அசாத் சாலி சிறையில் உண்ணாவிரதப் போராட்டம்?- வைத்தியசாலையில் அனுமதி
[ வெள்ளிக்கிழமை, 03 மே 2013, 02:38.44 AM GMT ]
கைது செய்யப்பட்டுள்ள முஸ்லிம் தமிழ்த் தேசிய முன்னணியின் தலைவர் அசாத் சாலி சிறையில் உண்ணாவிரத போராட்டத்தை நடத்துவதாக தெரிவிக்கப்படுகிறது.
அவரது உறவினர்கள் நேற்று இதனைத் தெரிவித்துள்ளனர். தாங்கள் கொண்டு சென்ற உணவையும், காவற்துறையினரால் வழங்கப்பட்ட உணவையும் அவர் ஏற்க மறுத்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
தமிழீழ விடுதலைப் புலிகளினால் சுட்டு வீழ்த்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ‘லயன் எயார்’ விமானத்தின் பாகங்களைத் தேடும் பணிகள் 15 வருடங்களின் பின்னர் இன்று வெள்ளிக்கிழமை இரணைதீவு கடற்பகுதியில் ஆரம்பிக்கப்படுவதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய தெரிவித்தார்.
இலங்கைக்கு எதிரான கருத்துக்களை வெளியிட்டதாக தெரிவித்து, அசாத் சாலி கைது செய்யப்பட்டுள்ளார். அவர் இந்த வாரம் பொதுபல சேனா அமைப்புக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய திட்டமிட்டிருந்த நிலையிலேயே இந்த கைது இடம்பெற்றுள்ளது.
இதேவேளை பொதுபல சேனா அமைப்பு தொடர்ர்பில் நேற்று கருத்து வெளியிட்டிருந்த பாதுகாப்பு அமைப்பின் பேச்சாளர் லக்ஸ்மன் உலுகல்ல, அந்த அமைப்பு சமூகங்களுக்கு இடையில் முறுகலை ஏற்படுத்தும் வகையில் நடந்துக் கொள்ளவில்லை என்று தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்திற்கு எதிராக செயற்பட்டமை, இனவாதத்தை தூண்டியமைக்காக அசாத் சாலி கைது செய்யப்பட்டார் – அரசாங்கம்
அரசாங்கத்திற்கு எதிராக செயற்பட்டமை மற்றும் இனவாதத்தை தூண்டியமை ஆகியவற்றுக்காக அசாத் சாலி கைது செய்யப்பட்டார் என அரசாங்கம் அறிவித்துள்ளது.
இனங்களுக்கு இடையில் முரண்பாட்டை ஏற்படுத்தக் கூடிய வகையில் அசாத் சாலி செயற்பட்டதாக தேசிய பாதுகாப்பு தொடர்பான ஊடக மத்திய நிலையத்தின் பணிப்பாளர் லக்ஸ்மன் ஹுலுகல்ல தெரிவித்துள்ளார்.
அசாத் சாலி, கொலன்னாவ பிரதேசத்தில் மறைந்திருந்த போது கைது செய்யப்பட்டார். அசாத் சாலியிடம் குற்ற விசாரணைப் பிரிவினர் விசாரகைளை நடத்தி வருவதாக ஹுலுகல்ல தெரிவித்துள்ளார்.
3ம் இணைப்பு
அசாத் சாலி தேசிய வைத்தியசாலையில் அனுமதி
கொழும்பு மாநகரசபையின் முன்னாள் பிரதி மேயர் அசாத் சாலி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
புலனாய்வுப் பிரிவினால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் அசாத் சாலி சுகவீனமுற்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதனை அடுத்து அசாத் சாலியை புலனாய்வுப் பிரிவினர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அசாத் சாலி உணவு தவிர்ப்புப் போராட்டமொன்றை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
புலிகளால் சுட்டு வீழ்த்தப்பட்ட லயன் எயார் விமானத்தின் பாகங்களை மீட்க இரணைதீவு கடலில் தேடுதல்!
[ வெள்ளிக்கிழமை, 03 மே 2013, 12:00.10 AM GMT ]
1998 செப்டம்பர் மாதம் 29ம் திகதி 48 பயணிகளுடனும் 8 விமான சிப்பந்திகளுடனும் பலாலியில் இருந்து இரத்மலானை நோக்கிப் பயணித்த லயன் எயார் விமானம் புலிகளால் சுட்டு வீழ்த்தப்பட்டதாக சந்தேகிக்கப்படுகிறது.
இரணைதீவு கடலில் வீழ்ந்த விமானத்தில் இருந்த அனைவரும் இறந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
பலாலியில் இருந்து புறப்பட்ட 10 நிமிடங்களின் பின்னர் லயன் எயார் விமானம் காணாமல் போனதோடு அதனூடான தொடர்புகளும் துண்டிக்கப்பட்டன.
லயன் எயார் சேவையை நிறுத்துமாறு புலிகள் முன்னர் மிரட்டல் விடுத்திருந்த நிலையில் இந்த விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது.
சுட்டுவீழ்த்தப்பட்ட விமான பயணிகளின் சடலங்கள் கௌதாரிமுனை கடற்கரையில் புதைக்கப்பட்டதாக முன்னாள் புலி உறுப்பினர் ஒருவர் குறிப்பிட்டிருந்தார்.
இதற்கு முன்னரும் சில தடவைகள் லயன் எயார் விமான பாகங்களை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்டன. ஆனால் சீரற்ற காலநிலை காரணமாகவும் கடல் கொந்தளிப்பாக இருந்ததாலும் அந்த முயற்சிகள் தோல்வியடைந்தன.
அத்துடன், சடலங்கள் புதைக்கப்பட்டதாகக் கூறப்படும் இடம் தோண்டப்பட்ட போதும் எதுவித சடலமும் கண்டுபிடிக்கப்படவில்லை.
விமான பாகங்களைத் தேடி எடுக்கும் பணி இன்று ஆரம்பிக்கப்பட உள்ளதோடு இதற்கென கொழும்பிலிருந்து கடற்படை அடங்கலான விசேட குழு அங்கு செல்வதாக இராணுவ பேச்சாளர் தெரிவித்தார்.
காலநிலை தடையாக இருக்காவிட்டால் இன்றும் நாளையும் தேடுதல் பணிகள் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் கூறினார்.
லயன் எயார் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாகக் கூறப்படும் கடற்பகுதிக்கு சுழியோடிகள் சென்று வீடியோ செய்து தகவல் பெற்றுள்ளதோடு பாகங்களை தேடும் பணிகளுக்கு நீதிமன்ற அனுமதியும் பெற்றுள்ளதாக அறிவிக்கப்படுகிறது.
லயன் எயார் விமான பாகங்களைத் தேடும் பணியில் 20 கடற்படை சுழியோடிகளும் தனியார் சுழியோடிகளும் ஈடுபடவுள்ளனர்.
பயங்கரவாத விசாரணைப் பிரிவின் கண்காணிப்புடனும் நாரா நிறுவனம் சமுத்திர தொல்பொருள் பிரிவு என்பவற்றின் பங்களிப்புடனும் இந்தப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன
Geen opmerkingen:
Een reactie posten