[ திங்கட்கிழமை, 06 மே 2013, 05:48.49 AM GMT ]
இதனை தொடர்ந்தும் அனுமதிக்க முடியாத நிலையில் கட்சியின் உயர்பீடம் எதிர்வரும் 8ம் திகதி கூடி தீர்க்கமான முடிவுகளை எடுக்க உள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.
தற்போது கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள கொழும்பு மாநகர சபையின் முன்னாள் பிரதி மேயர் அசாத் சாலியின் விசாரணைகளில் வெளிப்படைத் தன்மை காணப்பட வேண்டும். முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீடக் கூட்டத்தில் இவ்விடயம் குறித்தும் பேசப்பட உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
இது தொடர்பில் ஹசன் அலி எம்.பி. தொடர்ந்தும் கூறுகையில்,
கடந்த கிழக்கு மாகாண சபைச் தேர்தலின் பின்னர் ஆளும் கட்சி அங்கு ஆட்சியமைக்க ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உதவியை நாடியது.
இதன் போது முஸ்லிம் காங்கிரஸ் பல கோரிக்கைகளை முன் வைத்ததுடன் அரசாங்கமும் பல வாக்குறுதிகளை எமக்கு வழங்கியது.
ஆனால் இதுவரையில் அவ் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. மாறாக தொடர்ந்தும் பல்வேறு வகையில் அரசியல் ரீதியான பழிவாங்கல் மற்றும் ஒடுக்கப்படல் போன்ற விடயங்களே இடம்பெறுகின்றன.
இந்த நிலையில் முஸ்லிம் மக்களின் எதிர்பார்ப்புக்கள் அனைத்தும் வீணடிக்கப்படும் நிலையில் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் எதிர்வரும் 8 ஆம் திகதி பாராளுமன்றத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர்கள் கூடி ஆராய்ந்து தீர்மானம் மேற்கொண்டு அதனை ஜனாதிபதிக்கு அறிவிக்க உள்ளனர்.
இக்கூட்டத்தின் போது தற்போது கைது செய்யப்பட்டுள்ள அசாத்சாலி தொடர்பிலும் பேசப்படவுள்ளது.
அண்மையில் முஸ்லிம் மதத்திற்கு எதிராக நடைபெற்ற வன்முறைகள் தொடர்பில் அசாத் சாலி தீவிரமாக குரல் கொடுத்தார்.
இந்நிலையில் அவரை கைது செய்துள்ளமை முஸ்லிம் மக்களிடையே சஞ்சலத்தை ஏற்படுத்தியுள்ளது.
இவர் மீதான விசாரணைகள் வெளிப்படையாக இடம்பெற்று அவரை விடுதலை செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
காணி சுவீகரிப்பு பலாத்காரமானதே! ஆதாரங்களுடன் நிரூபிக்கத் தயார்! வார இறுதியில் வழக்கு தாக்கல்! கூட்டமைப்பு
[ திங்கட்கிழமை, 06 மே 2013, 06:04.34 AM GMT ]
வடக்கில் நடைபெறுவது அரசின் பலாத்கார காணி சுவீகரிப்புத்தான். இவ்வாறு சுவீகரிக்கப்பட்ட காணிகளுக்கு அரசு ஒருபோதும் நட்ட ஈடு வழங்கவில்லை. இதை நாங்கள் ஆதாரங்களுடன் நிரூபிக்கத் தயார். இதற்கு எதிரான வழக்கு இந்த வார இறுதியில் உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்படவுள்ளது என தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
தமது சொந்தக் காணிகளை இராணுவத்தினர் ஆக்கிரமிப்பதை எதிர்க்கும் தமிழ் மக்கள், ஒரு போதும் அரசின் நட்ட ஈட்டை வாங்கமாட்டார்கள்'. இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப் பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.
வடக்கில் ஓர் அங்குலக் காணியைக் கூட அரசு பலாத்காரமாக எடுக்கவில்லை என்றும், நட்ட ஈடு வழங்காமல் காணிகள் எதனையும் அரசு எடுத்திருக்குமாயின், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதனை நிரூபித்துக் காட்டட்டும் என்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்ச நேற்று முன்தினம் தெரிவித்திருந்தார்.
இது குறித்து கருத்து வெளியிட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
குறித்த அமைச்சர் தனது வாதங்கள்தான் சரி என்றால் உயர் நீதிமன்றத்தில் நாம் காணி அபகரிப்புக்கு எதிராக வழக்குகளைத் தாக்கல் செய்த பின்னர் அங்கு வந்து தனது வாதங்களை முன்வைக்கட்டும் என்றும் மாவை சேனாதிராசா கூறினார்.
காணி சுவீகரிப்பு; வழக்கு இந்த வார இறுதியில் - சுமந்திரன் எம்.பி
வலி.வடக்கில் படைத்தரப்பால் பொதுமக்களின் காணி சுவீகரிக்கப்படுவதற்கு எதிரான வழக்கு இந்த வார இறுதியில் உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்படவுள்ளது என்று சட்டத்தரணியும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான எம். ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
வலி.வடக்கு மற்றும் வலி. கிழக்கில் 6 ஆயிரத்து 381 ஏக்கர் காணியை இராணுவத்தினர் படைத் தலைமையகம் அமைப்பதற்காக சுவீகரிக்கவுள்ளனர்.
இந்தக் காணி சுவீகரிப்பு தொடர்பான அறிவித்தல்கள் கடந்த மாதம் 22ம் திகதி வலி. வடக்கு உயர்பாதுகாப்பு வலயப் பகுதியில் ஒட்டப்பட்டுள்ளன.
இதனை எதிர்த்து வலி. வடக்கு மக்கள் கடந்த 29ம் திகதி தெல்லிப்பழை பிரதேச செயலகத்தின் முன்பாக கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றை நடத்தியிருந்தனர்.
அத்தோடு உயர் நீதி மன்றில் 5 ஆயிரம் வழக்குகள் தாக்கல் செய்வதற்கும் இதன்போது முடிவு செய்யப்பட்டிருந்தது.
இதற்கமைய வலி.வடக்கு மக்களினால் வழக்குத் தாக்கல் செய்வதற்குரிய ஆவணங்கள், மற்றும் அவற்றின் பிரதிகள் என்பன வலி. வடக்கு பிரதேச சபையினரிடம் ஒப்படைக்கப்பட்டு வருகின்றன.
இதுவரை இரண்டாயிரம் பேர் வரையில் சரியான ஆவணங்களுடன் பதிவு செய்துள்ளனர். யாழ். மாவட்டத்தை விட்டு வெளி மாவட்டங்களில் வசிக்கும் வலி.வடக்கு மக்களும் வழங்குத் தாக்கல் செய்வதற்கு முனைப்புக் காட்டி வருகின்றனர்.
இதனால், பிரதேச சபையில் இது தொடர்பான பதிவு நடவடிக்கை எதிர்வரும் 7ம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது என்று வலி.வடக்கு பிரதேச சபையின் தவிசாளர் சோ.சுகிர்தன் தெரிவித்தார்.
வலி.வடக்கு பிரதேச சபையில் மக்கள் பதிவுகளை மேற்கொண்ட பின்னர் இந்த வார இறுதியில் வழக்குத் தாக்கல் செய்யப்படும் என்றார் சுமந்திரன்.
Geen opmerkingen:
Een reactie posten