தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 6 mei 2013

பொதுநலவாய நாடுகள் மத்தியில் இலங்கைக்கு சிறந்த ஆதரவு!- இலங்கை


வடக்கு நில அபகரிப்புகளுக்கு தேசிய சமாதான பேரவை கண்டனம்
[ திங்கட்கிழமை, 06 மே 2013, 03:31.40 AM GMT ]
வடக்கில் இடம்பெறும் நில அபகரிப்பு சம்பவங்கள் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தேசிய சமாதான பேரவை அரசாங்கத்தின் இந்த செயற்பாடுகளுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.
சமாதான பேரவை விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடமாகாணத்தின் தமிழ் குடியேற்ற பரம்பலில் மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கில் இந்த நில அபகரிப்புகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொது தேவைகளுக்காக நிலங்கள சுவீகரிக்கப்படுமாக இருந்தால், அது தொடர்பில் நில உரிமையாளர்களுடன் குறித்த பிராந்தியத்தை பிரதிநிதித்துவப் படுத்துகின்ற மக்கள் பிரதிநிதிகளையும் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்த வேண்டும்.
அதன் பின்னர் குறித்த நில சுவீகரிப்புக்காக கால அவகாசம் வழங்குவதுடன், நில உரிமையாளர்களுக்கான நிவாரணமும் வழங்க்கபட வேண்டும்.
ஆனால் அரசாங்கம் தன்னிச்சையான முறையில் இவ்வாறு நில அபகரிப்பில் ஈடுபட்டுள்ளமை வருத்தமளிக்கின்ற விடயம்.
அரசாங்கம் கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கைப் பரிந்துரைகளை முழுமையாக அமுலாக்குவதாக சர்வதேசத்திடம் உறுதி வழங்கியுள்ள நிலையில், குறித்த பரிந்துரைகளுக்கு எதிராக செயற்பட்டு வருகிறது.
நல்லிணக்க பரிந்துரைகளில் பொது மக்களின் காணிகள் மீண்டும்; பொதுமக்களுக்கே வழங்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அரசாங்கம் பொது மக்களுக்கும், நல்லிணக்க பரிந்துரைகளுக்கும் சர்வதேசத்துக்கும் எதிராக செயற்படுவதை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பொதுநலவாய நாடுகள் மத்தியில் இலங்கைக்கு சிறந்த ஆதரவு!- இலங்கை
[ திங்கட்கிழமை, 06 மே 2013, 03:35.48 AM GMT ]
பொது நலவாய நாடுகள் அமைப்பில் அங்கம் வகிக்கின்ற நாடுகள் இலங்கைக்கு சிறந்த ஆதரவினை வெளிப்படுத்தி வருவதாக லண்டனில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகர் கிரிஸ் நோனிஸ் தெரிவித்துள்ளார்.
பொதுநலவாய செயலகத்தில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் கலந்துக் கொண்டதன் பின்னர் ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிடும் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் பொதுநலவாய நாடுகளின் மாநாட்டை நடத்தக்கூடாது என்று கனடா மாத்திரமே கோரிக்கை விடுத்து வருகிறது.
எனினும் ஏனைய 54 நாடுகளும் இந்த மாநாட்டுக்கு ஆதரவளித்துள்ளனர்.
இது இலங்கையின் மீளமைப்புநடவடிக்கைகளுக்கு கிடைத்த சர்வதேச அங்கீகாரம் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் பிரித்தானிய பிரதமர் டேவிட் கெமரூன் கலந்துகு; கொள்வார் என்று அறிவிக்கப்பட்டதன் பின்னரே அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten