இந்நிலையில், சீன படையினர் தற்போது லடாக் பகுதியில் 5வது கூடாரத்தை அமைத்துள்ளதாகவும், கூடாரம் அமைக்கப்பட்ட இடத்தில் சீனாவிற்கு சொந்தமான இடம் என்ற அறிவிப்பு பலகையையும் வைத்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதனால் எல்லையில் பதற்றம் அதிகரித்துள்ளது. சீன ராணுவத்தின் தொடர் எல்லை மீறல் குறித்து, நாளை இரு நாட்டு ராணுவ அதிகாரிகள்
இடையே நடைபெறும் பேச்சுவார்த்தையில் முக்கிய விவாதம் நடத்தப்பட உள்ளது. இந்த பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படும் என்றும், வரும் 9 ம் தேதி இந்திய வெளியுவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித்தின் சீன பயணத்திற்கு முன்பே பிரச்னைக்கு தீர்வு காணப்படும் என்றும் மத்திய அரசு அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
ஆனால் பேச்சு வார்த்தைக்கு ஒருபுறம் ஒப்புக்கொண்டுவிட்டு, மறுபுறம் சீன படையினர் தொடர்ந்து அத்துமீறலில் ஈடுபட்டு வருவதும், மேலும் மேலும் கூடாரங்களை அமைத்து வருவதும் இந்திய ராணுவத்திற்கும், அரசுக்கும் சவால் விடுப்பதாகவே உள்ளது. இதனை இந்திய அரசு புரிந்துகொள்ளவில்லையா ? இல்லை ஒரு யுத்தத்தை ஆரம்பிக்கவேண்டுமா என்று அஞ்சுகிறதா தெரியவில்லை. ஆனால் 1960 ம் ஆண்டில் இருந்தே சீனா இவ்வாறு ஊடுருவி, ஊடுருவி பல நூற்றுக்கணக்கான கிலோ மீட்டர் பரப்பை கைப்பற்றிவிட்டது. இம் முறையாவது இந்திய அரசு தகுந்த பதிலடி கொடுக்குமா என்று தெரியவில்லை ! பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும். சீன தளபதிகளோடு பேச்சுவார்த்தை நடத்துவதில் என்ன பயன் இருக்கிறது ? அவர்களுக்கு தெரியமலா சீன இராணுவம் இந்தியப் பகுதிகளுக்குள் ஊடுருவி இருக்கும் என்று எதிர்கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்க விடையம் ஆகும் !
Geen opmerkingen:
Een reactie posten