[ திங்கட்கிழமை, 06 மே 2013, 02:56.17 AM GMT ]
நடைபெற உத்தேசிக்கப்பட்டுள்ள வடக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழர்களின் அரசியல் பிரச்சினைக்கு தீர்வு காணக்கூடிய சரியான பிரதிநிதிகளையும் தலைவரையும் தெரிவு செய்யுமாறு ஈ.பி.டி.பியின் தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தின் மீனவ சமவாயத்தை சேர்ந்தவர்களை சந்தித்து பேசும் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள மீன்பிடி பிரதேசங்களை விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இலங்கையின் ஒருமைப்பாட்டை மேம்படுத்தல் மற்றும் மனிதவுரிமைகள் ஆணைக்குழு செயற்பாடுகளை வலுப்படுத்துவது தொடர்பில் சில இணக்கப்பாடுகள் காணப்பட்டுள்ளன.
அத்துடன் யுத்த காலத்தில் இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்ட படகுகளை மீள பெற்றுக் கொடுப்பது தொடர்பிலும் பேச்சுவார்த்தைகள் இடம்பெறுகின்றன. தமிழர்களின் வாழ்வுரிமை மற்றும் அரசியல் தீர்வு விடயங்களில் தொடர்ந்தும் தாம் செயற்பட்டு வருகிறேன்.
காலக்கிரமத்தில் இவற்றுக்கான உரிய தீர்வு வழங்கப்படும்.
இந்த நிலையில் எதிர்வரும் வடமாகாண சபைத் தேர்தலில் உங்களின் பிரச்சினைகளை தீர்க்கக்கூடிய சரியானவர்களை தெரிவு செய்யுங்கள் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா எதிர்வரும் வட மாகாண சபைத் தேர்தலில் முதலமைச்சு வேட்பாளராக போட்டியிடுவார் என்று தகவல்கள் வெளியாகி இருந்த போதும், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு தமது முதலமைச்சு வேட்பாளரை அறிவிக்காமலேயே தேர்தலில் போட்டியிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையின் மனிதவுரிமைகள் ஆணைக்குழு செயற்பாடுகளை வலுப்படுத்துவது தொடர்பில் சில இணக்கப்பாடுகள்
[ திங்கட்கிழமை, 06 மே 2013, 02:24.24 AM GMT ]
பொதுநலவாய நாடுகளின் செயலாளர் காரியாலயம் மற்றும் இலங்கை மனிதவுரிமைகள் ஆணைக்குழு என்பன இதற்கான இணக்கப்பாட்டை கண்டுள்ளன.
இதன்படி, விசேட செயற்பாட்டு திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்கு இரண்டு தரப்பினரும் தீர்மானித்துள்ளதாக இலங்கை மனிதவுரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் பிரதீபா மகாநாமஹேவா தெரிவித்துள்ளது.
இதன் முதல் கட்ட பணிகள் எதிர்வரும் ஆறு மாதங்களி;ல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.
இந்தநிலையில், கடந்த ஏப்ரல் 29 திகதி தொடக்கம் மே மாதம் 3ம் திகதி வரை லண்டன் நகரில் பொதுநலவாய நாடுகளின் பொதுச்செயலாளர் காரியாலயத்தில் விசேட கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தனர்.
இதன்போதே இந்த இணக்கப்பாடு காணப்பட்டுள்ளதாக இலங்கை மனிதவுரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் பிரதீபா மகாநாமஹேவா குறிப்பிட்டுள்ளார்.
Geen opmerkingen:
Een reactie posten