காலியில் உள்ள கொத்தலாவல தேசிய பாதுகாப்பு பயிற்சி மையத்தில் பெண் அதிகாரி(லான்ஸ் கோப்பிரல்) மர்மமான முறையில் மரணமடைந்துள்ளார். பெண்கள் விடுதியில் தங்கியிருந்த அவரை இன்று காலை(வியாழக்கிழமை) வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றுள்ளார்கள். இருப்பினும் அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள். குறிப்பிட்ட பெண் ஆழ்ந்து தூங்கும் வேளையில் கட்டில் சட்டத்தில் தனது தலையை மோதிக்கொண்டார் என்றும், இதனால் ஏற்பட்ட கயாத்தால் அவர் உயிரிழந்தார் என்றும் விடுதியின் முகாமையாளர் தெரிவித்துள்ளார். எனினும் இக் கருத்தை ஏற்க்க நீதிபதி மறுத்துவிட்டார்.இந்த மரணத்தில் சந்தேகம் இருப்பதாகத் தெரிவித்த நீதிபதி, முழு விசாரணை ஒன்றை நடத்துமாறு பொலிசாருக்கு உத்தரவிட்டுள்ளார். வரும் 17ம் திகதி சாட்சியங்களை நீதிமன்றில் நிறுத்துமாறும் அவர் மேலும் கட்டளை பிறப்பித்துள்ளார் என அறியப்படுகிறது.
Geen opmerkingen:
Een reactie posten