சிறிலங்காவுடன் இந்திய அரசுத்துறை நிறுவனமான என்ரிபிசி இந்த மாத இறுதியில் இரண்டு முக்கிய உடன்பாடுகளைச் செய்து கொள்ளவுள்ளது.
திருகோணமலை சம்பூரில் 500 மெகாவாட் திறன் கொண்ட அனல் மின் நிலையத்தை அமைப்பதற்காக உடன்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
அயல்நாடுகளின் உட்கட்டமைப்பு வசதிகளில், பொருளாதார மற்றும் மூலோபாய செல்வாக்கை விரிவாக்கிக் கொள்ளும் இந்தியாவின் திட்டத்தின் ஒரு பகுதியே இந்தத் திட்டமாகும்.
மின்சார கொள்முதல் மற்றும் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பான இரு முக்கியமான உடன்பாடுகளே இந்தமாத இறுதியில் செய்து கொள்ளப்படவுள்ளன.
நீண்டகாலம் இழுபறியாக இருந்து வந்த இந்தத் திட்டத்துக்கான உடன்பாடு செய்து கொள்ளப்படுவது முடிவாகி விட்டது என்பதை இந்தியா அரச அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
அதேவேளை, இந்தியா நிர்ணயித்த கூடுதல் விலைக்கு மின்சாரத்தைக் கொள்முதல் செய்ய சிறிலங்கா அரசாங்கம் இணங்கியுள்ளதாக, சிறிலங்காவில் எதிர்ப்புக் கிளம்பியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
Geen opmerkingen:
Een reactie posten