[ வெள்ளிக்கிழமை, 17 மே 2013, 05:17.46 AM GMT ]
வவுனியா தாண்டிக்குளம் பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவத்தில் மூன்று பிள்ளைகளும் உயிரிழந்துள்ளன.
ஐந்தரை, மூன்றரை மற்றும் ஒன்றரை வயது பெண் குழந்தைகளே இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர்.
கிணற்றில் குதித்த பெண் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
என்ன காரணத்திற்காக இந்தப் பெண் தற்கொலை செய்து கொண்டார் என்பது தெரியவரவில்லை.
இந்த சம்பவம் குறித்து வவுனியா பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.
மீள்குடியேற்றத்தின் பின்னரும் பற்றைகளின் நடுவே வாழ்க்கை நடாத்தும் முகமாலை பொந்தோர் குடியிருப்பு மக்கள்
[ வெள்ளிக்கிழமை, 17 மே 2013, 06:50.22 AM GMT ]
அடிப்படை வசதிகள் இல்லாமல் எப்படி நாங்கள் சொந்த இடங்களுக்கு திரும்ப முடியும் என்றும் அப்பிரதேச மக்கள் கேள்வியெழுப்பியிருக்கின்றனர்.
கடந்த 1996ம் ஆண்டு கிராமத்திலிருந்து இடம்பெயர்ந்த மக்கள் மீண்டும், 01-10-2012 அன்று 90 குடும்பங்களைச் சேர்ந்த 350 பேர் மீள்குடியேற்றம் செய்யப்பட்டிருக்கின்றனர்.
எனினும் யுத்தத்திற்கு முன்னர் இருந்த தென்னம் தோப்புக்கள், மக்களுடைய வீடுகள், தோட்டங்கள் எதுவுமில்லை. இந்த நிலையில் தோட்டங்களையும், தென்னம் தோப்புக்களையும், அடிப்படை வாழ்வாதார தொழிலாக கொண்டிருந்த கிராம மக்கள் தற்போது வாழ்வாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதேபோல் உணவுத்தேவை மற்றும் இதர தேவைகளுக்கான நீர் இல்லாத நிலையில், பிரதேச சபையினால் வழங்கப்படும் குறிப்பிட்டளவு நீரையே மக்கள் நம்பியிருக்கின்றனர்.
யுத்தத்திற்கு முன்னர் மக்கள் பாவனையிலிருந்த 28 கிணறுகள் யுத்தத்தினால் முற்றாக சேதமாக்கப்பட்டுள்ளது. இவற்றை மீளமைப்பதற்கு மக்களிடம் எந்தவி தமான வசதிகளும் இல்லை. காசுக்கான வேலைத்திட்டத்தை நம்பியே கிராமத்திலுள்ள பெரும்பாலான மக்கள் தமது வாழ்வாதாரத்தை பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
இதேபோல் மீள்குடியேற்றத்தின்போது வழங்கப்பட்ட அரைநிரந்தர வீட்டுத்திட்டத்தையே மக்கள் தற்போதும் நம்பியிருக்கின்றனர். அதுவும் இதுவரை 83 குடும்பங்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டிருக்கின்றது. ஏனையவர்கள் தற்காலிகமாக அமைத்துக் கொண்ட குடிசைகளை நம்பியிருக்கின்றனர்.
இதற்குள் அடுப்பு மூட்டவோ, சமையல் செய்யவோ போதுமானளவு வசதி கிடையாது. வீட்டிற்கு வெளியே மக்கள் அடுப்பு மூட்டி சமையல் செய்கின்றார்கள். இதுவும் மழை மற்றும் காற்றுக் காலங்களில் பல அசௌகரியங்களை ஏற்படுத்துவதாக மக்கள் கூறுகின்றனர்.
மேலும் சாதாரண மருத்துவத் தேவைக்கும் கூட 5 கிலோ மீற்றர் பயணம் செய்து பளை பகுதிக்கு செல்லவேண்டியிருக்கின்றது. இவை எல்லாவற்றையும் விட கிராமத்தில் 90வீதமான குடும்பங்களுக்கு மலசலகூட வசதிகள் செய்து கொடுக்கப்படாத நிலையில் மக்கள் பற்றைகளையே நம்பியிருக்கின்றனர்.
இதுவும் மழைகாலத்தில் பல அசௌகரியங்களை ஏற்படுத்துவதாகவும், இரவு நேரங்களில் ஒரு அவசரத்திற்குப் பயன்படுத்த முடியாத நிலையில், விச ஜந்துக்களின் மிகுந்த ஆபத்திற்கு மத்தியிலேயே தாம் வாழ்ந்து கொண்டிருப்பதாக மக்கள் கூறுகின்றனர்.
கிராமத்திலிருந்து தரம் 6 ற்கு மேற்பட்ட வகுப்புக்களைச் சேர்ந்த மாணவர்கள் ஏ-9 வீதியில் நின்று பேருந்துகளில் ஏறியே பளை பாடசாலைக்குச் சென்று வருகின்றனர். சில நேரங்களில் பாடசாலை மாணவர்களை பேருந்துகள் ஏற்றுவதில்லை. இதனால் 5 கிலோ மீற்றர் நடந்து பாடசாலைக்குச் செல்ல முடியாத மாணவர்கள் மீளவும் வீடுகளுக்குத் திரும்பி விடுகின்றார்கள்.
இதேபோன்று முகமாலை வடக்கு பகுதி மட்டுமே தற்போது விடுவிக்கப்பட்டுள்ளது. ஏனைய பகுதிகளான அம்பளவளை, முகமாலை தெற்கு, மடத்தடி, சுடலைப்பிட்டி போன்ற பகுதி களில் யுத்த காலத்தில் வைக்கப்பட்ட கண்ணிவெடிகள் மற்றும் வெடிபொருட்கள் அகற்றப்படாமையினால் மக்கள் மீள்குடியேற்றம் செய்யப்படவில்லை. அந்த பகுதிகளைச் சேர்ந்த மக்கள் தொடர்ந்தும் உறவினர் நண்பர் வீடுகளிலும், வாடகை வீடுகளிலும் தங்கியிருக்கின்றனர்.
எனவே மீள்குடியேற்றி, அடிப்படை வசதிகளை மேற்கொண்டு தருமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Geen opmerkingen:
Een reactie posten