[ புதன்கிழமை, 15 மே 2013, 02:11.19 AM GMT ]
கனடாவில் வீதியொன்றுக்கு 'வன்னிவீதி' எனப் பெயர் சூட்டப்பட்டு தமிழ் மக்கள் கௌரவப்படுத்தப்பட்டுள்ளனர்.
ஆனால், இலங்கையில் தமிழர்கள் கணிசமாக வாழும் தேசிய தலைநகரில் வீதியொன்றுக்கு சட்டவிதிகளின் படிகூட 'தமிழ்ச் சங்க வீதி'எ னப் பெயரிடப்படுவது தடுக்கப்பட்டுள்ளது என ஜனநாயக மக்கள் முன்னணியின் உபபொதுச் செயலாளரும், கொழும்பு மாநகரசபை உறுப்பினருமான சண். குகவரதன் தெரிவித்துள்ளார்.
13ம் திருத்தச் சட்டத்தின் அதிகாரங்களை அசராங்கம் பறித்து வருவதாக மேல் மாகாண சபையின் ஐக்கிய தேசியக்கட்சி உறுப்பினர் சீ.வை. ராம் தெரிவித்துள்ளார்.
இவ்வாறானதோர் நிலையில் தமிழ் மக்களுக்கு நியாயம் கிடைப்பதென்பது ஒருபோதும் நடக்காத காரியமென்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்றும் இவர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, சண். குகவரதன் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
வடக்கில் அரசாங்கம் மாகாணசபைத் தேர்தலை நடத்துமா? என்பதும் சந்தேகத்துக்குரியதாகவே உள்ளது. யுத்தம் முடிந்து நான்கு வருடங்கள் கடந்துவிட்ட நிலையிலும் கூட தமிழ் மக்களின் வாழ்வில் இன்னும் விடியல் ஏற்படவில்லை.
நமது தலைநகர் கொழும்பில் வீதியொன்றுக்கு 'தமிழ்ச் சங்க வீதி' எனப் பெயரிடுவதற்கு நமது கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் வேலணை வேணியன் அவர்களின் முயற்சியால் கொழும்பு மாநகரசபையில் ஏகமனதான பிரேரணை நிறைவேற்றப்பட்டு பெயர்ப்பலகை திரை நீக்கம் செய்யவிருந்த தருணத்தில், இது பேரினவாத சக்திகளால் தடுத்து நிறுத்தப்பட்டது.
இன்று தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார இந்த விடயத்தை பொறுப்பேற்று இது தொடர்பாக நியாயம் பெற்று தருகின்றோம், பொறுமையாக இருங்கள் என நமது தலைவர் மனோ கணேசனிடம் வேண்டுகோள் விடுத்தும்கூட, கடந்த ஆறு மாதங்களாக இன்னமும் நியாயம் நிலைநாட்டப்படாத நிலைமை நிலவுகிறது.
நம் நாட்டில் சட்டப்படி மாநகரசபையில் நிறைவேற்றப்பட்ட ஒரு பிரேரணை மூலமாகக்கூட ஒரு வீதிக்கு பெயர் சூட்ட முடியாமல் உள்ளது. இதற்கும் மாகாண அரசும், மத்திய அரசும் தடை போடுகின்றன.
ஆனால், அந்நிய நாடான கனடாவில் ஒரு வீதிக்கு 'வன்னிவீதி;' எனப் பெயர் சூட்டி தமிழ் மக்கள் கௌரவப்படுத்தப்பட்டுள்ளார்கள். வெளிநாட்டவர்களுக்கு உள்ள இந்த மகிழ்ச்சிக்குரிய பரந்த மனப்பான்மை, தமிழர்களின் சொந்த நாடான இலங்கையில் ஆட்சி செய்கின்ற அரசுக்கும், இங்குள்ள பேரினவாத சக்திகளுக்கும் இல்லை.
இந்தச் செயற்பாடு தமிழர்களுக்கு எதையும் வழங்கக்கூடாதென்ற, இலங்கை அரசின் இறுக்கமான இனவாதமான மனநிலையை வெளிப்படுத்தியுள்ளது.
இந்தச் செயற்பாடு தமிழர்களுக்கு எதையும் வழங்கக்கூடாதென்ற, இலங்கை அரசின் இறுக்கமான இனவாதமான மனநிலையை வெளிப்படுத்தியுள்ளது.
எனவே, வடக்கில் மாகாணசபைத் தேர்தல் நடத்தப்படப் போவதில்லை என்றும், அப்படியே நடத்தப்பட்டாலும் சட்டப்படி 13ம் திருத்தத்தில் உள்ள அதிகாரங்கள் தமிழ் மக்களுக்கு கிடைக்கப்போவதில்லை என்பதும் தெட்டத்தெளிவாகத் தெரிகின்றது.
தமிழ் மக்களும் எமது நாட்டு மக்கள். அவர்களும் உரிமைகளோடும், அதிகாரங்களோடும் வாழ வேண்டும் என்ற மனப்பான்மை பேரினவாத சக்திகளுக்கு கிடையாது என சண். குகவரதன் தெரிவித்துள்ளார்.
13ம் திருத்தச் சட்டத்தின் அதிகாரங்களை அரசாங்கம் பறித்து வருகின்றது: சீ.வை. ராம்
[ புதன்கிழமை, 15 மே 2013, 02:12.15 AM GMT ]
நாட்டின் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கில் 13ம் திருத்தச் சட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. எனினும், இந்த அதிகாரங்களை அரசாங்கம் பறித்து வருகின்றது.
உத்தேச 19ம் திருத்தச் சட்டத்தின் மூலம் காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை அரசாங்கம் பெற்றுக்கொள்ள முயற்சிக்கின்றது.
வாழ்க்கைச் செலவு பாரியளவில் உயர்வடைந்துள்ளது.
எனினும், அதற்கு ஏற்ற வகையில் மக்களின் வருமானம் உயர்வடையவில்லை.
மின்சாரக் கட்டண உயர்வினால் மக்கள் எதிர்நோக்கி வரும் பாதிப்புக்களுக்கு அரசாங்கம் உரிய தீர்வுகளை வழங்கத் தவறியுள்ளது என சீ.வை.ராம் குற்றம் சுமத்தியுள்ளார்.
Geen opmerkingen:
Een reactie posten