[ புதன்கிழமை, 08 மே 2013, 02:00.14 AM GMT ]
மாத்தளை மனித எலும்புக் கூடுகள் தொடர்பில் டி.என்.ஏ பரிசோதனை நடத்தப்பட வேண்டுமென ஜே.வி.பி கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பில் நீதிமன்றில் வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.
1988-1989ம் ஆண்டுகளில் மாத்தளையில் காணாமல் போனவர்களது குடும்ப உறுப்பினர்கள் இன்று நீதிமன்றில் சத்தியக்கடதாசி ஒன்றை சமர்ப்பிக்க உள்ளனர்.
மாத்தளை மனித எலும்புக் கூடுகள் தொடர்பில் நடத்தப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக ஜே.வி.பி அறிவித்துள்ளது.
இதேவேளை, விசாரணைகளின் போது ஜே.வி.பி உறுப்பினர்கள் நேரடியாக நீதிமன்றில் பிரசன்னமாகத் திட்டமிட்டுள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்ட மனித எலும்புக் கூடுகள் மீட்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கொழும்பு வடக்கு பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு திடீர் ஆயுத பயிற்சி
[ புதன்கிழமை, 08 மே 2013, 02:10.37 AM GMT ]
அண்மைக்காலமாக பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது நடத்தப்பட்டு வரும் திடீர் தாக்குதல்களின் எண்ணிக்கை உயர்வடைந்துள்ளது.
எனவே, இந்தத் தாக்குதல்களை கட்டுப்படுத்தும் நோக்கில் கொழும்பு வடக்கில் கடமையாற்றி வரும் அனைத்து பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கும் விசேட ஆயுத பயிற்சி வழங்கப்பட உள்ளது.
பிரதிப் பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தனவின் ஆலோசனைக்கு அமைய இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
கொழும்பு வடக்கைச் சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது எவரேனும் தாக்குதல் நடத்தினால் அவருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் வாரம் முதல் இந்த ஆயுத பயிற்சி வழங்கப்பட உள்ளது.
Geen opmerkingen:
Een reactie posten