தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 18 mei 2013

கரைபுரண்டோடும் காட்டாற்று வெள்ளம்போல இளைஞர்களின் சக்தி இருக்கக் கூடாது: கே.தவராஜா


யாழ்.பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு உணர்வுபூர்வமாக அனுஷ்டிப்பு
[ வெள்ளிக்கிழமை, 17 மே 2013, 12:48.04 PM GMT ]
யாழ்.பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இன்று காலை 11 மணி தொடக்கம் 12.30 மணிவரையில் மாணவர்களால் உணர்வுபூர்வமாக நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நினைவேந்தல் நிகழ்வு யாழ்.பல்கலைக்கழக வளாகத்திற்குள் அமைந்துள்ள சிவன் ஆலயத்தின் முன்பாக கையில் தீபங்கள் ஏந்தி உணர்வு பூர்வமாகவும் மிகவும் அமைதியான முறையிலும் இடம்பெற்றுள்ளதுடன், சிவன் ஆலயத்தில் விசேட வழிபாடுகளும் நடத்தப்பட்டிருக்கின்றது.
மேலும் இந்த நிகழ்வில் பேராசிரியர்கள் முள்ளிவாய்க்கால் இன அழிப்பு தொடர்பில் நினைவுப் பேருரைகளையும் நிகழ்த்தினர்.
கடந்தாண்டு மாவீரர் தினத்தின் பின்னர் பல்கலைக்கழகத்தின் குரல்வளை நசுக்கப்பட்டிருக்கும் நிலையில் மிகவும் அமைதியாகவும், நம்பகமான மாணவர்களையும், பேராசிரியர்களையும் ஊடகவியலாளர்களையும் கொண்டு இந்த நினைவு நாள் நடைபெற்றுள்ளது.

கரைபுரண்டோடும் காட்டாற்று வெள்ளம்போல இளைஞர்களின் சக்தி இருக்கக் கூடாது: கே.தவராஜா
[ வெள்ளிக்கிழமை, 17 மே 2013, 01:53.32 PM GMT ]
கரைபுரண்டோடும் காட்டாற்று வெள்ளம்போல இளைஞர்களின் சக்தி இருக்கக் கூடாது. அது அமைதியாக ஓடிக் கொண்டிருக்கும் கங்கையைப் போல இருக்க வேண்டும் என தேசிய இளைஞர் சேவைகள் மன்ற கிழக்கு மாகாணப் பணிப்பாளர் கே.தவராஜா தெரிவித்துள்ளார்
தடுப்பின்றிச் செல்லும் அழகிய வாகனத்தின் சாரதி தன்னையும் அந்த வாகனத்தையும் அந்த வீதியால் செல்லும் மற்றவர்களையும் தனது சொத்துக்களையும் ஏனையவர்களின் உடமைகளையும் அழிப்பதற்கே பயன்படுத்துவான். தடுப்பின்றிச் செல்லும் வாகனமாக இளைஞர் சக்தி இருந்து விடக்கூடாது. வேகத்துடன் விவேகமும் இருக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

மட்டக்களப்பு - சத்துருக்கொண்டான் சர்வோதய தொழில் பயிற்சி நிலைய கேட்போர் கூடத்தில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மாவட்டப் புனரமைப்பு தொடர்பாக நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்

கிழக்கு மாகாணப் பணிப்பாளர் இங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

“இளைஞர் பாராளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்டுள்ள இளைஞர்களாகிய நீங்கள்தான் இந்த ஒட்டு மொத்த மனித சமூகத்தின் மாபெரும் சொத்து. எமது இளைஞர்கள் நல்ல அரசியல் தலைவர்களிடமிருந்த சிறந்த பாடங்களைக் கற்றுக் கொள்ள வேண்டும். மட்டக்களப்பு இளைஞர்களிடம் சிறந்த பலங்களுமுண்டு அதேவேளை வெட்கித் தலைகுனிய வேண்டிய பலவீனங்களும் உண்டு.

இந்த இரண்டுக்குமிடையே எங்களை நாங்கள் சரியாக நெறிப்படுத்திக் கொள்ள வேண்டும். இளைஞர்கள் நன்கு வழிநடத்தப்பட வேண்டும் என்பதற்காக அதற்கென்றே ஒரு அமைச்சை உருவாக்கி அவர்களை வழிநடத்த வேண்டிய பொறுப்பை தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்திடம் ஜனாதிபதியானவர்கள் ஒப்படைத்துள்ளார்கள்.

இளைஞர் சக்தி கட்டுமீறி காட்டாற்று வெள்ளம்போல கரைபுரண்டோடியதால் நாட்டில் கடந்த மூன்று தசாப்தங்களுக்கு மேலாக பாரதூரமான சம்பவங்களும் இழப்புக்களும் அநியாயங்களும் நடந்தேறிவிட்டன அதன் விளைவாக சமூக சகவாழ்வும் சீர்குலைந்திருந்தது” என்றார்.
மாவட்ட சம்மேளன உபதலைவர் எம்.எச்.எம்.நிப்ராஸ் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், ஏறாவூர் நகரசபை தவிசாளருமான அலிஸாஹிர் மௌலானா, மாவட்ட இளைஞர் சேவை உதவிப் பணிப்பாளர் எம்.எல்.எம்.என்.நைறூஸ், இளைஞர் சேவை அதிகாரிகளான எச்.அமீர், ஜே.கலாராணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

Geen opmerkingen:

Een reactie posten