தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 10 mei 2013

சர்வதேசத்தை நோக்கி நகரும் விடுதலைப் போராட்டத்தை நசுக்கும் செயற்பாடுகளில் இறங்கியுள்ள இந்திய அரசு


காதல் ஜோடிகளால் புனிதத் தன்மையை இழக்கும் கீரிமலை கடற்கரை: மக்கள் விசனம்
[ வெள்ளிக்கிழமை, 10 மே 2013, 07:45.11 AM GMT ]
காதல் ஜோடிகளின் உல்லாச புரியாக யாழ். கீரிமலை கடற்கரை மாற்றம் பெற்று வருவதாக பல்வேறு தரப்பினரும் தமது விசனத்தை வெளியிட்டுள்ளனர்.
இறந்தவர்களின் ஆத்மசாந்திப் பிரார்த்தனை நடத்தப்படும் இந்த கடற்கரையோரம், இளம் காதல் ஜோடிகளின் அநாகரிக நடவடிக்கையானது பல்வேறு தரப்பினரையும் முகம் சுழிக்க வைப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் பிதிர்க்கடன் நிறை வேற்றப்படும் கடற்கரையோரத்தில் நான்கு ஜோடிகள் அநாகரிகமான முறையில் நடந்துகொண்டமை
அவதானிக்கப்பட்டு, அங்கிருந்தவர்களால் எச்சரிக்கை செய்யப்பட்டு அனுப்பப்பட்டனர்.
இதேவேளை நகுலேஸ்வரம் ஆலயத்தில் பொலிஸ் நிலையமொன்று உள்ளபோதிலும் அருகிலுள்ள இந்த கடற்கரையோரம் காதல் ஜோடிகளின் அநாகரிக செயற்பாடு இடம்பெறுவதனை கட்டுப்படுத்த ஏன் முயற்சிக்கப் படுவதில்லையெனவும் கேள்வி எழுப்பப்படுகிறது.
புனித இடமான இப்பகுதியில் இவ்வாறான அநாகரிகமான செயற்பாடுகள் தவிர்க்கப்படல் வேண்டுமென பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுக்கின்றனர்.

சர்வதேசத்தை நோக்கி நகரும் விடுதலைப் போராட்டத்தை நசுக்கும் செயற்பாடுகளில் இறங்கியுள்ள இந்திய அரசு
[ வெள்ளிக்கிழமை, 10 மே 2013, 03:14.27 PM GMT ]
இந்தியாவிலிருந்து ஊடகவியலாளர்கள் என்ற போர்வையில் இலங்கையின் வடபகுதிக்கு இந்தியப் புலனாய்வாளர்கள் அனுப்படுகின்ற விடயங்கள் தற்போது அம்பலத்திற்கு வந்துள்ளன.
யுத்தம் முடிவுக்கு வந்த நிலையில் இலங்கை வரும் இவர்கள் தமிழ் மக்களின் பிரதிநிதிகளைச் சந்தித்து இந்திய அரசிற்கான ஆதரவை பெற்றுக்கொள்ள முயற்சிகின்றனர்.
சர்வதேச அரசியலை நோக்கி நகரும் விடுதலைப் போராட்டத்தை சிதைக்கும் இந்திய அரசின் ஒரு இரகசிய நடவடிக்கையாகவே இந்நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
தம்மை ஊடகவியலாளர்கள் மற்றும் இந்திய பல்கலைக்கழகங்களின் ஆய்வாளர்கள் என்று அடையாளப்படுத்தும் இவர்கள், விடுதலைப் போராட்டத்தை கொச்சைப் படுத்தும் செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழர்களது விடுதலைப் போராட்டத்தை 1987 ஆம் ஆண்டு காலப் பகுதி முதல் இன்றுவரை அழிக்கும் செயற்பாடுகளையே இந்தியா தொடர்ந்தும் முன்னெடுத்து வருவதாக புத்தி ஜீவிகள் சிலர் கருத்து தெரிவிக்கின்றனர்.

Geen opmerkingen:

Een reactie posten