தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 10 mei 2013

கொமன்வெல்த் மாநாட்டை பிரிட்டிஷ் ராணி புறக்கணித்திருப்பது இலங்கையின் முகத்தில் கரி: கி.வீரமணி


பொதுநலவாய மாநாடு: மகாராணியின் பயணம் ரத்து! இலங்கையின் பரப்புரைக்கு பிரான்சிஸ் போய்ல் பதிலடி‏
[ வெள்ளிக்கிழமை, 10 மே 2013, 06:46.22 AM GMT ]
இங்கிலாந்து மகாராணி வயது காரணமாகத்தான் பொதுநலவாய மாநாட்டில் கலந்து கொள்ளவில்லை என்ற  இலங்கை அரசின் பரப்புரையை பிரபல மனித உரிமைப் பேராசிரியர் பிரான்ஸிஸ் போய்ல் மறுத்துள்ளார்.
இலங்கையின் பரப்புரைக்கு ஏதுவாக இங்கிலாந்து ஊடகங்கள் ராணி கொஞ்சம் கொஞ்சமாகத் தன் பொறுப்புக்களை இளவரசரிடம் ஒப்படைத்து வருவதையும்  இலங்கை சுட்டிக் காட்டியுள்ளதை மறுத்த பேராசிரியர் போய்ல் (இல்லினாய்ஸ் பல்கலை சட்டக் கல்லூரியில் கற்ப்பிப்பவர்) ஓர் அரசியல் சட்ட அரசின் தலமையில் இருக்கும் ராணி இனப்படுகொலையாளன் ராஜபக்சவுடன் சேர்ந்து காட்சியளிக்க விரும்பவில்லை.
அதுபோன்ற கெட்ட செயல்களை இளவரசர் செய்யட்டும் என்று விட்டு விட்டார் என்பதே உண்மைக் காரணம் என்று உரைத்துள்ளார்.
ஏனென்றால் அரசியின் முடிவுக்கு காரணம் இளவரசர் எந்த நாட்டின் தலமைப் பொறுப்பிலும் இல்லை, ஆகவே அவரை அனுப்புகிறார் என்று மேலும் கூறியுள்ளார்.
ராணி ஒரு நாட்டின் தலைமைப் பொறுப்பில் மட்டுமல்ல, பொதுநலவாய நாடுகள் அனைத்துக்கும் தலைமைப் பொறுப்பில் உள்ளார், இதுவே அவரது பயண ரத்துக்கு முக்கிய காரணம்.
அதேவேளை கனடிய பிரதமர் ஸ்டீஃபன் ஹார்ப்பர் பொதுநலவாய மாநாட்டை புறக்கணிக்கப் போவது கனடாவில் விமர்சனத்தையும் வரவழைத்துள்ளது.
பிரதமரின் புறக்கணிப்பு மட்டும் பெரிதாக ஒன்றும் ஏற்படுத்தப் போவதில்லை. புறக்கணித்தால் கனடாவிலிருந்து அங்கு யாருமே போகக் கூடாது.
பிரதமர் மட்டும் போகாமல் இருப்பது பொருளற்றது என்று அங்கு விமர்சனங்கள் எழுகின்றன.
ஐ.நா. பொதுச் செயலாளர் அண்மையில் வடகொரியாவில் நிகழ்த்தப் படும் மனித உரிமை மீறல்களைப் பற்றி விசாரிக்க அவுஸ்திரேலிய நீதிபதி ஒருவரை கடந்த செவ்வாய்க்கிழமை நியமித்துள்ளதைக் பேராசிரியர் போயல் குறிப்பிட்டு இதுபோல பான் கி மூன் இலங்கை விடயத்தில் ஏன் செய்ய வில்லை என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

கொமன்வெல்த் மாநாட்டை பிரிட்டிஷ் ராணி புறக்கணித்திருப்பது இலங்கையின் முகத்தில் கரி: கி.வீரமணி
[ வெள்ளிக்கிழமை, 10 மே 2013, 03:31.13 PM GMT ]
இலங்கையில் நடைபெறும் கொமன்வெல்த் மாநாட்டில் பிரிட்டிஷ் ராணியார் பங்கேற்க மாட்டார் என்பது வரவேற்கத்தக்கது என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.


இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கை வருமாறு...

இலங்கை, போர்க் குற்றம் புரிந்த நாடு என்பது ஐ.நாவின் அறிக்கை. இலங்கை அதிபர் ராஜபக்சவின் போர்க் குற்றம், மனித உரிமை மீறல் பற்றி, ஐ.நா.வின் மனித உரிமை ஆணையம் ஜெனிவாவில் கூடிய அதன் கூட்டத்தில் இரண்டாம் முறையாக ஒரு தீர்மானத்தையும் நிறைவேற்றியுள்ளது.
முதற் கூட்டத்தில் நடுநிலை வகித்த 47 நாடுகள், இந்த முறை இலங்கைக்கு எதிராகவே அதன் வன்மைகளை உணர்ந்து தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளன.

இந்த நிலையில், வரும் நவம்பரில் (2013) நடைபெறவிருக்கும் கொமன்வெல்த் மாநாடு, இலங்கையில் நடைபெறுவது கூடாது என்ற குரல் உலகின் பல பாகங்களிலிருந்தும் கிளம்பியது. கொமன்வெல்த் அமைப்பில் 54 நாடுகள் உறுப்பினராக உள்ளன.
இதில் பெரும்பாலானாவை முன்பு பிரிட்டனின் ஆதிக்கத்தின் கீழ் இருந்த நாடுகளாகும். இலங்கையில் கொமன்வெல்த் மாநாடு நடத்தப்படக்கூடாது.
ஜனநாயகத்திற்கு விரோத, மனித உரிமைகளை மீறிய போர்க் குற்றங்கள் புரிந்த அந்நாட்டில் இந்த மாநாடு நடத்தப்படுவது முறையல்ல என்று அவுஸ்திரேலியா, கனடா போன்ற நாடுகளும், இந்தியாவில் உள்ள பெரும்பாலானோரும் வற்புறுத்தினர்.
டெசோ அமைப்பின் சார்பாக பற்பல நாட்டுத் தூதுவர்களைச் சந்தித்தும்கூட வற்புறுத்தப்பட்டது.

இந்த விவகாரத்தில் வழமைபோல மத்திய அரசு வாய்மூடி மௌனியாகவே இலங்கையை இன்னமும் நட்புறவு நாடு என்று கூறுவது, சிறிதும் ஈவு இரக்கமின்றி, தமிழர்களுக்குச் சவால் விடுவதைப் போல் இருக்கிறது!
எப்படியோ, கொமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத்திட வேண்டும் என்று அவ்வமைப்பின் பெரும்பாலான நாடுகள் முடிவு செய்து விட்டன என்பது நமது வேதனைக்குரியதாகும்!
உலக அரங்கில், தமிழினப் படுகொலை செய்த ராஜபக்ச அரசு ஏதோ பெரிய சாதனையாளர்களைப் போல கொமன்வெல்த் மாநாட்டை நடத்துவது அந்த நாடுகளுக்கே அவலமான அவமானமாகும்.
என்றாலும், இதை உணர்ந்துதான் போலும், 87 வயதான முதிர்ந்த பிரிட்டிஷ் ராணி இரண்டாம் எலிசபெத் அம்மையார் அதில் பங்கேற்கமாட்டார். அவருக்குப் பதிலாக இளவரசர் சார்ள்சை அனுப்பி வைக்க இருக்கிறார் என்று வந்துள்ள செய்தி, மனித உரிமை ஆர்வலர்களுக்கு சற்று ஆறுதல் தருகிறது!
1973ம் ஆண்டுக்குப் பின், கொமன்வெல்த் நாடுகளின் தலைவர் பிரிட்டிஷ் ராணியார் கலந்து கொள்ளாமல், பங்கேற்காமல் அதன் மாநாடு நடைபெறுவது இதுவே முதல் முறையாகும்!
ராஜரீக ரீதியில் வேறு காரணங்கள் சொல்லப்பட்டாலும், உண்மை உலகத்திற்குத் தெரியாமலா போகும்? எனவே, ராணியாரின் இந்த முடிவு வரவேற்கத்தக்க ஒன்றாகும்' இவ்வாறு வீரமணி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten