தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 15 mei 2013

தங்காலையில் இன மோதலாக மாறிய காதல் விவகாரம்!!


மட்டக்களப்பில் இந்திய வீடமைப்புத் திட்டம்: உயர்ஸ்தானிகருக்கு கடிதம் அனுப்பி வைப்பு
[ புதன்கிழமை, 15 மே 2013, 08:53.08 AM GMT ]
மட்டக்களப்பு மாவட்டத்தில் இந்திய உதவி வீடமைப்பு திட்டத்தில் முதற்கட்ட கிராமங்கள் தெரிவு தொடர்பாக இந்தியாவுக்கு கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களும், மாகாண சபை உறுப்பினர்களும் தமது  கவலை மற்றும் ஆட்சேபனையை தெரிவித்து இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகருக்கு அவசர கடிதமொன்றையும் அவர்கள் அனுப்பி வைத்துள்ளனர்.

இந்திய உதவி வீட்டுத் திட்டத்தில் கிழக்கு மாகாணத்தில் 4000 வீடுகள்  அமைக்கப்படவுள்ளது.

குறித்த வீடுகளில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 3000 வீடுகள் அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ள நிலையில் முதற்கட்டமாக பெரியபுல்லுமலை (தமிழ் கிராமம்) 109 வீடுகள், உறுகாமம் (முஸ்லிம் கிராமம்) 103 வீடுகள், மங்களாகம (சிங்கள கிராமம்) 89 வீடுகள் என செங்கலடி பிரதேச செயலக பிரிவில் 301 வீடுகள் அமைக்கபடவுள்ளது.  எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை வீடமைப்பு வேலைகள் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான பொன்.செல்வராசா, பா.அரியநேத்திரன், சீ.யோகேஸ்வரன், மாகாண சபை உறுப்பினர்களான இரா.துரைரெத்தினம், கி.துரைராஜசிங்கம், ஜி.கிருஸ்ணபிள்ளை, பிரசன்னா இந்திரகுமார், மா.நடராசா மற்றும் கோ.கருணாகரம் ஆகியோர் கூட்டாக இந்திய உயர் ஸ்தானிகருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் கடந்த மார்ச் மாதம் 7ம் திகதி  துனை உயர்ஸ்தானிகரின் இல்லத்தில் இது தொடர்பாக நடைபெற்ற கூட்டமொன்றில் எடுக்கப்பட்ட தீர்மானத்தை மீறும் வகையில் இந் நடவடிக்கைகள் அமைவதாக தெரிவித்துள்ளனர்.

அக் கடிதத்தில்  தெரிவிக்கப்பட்டுள்ளதாவது

கடந்த மார்ச் மாதம் 7ம் திகதி  இது தொடர்பாக நடைபெற்ற  கூட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

பொருளாதார அபிவிருத்தி துனை அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் இதற்கு தலைமை வகித்தார்.
இந்த  கூட்ட தீர்மானப்படி  மட்டக்களப்பு மாவட்டத்தில் 2000 வீடுகளும் திருகோணமலை மற்றும் மாவட்டங்களில் தலா 1000 வீடுகளும் அமைப்பது என முடிவு எடுக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் முதற்கட்டமாக அமைக்கப்படவுள்ள 300 வீடுகளையும் தலா 100 என்ற அடிப்படையில் வவுணதீவு, கிரான் மற்றும் வெல்லாவெளி ஆகிய பிரதேச செயலக பிரிவுகளில்  அமைப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டது.

வெல்லாவெளி மற்றும் வவுணதீவு பிரதேசங்களில் இதற்கான இடங்களும் துனை அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தலைமையில் நடைபெற்ற கூட்டங்களில் அடையாளமும் காணப்பட்டது.

தற்போது பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சவின் நடவடிக்கையின் பேரில் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட  பிரதேசங்களுக்கு பதிலாக செங்கலடி பிரதேச செயலக பிரிவிலுள்ள மங்களாகம, றூகம், பெரிய புல்லுமலை ஆகிய கிராமங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக அறிகின்றோம்.

மங்களாகம கிராமத்தை பொறுத்தவரை  யுத்த பாதிப்புக்குள்ளாக வில்லை. அது மட்டுமன்றி அம்பாறை மாவட்டத்திற்கு  ஒதுக்கீடு செய்ய தீர்மானிக்கப்பட்ட 1000 வீடுகளும் தற்போது இரத்து செய்யப்பட்டுள்ளது.     

ஏற்கனவே துனை உயர் ஸ்தானிகரின் இல்லத்தில் தாங்களும் கலந்து கொண்ட கலந்துரையாடலின் போது எடுக்கப்பட்ட தீர்மானத்தை மீறும் செயலாகவே உள்ளது. இந்நிலையில்  தற்போது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளை நீதியற்ற நியாயமற்ற செயலாகவே நாம் கருதுகின்றோம் இந்த விடயத்தில் ஆழ்ந்த கவலையையும் ஆட்சேபனையும் தெரிவித்துக் கொள்கின்றோம் என அக்கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தங்காலையில் இன மோதலாக மாறிய காதல் விவகாரம்
[ புதன்கிழமை, 15 மே 2013, 09:16.21 AM GMT ]
தங்காலை, பொது மயான வளாகத்தில் உள்ள மரியவத்தை எனும் தமிழ் கிராமத்திற்குள் புகுந்த சிங்களவர் ஒருவர், அங்கிருந்த நபர் ஒருவரை வெட்டி, குத்தி காயப்படுத்தியுள்ளார்.
இந்த சம்பவம் நேற்று (14) இரவு 9.14 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
மரியவத்தை தமிழ் கிராமத்திற்குள் நுழைந்த சிங்களவர்கள் சிலர், 15 தமிழ்களுடைய வீடுகளையும் ஒரு சிங்களவரது வீட்டையும் அடித்து நொருக்கி சேதப்படுத்தியுள்ளார்.
இந்த தாக்குதலின்போது காயமடைந்த ஆண் ஒருவரும் பெண் ஒருவரும் தங்காலை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய எட்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதில் ஒருவர் தாக்குதலின்போது காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் கைது செய்யப்பட்டு, பொலிஸ் பாதுகாப்பில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மரியவத்தை கிராமத்தில் வசிக்கும் தமிழ் பெண் ஒருவரோடு சிங்களவர் ஒருவர் வைத்திருந்த கள்ளத்தொடர்பு இம்மோதலுக்கு காரணம் என தெரியவந்துள்ளது.
கடந்த 12ஆம் திகதி குறித்த பெண்ணின் மகன், பெண்ணுடன் கள்ளத் தொடர்பு வைத்திருப்பதாக கூறப்படும் சிங்களவரை கூரிய ஆயுதத்தினால் தாக்கி காயப்படுத்தியுள்ளார்.
இந்த தாக்குதலுக்கு பழி வாங்கும் முகமாக மரியவத்தை கிராமத்திற்குள் புகுந்த சிங்களவர்கள் வீடுகளை அடித்து சேதப்படுத்தியுள்ளனர்.
இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் தங்காலை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Geen opmerkingen:

Een reactie posten