[ புதன்கிழமை, 08 மே 2013, 12:55.44 AM GMT ]
எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் கேள்விக்கு பதலளித்த பிரதமர் தி.மு.ஜயரட்ன மேலும் தெரிவிக்கையில்,
மன்னார் மாவட்டத்தில் அரசாங்கம் புதிய சிங்கள குடியேற்றங்களை மேற்கொள்ளுவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் டெலோ இயக்கத்தின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் குற்றம் சாட்டியுள்ளார்.
உலகின் பல பாகங்களிலும் புலி இயக்கத்தை மீளக்கட்ட முயற்சிகள் நடப்பதாகவும், யுத்தம் முடிந்த பின் சரணடையாத விடுதலை புலி சந்தேக நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க பயங்கரவாத தடைச் சட்டம் தேவை எனவும் குறிப்பிட்டார்.
ஒரு தமிழ் அரசியல் கட்சி ஆதரவாளரை கொல்ல 2012 மார்ச் 17ம் திகதி இரண்டு புலி உறுப்பினர்கள் திட்டம் தீட்டியமை, தென்னிந்தியாவில் இவ்வாறான நால்வர் டிசெம்பர் 20ம் திகதி கைது செய்யப்பட்டமை ஆகியன இந்த இயக்கத்தை புதுப்பிக்க எடுக்கும் முயற்சிகளை சுட்டிக்காட்டுகின்றன என பிரதமர் தெரிவித்தார்.
இலங்கையில் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைத்திருக்கும் அசாத் சாலியின் கைது தொடர்பில் எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றில் கேள்வி எழுப்பினார்.
துவேஷத்தைத் தூண்டும் வகையிலான பேச்சுகளை தண்டிப்பதற்கு குற்றவியல் சட்டங்களிலேயே இடம் இருக்கிறது என்றும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் பாய வேண்டிய அவசியம் இல்லை என்றும் ரணில் கூறினார்.
நாட்டு மக்களின் இறையாண்மைய காப்பாற்ற ஆயுதங்களை கையிலெடுப்போம் என்றால் அது ஒரு குற்றமா என்று சபையில் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க கேள்வி எழுப்பினார்.
சுதந்திரத்தை பேண ஆயுதங்களை கையில் எடுக்கலாம் என்று ஒரு தரப்பில் கருத்து நிலவுகிறது. அப்படியென்றால் சுதந்திரம் எனும் சித்தாந்தத்தின் அடிப்படையில் ஆயுதம் ஏந்துபவர்களையும் தீவிரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையிலிட வேண்டும் என்று பிரதான எதிர்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான ரணில் விக்ரமசிங்க கூறினார்.
ஆனால் அவரது பேச்சுகள் இனமோதல்களுக்கு வழிவகுக்கும் என்பதாலும், தற்போது நாட்டில் நிலவும் அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தும் வகையில் இருந்ததாலேயே ஆசாத் சாலி கைதுசெய்ப்பட்டுள்ளதாக ரணில் விக்ரமசிங்க அவர்களின் குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் போது பிரதமர் ஜெயரட்ன நாடாளுமன்றத்தில் பதிலளித்தார்.
மன்னார் மாவட்டத்தில் புதிதாக சிங்கள குடியேற்றங்களை மேற்கொள்ள அரசாங்கம் முயற்சி!- செல்வம் எம்.பி
[ புதன்கிழமை, 08 மே 2013, 01:52.29 AM GMT ]
இது தொடர்பில் அவர் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில்,
நாட்டில் இடம் பெற்ற யுத்த காலத்தை தொடர்ந்து வடக்கில் இடம் பெயர்ந்துள்ள தமிழ்,முஸ்ஸிம் மக்கள் இது வரை உரிய முறையில் அரசாங்கத்தினால் மீள் குடியேற்றம் செய்யப்படவில்லை.
இந்த நிலையில் மன்னார் மாவட்டத்தில் இருந்து இடம் பெயர்ந்த மக்கள் உரிய முறையில் மீள் குடியேற்றம் செய்யப்படாத நிலையில் உள்ளனர்.இடம் பெயர்ந்து சென்ற நிலையில் அவர்களுடைய காணிகள் பல படைத்தரப்பினால் அபகரிக்கப்பட்டுள்ளதோடு அதியுயர் பாதுகாப்பு வலையமாகவும் மாற்றப்பட்டுள்ளது.
இதனால் மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த பல ஆயிரக்கணக்காண தமிழ்,மஸ்ஸிம் குடும்பங்கள் இன்று வரை மாவட்டத்திலேயே அகதி வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர்.
மன்னார் மாவட்டத்தில் தமிழ் முஸ்ஸிம் மக்கள் உரிய முறையில் மீள் குடியேற்றம் செய்யப்படாத நிலையில் அரசாங்கம் சிங்கள் குடியேற்றத்தை மேற்கொள்ளுவதற்கு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றர்.
இதற்கு அமைச்சர் ஒருவரும் துனை போவதாக தெரிவிக்கப்படுகின்றது.
மன்னார் மாவட்டத்தில் சுமார் 5 ஆயிரம் சிங்களக் குடும்பங்களை அரசாங்கம் குடியேற்ற திட்டமிட்டுள்ளதாக அறிய முடிகின்றது.
இதன் அடிப்படையில் மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவில் 1500 சிங்கள குடும்பங்களையும்,மடு உதவி அரசாங்க அதிபர் பிரிவில் 1000 சிங்கள குடும்பங்களையும், முசலி பிரதேசச் செயலாளர் பிரிவில் 1500 சிங்கள குடும்பங்களையும் குடியேற்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தற்போது அரசாங்கம் வகித்துள்ள புதிய திட்டங்களுக்கு அமைவாக 2 முஸ்ஸிம் கிராமக்களுக்கு இடையில் ஒரு சிங்கள கிராமத்தையும்,2 தமிழ் கிராமங்களுக்கு இடையில் ஒரு சிங்கள கிராமத்தையும் உறுவாக்க முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழ் முஸ்ஸிம் மக்கள் ஒற்றுமையாக செயற்பட்டு குறித்த சட்டவிரோத குடியேற்றத்தை தடுத்து நிறுத்த வேண்டும்.இந்த குடியேற்றத்திற்கு அமைச்சர் றிஸாட் பதீயுதீன் அவர்களின் -சம்மதம் உள்ளதாக கூறப்படுகின்றது.
அப்படி அவருடைய சம்மதம் அல்லது தலையீடுகள் எவையும் இல்லாது இருந்தால் குறித்த சிங்கள குயேற்றத்தை தடுத்து நிறுத்த அவரால் முடியுமா என ? செல்வம் அடைக்கலநாதன் எம்.பி கேல்வி எழுப்பியுள்ளதாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Geen opmerkingen:
Een reactie posten