தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 8 mei 2013

கடும்போக்கைத் தூண்டுவோர் தொடர்பில் அரசாங்கம் கண்காணிக்கும்!- கோத்தபாய ராஜபக்ச


கொழும்பின் பிரதான பாடசாலை மாணவர் ஒருவர் சக மாணவரின் தாக்குதலுக்கு இலக்காகி பலி
[ புதன்கிழமை, 08 மே 2013, 01:56.10 AM GMT ]
கொழும்பின் பிரதான பாடசாலை ஒன்றைச் சேர்ந்த மாணவர், சக மாணவரின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.
ஒரே வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கு இடையில் ஏற்பட்ட வாக்கு வாதம் கத்திக் குத்து வரையில் நீண்டுள்ளது.
16 வயதான சலக தனுஷ்க என்ற மாணவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். சாதாரண தரப் பரீட்சையில் சித்தியெய்தி உயர்தரத்தில் இணைவதற்காக காத்திருந்த மாணவரே இவ்வாறு கத்திக் குத்துக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.
வெசாக் பௌர்ணமிக்காக தானம் (தன்சல்) வழங்குவது தொடர்பிலான சந்திப்பொன்றின் போது ஏற்பட்ட வாய்த்தர்க்கமே இந்த மோதலுக்கான காரணமாகும்.
ஒரு வீட்டில் தானம் வழங்குவது குறித்து மாணவர்கள் கலந்துரையாடிக் கொண்டிருந்ததாகவும் இதன் போது குறித்த மாணவர்கள் இருவருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மோதிக் கொண்ட மாணவர்களில் ஒருவர் வீட்டிலிருந்த கத்தியை எடுத்து சக மாணவரைத் தாக்கியதாகக் குறிப்பிடப்படுகிறது.

கடும்போக்கைத் தூண்டுவோர் தொடர்பில் அரசாங்கம் கண்காணிக்கும்!- கோத்தபாய ராஜபக்ச
[ புதன்கிழமை, 08 மே 2013, 01:55.56 AM GMT ]
கடும்போக்கைத் தூண்டுவோர் தொடர்பில் அரசாங்கம் தொடர்ந்தும் கண்காணிக்கும் என பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
தமிழ் முஸ்லிம் தேசியக கூட்டமைப்பின் தலைவர் அசாத் சாலி மட்டுமன்றி கடும்போக்குவாதத்தை தூண்டும் ஏனைய நபர்கள் பற்றியும் அரசாங்கம் கவனம் செலுத்தி வருகின்றது.
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அன்று ஆயுதம் ஏந்திய போது, தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் அமிர்தலிங்கம் இளைஞர்களின் பருவக் கோளறாக இந்த போராட்டத்தைக் கருதினார்.
எனினும், இறுதியில் பிரபாகரன் அமிர்தலிங்கத்தையும் கொலை செய்தார்.
தமிழகத்திற்கு சென்று அசாத் சாலி வெளியிட்ட கருத்தின் காரணமாகவே அசாத் சாலி கைது செய்யப்பட்டார்.
பாதுகாப்புச் செயலாளராக தாம் கடமையாற்றும் வரையில் கடும்போக்குவாதத்திற்கு இடமில்லை.
அசாத் சாலியினால் பிரபாகரனாக உருவாக முடியாது, பிரபாகரன்கள் உருவாகுவதற்கோ அல்லது உருவாக்கப்படுவதற்கோ நான் இடமளிக்க மாட்டேன்.
அசாத் சாலி கைத செய்யப்பட்டமைக்காக முதலைக் கண்ணீர் வடிப்போர் பற்றியும் நாம் நன்றாக அறிவோம் என பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten