தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 1 mei 2013

பெற்றோரை பலியெடுத்த ஓரினக் காதல் !









தமது காதலை தொடரவேண்டும் என்றால் சூரிய பண்டாரவையும் அவரது மனைவியையும் கொலைசெய்யவேண்டும் என்று அவர்களது மகளிடமே கூரியுள்ளார் ரூபிகா. இதனை ஏற்றுக்கொண்டுள்ளார் மூத்த மகள். கடந்த 19ம் திகதி மாலை அரை போத்தல் சாராயத்துடன் வந்த ரூபிகா, காட்டுக்கு சென்று ஏதாவது வேட்டையாடலாம் என்று சூரிய பண்டாரவை கேட்டுள்ளார். அவரும் சற்றும் சந்தேகப்படாமல் கூடவே சென்றுள்ளார். காட்டிற்குச் செல்லும் வேளை அவர் கூரிய கத்தி மற்றும் உருட்டுக்கட்டை ஒன்றையும் எடுத்துச் சென்றுள்ளார். காட்டில் வைத்து ஒரு இடத்தில் சாராயத்தை இருவரும் அருந்தியுள்ளனர். சற்றும் எதிர்பார்க்காத நேரத்தில் ரூபிகா சூரிய பண்டாரவை போட்டுத்தள்ளிவிட்டு , அருகில் இருந்த புதருக்குள் அவர் உடலை மறைத்து வைத்துவிட்டு. வீட்டுக்குச் சென்றுள்ளார். அங்கே கதவு பூட்டப்பட்டு இருந்ததால் ஜன்னல் வழியாக அவர் உள்ளே நுளைந்துள்ளார். அங்கே தூக்கத்தில் இருந்த சூரிய பண்டாரவின் மனைவி ஜீவனியையும் தீர்த்துக்கட்ட, கோடரி ஒன்றை தேடியுள்ளார் ரூபிக்கா. கோடரியை தேடி எடுத்து கொடுத்துள்ளார் மூத்த மகள்( அதாவது அம்மாவைக் கொலைசெய்ய)

பின்னர் என்ன நடந்திருக்கும் என்று நாம் சொல்லி புரியவேண்டியது இல்லை ! கோடரியால் ஜீவனியை போட்டுத்தள்ளிவிட்டு தனது காதலி மற்றும் காதலியின் 8 வயது தங்கை ஆகியோருடன் ரூபிக்கா ஜா-எல என்னும் பிரதேசத்துக்குச் சென்றுவிட்டார். அங்கே சென்ற பொலிசார் அவரை கைதுசெய்துள்ளார்கள். இதேவேளை ரூபிகாவின் செயல்பாடுகள் அனைத்தும் ஒரு ஆணைப் போல உள்ளதால், ரூபிகா ஒரு ஆணா இல்லைப் பெண்ணா என்று முதலில் பரிசோதனை நடத்துமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கொல்லப்பட்ட தம்பதிகளின் மூத்த மகளையும் பொலிசார் கைதுசெய்து விசாரனை நடத்திவருகின்றனர். அவர்களுடைய 8 வயது மகள் உறவினர்கள் வீட்டுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார் என மேலும் அறியப்படுகிறது. "அன்னையும் பிதாவும் முன்னெறி தெய்வம் என்பார்கள்" ஆனால் இலங்கையில் நடப்பதைப் பார்தால் அதிர்சியாக உள்ளது. மேலத்தேய கலாச்சாரங்களை மிஞ்சும் அளவு அங்கே சீரழிவுகள் தலைவிரித்து ஆடுகிறது. இச் சிங்கள கலாச்சாரமானது தமிழ் கலாச்சரத்தோடு கலக்கும் இடத்தில் என்ன நிகழுமோ தெரியவில்லை ! 

அதிர்வுக்காக

வல்லிபுரத்தான்.




Geen opmerkingen:

Een reactie posten