[ வெள்ளிக்கிழமை, 17 மே 2013, 12:09.35 PM GMT ]
ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பிரபா கணேசன் மேற்படி தெரிவித்தார்.
மேலும் அவர் தெரிவித்ததாவது,
இந்நாடு பௌத்த சிங்களவர்களுக்கே உரிமையானது எனவும் அரச விழாக்களில் பௌத்த மத வழிபாடுகளே இருக்க வேண்டும் என்றும் ஏனைய மதங்களை அரச விழாக்களில் சம்பந்தப்படுத்தக் கூடாது என்றும் பொதுபல சேனா பகிரங்கமாக அறிவித்துள்ளது.
இது இந்நாட்டின் ஐக்கியத்திற்கு விடுக்கப்பட்டிருக்கும் சவாலாகும். பொதுபல சேனா சம்பந்தமாக கடந்த முறை இடம்பெற்ற கட்சி தலைவர்களின் கூட்டத்தில் சிறுபான்மை கட்சித் தலைவர்களாகிய நாங்கள் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு வந்த போது பொதுபல சேனா, ராவணா பலய போன்ற அமைப்புகள் பற்றி கவலைப்பட தேவையில்லை. அவை வெகு விரைவிலே கலைந்து விடும் என்று ஜனாதிபதி தெரிவித்திருந்தார்.
இருப்பினும் இன்று இவ் அமைப்புகள் நாளுக்கு நாள் சிங்கள பௌத்த இனவாதத்தை முன்னிறுத்தி வருகின்றன. இலங்கை பௌத்த சிங்களவர்களின் நாடென்றும் அதை ஏற்றுக் கொள்ளாதவர்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று கோரிக்கை விடுக்கும் அளவுக்கு செல்கின்றனர்.
இந்நாட்டில் ஜாதி மதங்கள் இல்லை எனவும் நாட்டின் மீது அன்பு கொண்டவர்களும் நாட்டின் மீது அக்கறை இல்லாதவர்களுமாக இரண்டு இனங்களே இருக்கின்றது என கூறிய ஜனாதிபதின் கூற்று இன்று கேள்விக்குறியாயுள்ளது.
இப் பொதுபல சேன தமிழர்களுக்கு சரியான தீர்வை இந்த அரசாங்கம் கொடுக்கவில்லை என்றும் ஊடக அறிக்கையின் மூலமாக வெளிப்படுத்துகின்றது. இது முஸ்லிம் மக்களுக்ளும் தமிழர்களுக்கும் இடையே பிளவுகளை ஏற்படுத்துவதற்காக நடத்தப்படும் நாடகமாகும்.
யுத்தம் முடிவடைந்தவுடன் விட்டுக்கொடுப்புடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டிருந்தால் ஒரு சில விடயங்களையாவது பெற்றுக்கொண்டு மேலதிக உரிமைகளுக்காக களமிறங்கியிருக்கலாம். ஆனால் தமிழ் தேசியம் என்ற போர்வையில் நம்மவர்களும் தமிழ் இனவாதத்தை பேசியதனாலேயே பொதுபல சேனா போன்ற இனவாத அமைப்புபகள் உருவாவதற்கு காரணம் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்
அரசாங்கத்தின் போக்கை கண்டித்து ஜனநாயக ரீதியாக நடத்தும் எதிர்கட்சியின் போராட்டங்கள் வரவேற்கத்தக்கது. நாளை அரசாங்கத்தை வீழ்த்தி எதிர்கட்சியினர் ஆட்சியமைப்பார்களேயானால் அது ஜனநாயகத்திற்குரிய விடயமாகும். ஆனால் 75 வீதம் சிங்கள மக்கள் வாழும் இந்நாட்டில் 15 வீதமாக வாழும் தமிழ் மக்களின் ஒரு சில தலைவர்களும் தமிழ் தேசியம் என்ற போர்வையிலே ஊடகங்களில் முக்கியத்துவம் பெறுவதற்காக தங்களின் அரசியலை நிலை நிறுத்திக் கொள்வதற்காகவும் விடுக்கும் தமிழ் இனவாத ஊடக அறிக்கைகள் அரசாங்கத்தின் மூலமாக சிங்கள மொழியிலே மொழி பெயர்க்கப்பட்டு சிங்கள ஊடகங்களில் வெளியிடப்படுகின்றது. இதனாலேயே சிங்கள மக்கள் மத்தியில் சிங்கள பௌத்த இனவாதம் மேலோங்கி வருகின்றது.
அரசாங்கத்தின் பிழையான கொள்கைகளை அம்பலப்படுத்துவது எதிர்கட்சிகளின் ஜனநாயக ரீதியான செயல்பாடுகளாகும். அரச எதிர்ப்பு என்ற போர்வையில் நாம் தமிழ் இனவாதத்தை முன் வைப்போமானால் பொதுபல சேனா போன்ற அமைப்புகளை சந்திக்க தயாராக இருக்க வேண்டும். மீண்டும் ஒரு யுத்தமோ கலவரமோ ஏற்பட்டால் மிச்சம் சொச்சம் இருக்கும் தமிழர்களும் இந்நாட்டில் இல்லாது போககூடிய அபாயம் உள்ளது என்பதை தமிழ் தலைமைகள் புரிந்து கொண்டு பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும்.

அதே நேரம் பொது பல சேனா, ராவண பலய போன்ற அமைப்புகளை அரசாங்கம் கண்டு கொள்ளாதிருந்தால் இந்த அரசாங்கத்தின் வீழ்ச்சி அவ் அமைப்புகள் மூலமாகவே ஏற்படும் என்பதை வெகுவிரைவில் புரிந்து கொள்ள வேண்டி வரும்
வடமாகாணம் மட்டும்தான் தமிழர் தாயகமா?: பா.அரியநேந்திரன்
[ வெள்ளிக்கிழமை, 17 மே 2013, 12:20.19 PM GMT ]
வடமாகாணசபைத் தேர்தல் சம்பந்தமாக சிவில் சமூகம் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட பல கட்சிகளின் நடவடிக்கைகள் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே மேற்கண்டவாறு அவர் தெரிவித்துள்ளார்.
அவர் தொடர்ந்து கூறுகையில்,
தமிழர்களின் தாயகமென்பது வடகிழக்கு மாகாணங்கள் இணைந்ததே ஆகும். இவ்வாறு இருக்கும் போது தேர்தல் தொடர்பாகவும், ஏனைய விடயங்கள் தொடர்பாகவும் கிழக்கில் ஒரு நிலைப்பாட்டையும், வடக்கில் ஒரு நிலைப்பாட்டையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் உள்ள பல கட்சிகள் மேற்கொண்டு வருவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.
கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் எவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் உள்ள கட்சிகள் செயற்பட்டதோ அதே போன்ற நடைமுறைகளைத்தான் வடக்கு மாகாணத் தேர்தலிலும் கூட்டமைப்பு கட்சிகள் மேற்கொள்ள வேண்டும் என்பதே எனது நிலைப்பாடாகும்.
குறிப்பாக தமிழ் கட்சிகள் சுயேட்சைக் குழுவாக போட்டியிடுவதென்பது கிழக்கு மாகாணத்தையும், வடக்கு மாகாணத்தையும் பிரித்துப்பார்ப்பதாகவே அமையும். கூட்டமைப்பு என்பது கிழக்கில் ஒரு நிலைப்பாட்டையும், வடக்கில் இன்னுமொரு நிலைப்பாட்டையும் மேற்கொள்ள முடியாது.
தமிழர் தாயகம் என்பது வடகிழக்கு இணைந்த மாகாணங்கள் என்பதை வடக்கில் உள்ள அனைத்துக் கட்சிகளும் உணர்ந்து செயற்பட வேண்டும். கிழக்கில் தேர்தல் நடக்கும் போது ஒரு கொள்கையும், வடக்கில் தேர்தல் நடக்கும் போது இன்னுமொரு கொள்கையுமென செயற்படுவதை வடகிழக்கு தமிழர்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.
வடக்கில் தமிழ் தேசியம் பேசுகின்ற பல கட்சிகளுக்கு கிழக்கில் என்ன நடந்தாலும் அதைப்பற்றி அலட்டிக் கொள்வதில்லை மாறாக வடக்கில் தேர்தலோ அல்லது வேறு விடயங்களோ நடக்கும்போது வடக்குமாகாணம் மட்டுமே தமிழர்களின் தாயகம் என நினைத்துக் கொண்டு கூட்டங்களை நடத்துகின்றனர். முடிவுகளை எடுக்கின்றனர். ஊடகங்களுக்கு அறிக்கைகளை விடுகின்றனர். இவற்றை நாம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.
வடக்கில் உள்ளவர்களுக்காக கிழக்கில் உள்ளவர்களும் கிழக்கில் உள்ளவர்களுக்காக வடக்கில் உள்ளவர்களும் என்ற கோட்பாட்டினை இணைந்து உருவாக்கியதே தமிழ் தேசியம் எனவே தமிழ்த் தேசியம் பேசுபவர்கள் வடக்கிலும் கிழக்கிலும் ஒரே மாதிரியான நிலைப்பாட்டையே மேற்கொள்ளவேண்டும் அது தேர்தலாக இருந்தாலும் சரி வேறு விடயமாக இருந்தாலும் சரி.
வடமாகாண சபை தேர்தலுக்காக வியூகங்களை வகுக்கும் சிவில் சமூகம், கூட்டமைப்பு கட்சிகள் உள்ளிட்ட அனைவரும் கிழக்கு மாகாணத்தையும் கருத்திற் கொண்டு செயற்படவேண்டும் என்பதே எனது கருத்தாகும்.
மிக முக்கியமாக கிழக்கு மாகாணத்தில் எவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போட்டியிட்டதோ அதே போன்று வடமாகாணத்திலும் கூட்டமைப்பு போட்டியிட வேண்டும்.
மாறாக வடக்கில் உள்ள ஒரு சிலரின் கருத்துக்களை உள்வாங்கி வருகின்ற வட மாகாணத்தேர்தலில் கூட்டமைப்பு போட்டியிடுமாகயிருந்தால் அது வடகிழக்கு இணைந்ததே தமிழர் தாயகம் என்ற போக்கை நிச்சயம் மாற்றி விடும் என்றார்.
Geen opmerkingen:
Een reactie posten