தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 15 mei 2013

அடிமைத்தனத்திலிருந்து மீள்வதா இல்லையா என்பதனை மக்களே தீர்மானிக்க வேண்டும்: ரணில்


எனது தேவைக்காக தேர்தல் நடத்த முடியாது! – தேர்தல் ஆணையாளர்
[ செவ்வாய்க்கிழமை, 14 மே 2013, 03:00.20 PM GMT ]
எனது தேவைக்காக வடக்கில் தேர்தல் நடத்த முடியாது என இலங்கையின் தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
வட மாகாணசபைத் தேர்தல் குறித்து இதுவரையில் அறிவிக்கப்படவில்லை.
எனக்கு விருப்பமான முறையில் தேர்தல் நடத்த முடியாது.
அரசியலமைப்பு, நீதிமன்றம் அல்லது நிறைவேற்று அதிகாரங்களின் கட்டளைப் பிரகாரமே தேர்தல் நடத்த முடியும் என குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் ஜுன் மாதம் 1ம் திகதி தேர்தல் தினம் அனுஸ்டிக்கப்படவுள்ளது.
இதனை முன்னிட்டு இராஜகிரியவில் அமைந்துள்ள தேர்தல் செயலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
2011 வாக்காளர் பட்டியல் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளதாகவும், 2012ம் ஆண்டு அவ்வாறு செய்யாவிடினும் 1919 என்ற அரச தகவல் அழைப்பு இலக்கத்திற்கு அழைத்து அது குறித்து தகவல் பெற முடியும் எனவும் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.

அடிமைத்தனத்திலிருந்து மீள்வதா இல்லையா என்பதனை மக்களே தீர்மானிக்க வேண்டும்: ரணில்
[ செவ்வாய்க்கிழமை, 14 மே 2013, 02:59.23 PM GMT ]
அடிமைத்தனத்திலிருந்து மிள்வதா இல்லையா என்பதனை இந்த நாட்டு மக்களே தீர்மானிக்க வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
தற்போதைய அரசாங்கத்தின் ஊழல் மோசடிகளினால் மக்கள் மேலும் மேலும் அடிமைகளாக்கப்பட்டுள்ளனர். பவித்ராதேவி மின்சாரக் கட்டணத்தை உயர்த்தியதன் காரணமாக எலிசபெத் மகாராணி இலங்கை வர அச்சமடைந்துள்ளார்.
எலிசபத் மகாராணிக்குக்கூட நாட்டு மக்கள் அனுபவிக்கும் துயரங்கள் புரிகின்றது. அந்த கால அரசியல்வாதிகள் செல்வந்தர்களிடம் திருடி, ஏழைகளுக்கு வழங்கினர்.
தற்போதைய ராஜபக்ச அரசாங்கம் ஏழைகளிடமிருந்து திருடி, ஊழல் பேர் வழிகளுக்கு வழங்கி வருகின்றது என ரணில் விக்ரமசிங்க குற்றம் சுமத்தியுள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten