அதேவேளை, சிறீலங்காவின் பிரதம நீதியரசர் சிரானி பண்டாரநாயக்கா சட்டத்துக்கு முரணாண வகையில் பதவியிலிருந்து அகற்றப்பட்ட போது நீதி அமைச்சராக இருக்கும் ரவூப் ஹக்கீம், பொருத்தமான நடவடிக்கைகள் எடுக்காமல் மௌனம் காத்தார்.
ஆனால், தீடிரென்று தமிழர் நலனில் அக்கறை உள்ளது போல், தமிழர்கள் என்ன செய்ய வேண்டும் என்ன செய்யக்கூடாது என்று உபதேசிக்க முற்படுகிறார்.
சரி அதையும் விடுவோம், வரலாற்றில் என்றுமில்லாதவாறு முஸ்லீம் மக்கள் இன்று சிங்கள பேரினவாதத்தால் பெரும் நெருக்கடிகளை சந்தித்து வருகின்றனர். இதனை தடுப்பதற்கு ரவூப் ஹக்கீம் உருப்படியாக என்ன செய்துள்ளார்.
இந்த தருணத்தில், ரவூப் ஹக்கீம் நீதி அமைச்சராகவோ அல்லது தமிழ் மக்களுக்கு அறிவுரை சொல்வதற்கு தகுதியானவரா என்பதை கீழுள்ள விடயத்தை வாசித்து விட்டு யோசியுங்கள்.
நாற்பது வயதுடைய குமாரி குரே என்னும் பெண்ணுக்கும் ரவூப் ஹக்கீமுக்குமிடையில் இரகசிய தொடர்பு இருந்து வந்தது. ஓரு கட்டத்தில் மது அருந்தி விட்டு, ரோயல் கோட் தொடர்மாடி வீட்டுத் தொடருக்கு வந்த ஹக்கீம் பாலியல் உறவு கொள்ள தான் அனுமதிக்காத காரணத்தால் தன்னை தாக்கியதாக குமாரி குரே கொல்லுப்பிட்டி காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார். அதன் பின்னர் 2005 ஒக்டோபர் மாதம், கொழும்பு கொல்லுப்பிட்டியில் ஹக்கீமுக்கு சொந்தமான கானிவேல் (Carnival )என கூறப்படும் ஐஸ்கிறீம் கடையொன்றில் மர்மமான முறையில் மரணமடைந்ததர். இந்த மரணத்திற்கும் ஹக்கீமுக்கும் தொடர்புகள் உள்ளது என்ற அடிப்படையில் சிறீலங்கா காவல்துறை விசாரணைகளை முடுக்கிவிட்டது. ஆயினும் அரசியல் தலையீடுகள் காரணமாக விசாரணைகள் நீதியாக முறையில் நடாத்தப்படவில்லை.
ஹக்கீமை பணிய வைப்பதற்காக, மகிந்த சகோதரர்கள் இந்த கொலைக் குற்றச்சாட்டை அவ்வப்போது வெளிப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
ரவூப் ஹக்கீம் தொடர்பான குற்றச்சாட்டுக்களை சிறீலங்கா அரசாங்கத்தின் ஊதுகுழல் ஊடகங்களே 2005 ல் முன்வைத்தமை குறிப்பிடத்தக்கது. ஆதாரங்கள் இணைப்பு.
Geen opmerkingen:
Een reactie posten