக்கும் பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன.
மணற்பிட்டி சந்தியில் இடம்பெற்ற இது தொடர்பான நிகழ்வில் பட்டிப்பளை பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரெட்னம் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். சிறப்பு அதிதியாக கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் குலசேகரம், மீள்குடியேற்ற அதிகாரசபையின் பணிப்பாளர் சத்தியவரதன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
அமைக்கப்படும் இந்த நெல் களஞ்சியங்கள் கூட்டுறவு சங்கங்கள் மூலம் நிர்வகிக்ககூடியதாக வழங்கப்பட்டுள்ளது.
எதிர்காலத்தில் பட்டிப்பளை பிரதேசத்தில் உற்பத்தி செய்யப்படும் நெல்லினை கூட்டுறவுச்சங்கம் மூலம் வாங்குவதை நோக்காக் கொண்டு இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.
எமது எதிர்கால நிலைமைகள் தொடர்பில் நாங்கள் சிந்திக்க வேண்டும். நடந்தவைகளை பேசிக்கொண்டு இன்னும் நாங்கள் காலத்தினை கடத்திக்கொண்டிருந்தால் அது எமது எதிர்கால சந்ததியினருக்கு செய்யும் துரோகமாகும்.
நாங்கள் ஏனைய சமூகங்களைப்போன்று தூரநோக்கு சிந்தனையுள்ளவர்களாக மாறும்போதே எமது சமூதாயம் அனைத்து உரிமைகளையும் பெற்ற சமூகமாகமாறும்.
எமது மாவட்டம் வறுமையில் முதல் மாவட்டமாக மாறியுள்ளது. இதனை மாற்றவேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உள்ளது. இலங்கையில் அழகான மாவட்டமாகவும் அனைத்து வளங்களைக் கொண்ட மாவட்டமாகவும் மட்டக்களப்பு மாவட்டம் உள்ளது. ஆனால் இங்குதான் வறுமையும் அதிகமாகவுள்ளது. இந்நிலையை மாற்ற வாழ்வாதார திட்டங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும். அதற்கான பணிகளை நான் மேற்கொண்டு வருகின்றேன்.
இந்த நெல் களஞ்சியடி சாலையில் 6000 நெல் மூடைகளை சேமிக்க முடியும். இதன் மூலம் கொள்வனவு செய்யும் நெல்லை அனுப்பிவிட்டு மேலும் சேமிக்க முடியும். இந்த நெல் களஞ்சியங்கள் மூலம் இப்பிரதேச விவசாயிகள் பெரும் பயனை பெறமுடியும் எனவும் அவர் தெரிவித்தார்.
Geen opmerkingen:
Een reactie posten